நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி
நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி | |
---|---|
பிறப்பு | [1] கிரேட் யார்மவுத், நார்ஃபோக், இங்கிலாந்து | 2 பெப்ரவரி 1763
இறப்பு | 16 பெப்ரவரி 1831 லிட்டில் மார்லோ, பக்கிங்ஹாம்ஷயர், இங்கிலாந்து | (அகவை 68)
தேசியம் | பிரித்தானிய |
பணி | குடிமுறை அரசுப்பணி அதிகாரி, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் |
அறியப்படுவது | திருக்குறளை முதன்முதலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் |
வாழ்க்கைத் துணை | ஹன்னா பட்டர்வொர்த் |
பிள்ளைகள் | சர் ரிச்சர்ட் டாரின் கிண்டர்ஸ்லி மற்றும் நேதனியல் வில்லியம் கிண்டர்ஸ்லி |
நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி (2 பிப்ரவரி 1763 – 16 பிப்ரவரி 1831) பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்குப் பணியாற்றிய ஆங்கிலேய குடிமுறை அரசுப்பணி அதிகாரியாவார். இவர் 1794-இல் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல் மொழிபெயர்ப்பாளராக அறியப்படுகிறார்.[2]
வாழ்க்கைக் குறிப்பு
நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி இங்கிலாந்தின் நார்ஃபோக் மாகாணத்திலுள்ள கிரேட் யர்மவுத்தில் நேதனியல் கிண்டர்ஸ்லி மற்றும் ஜெமிமா விக்ஸ்டெட் தம்பதியருக்குப் பிறந்தார். இவர் ஹன்னா பட்டர்வொர்த் என்ற பெண்மணியை ஜூலை 3, 1786-இல் மணந்தார். இவரது திருமணம் இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள தங்கர்நாயக்புரம் என்ற ஊரில் நடந்தது.[3] இவர்களுக்கு சர் ரிச்சர்ட் டாரின் கிண்டர்ஸ்லி (பிறப்பு: 5 அக்டோபர் 1792; இறப்பு: 22 அக்டோபர் 1879)[4] மற்றும் நேதனியல் வில்லியம் கிண்டர்ஸ்லி (பிறப்பு: 1794; இறப்பு: 3 டிசம்பர் 1844)[5] என்ற இரு மகன்கள் இருந்தனர்.
கிண்டர்ஸ்லி 18 பிப்ரவரி 1831 அன்று தனது 68-வது வயதில் இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷயர் மாகாணத்தில் உள்ள லிட்டில் மார்லோ என்ற ஊரில் இறந்தார்.[6]
படைப்புகள்
நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி 1794-ஆம் ஆண்டில் தனது "ஸ்பெசிமன்ஸ் ஆஃப் ஹிந்து லிட்டரேச்சர்" (Specimens of Hindoo Literature) என்ற நூலில் "வள்ளுவர் குறளின் பகுதிகள் அல்லது, ஞானக் பெருங்கடல்" ("Extracts from the Teroo-Vaulaver Kuddul, or, The Ocean of Wisdom") என்ற அத்தியாயத்தில் முதன்முறையாக திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இதில் குறளின் முதற்பகுதியான அறத்துப்பாலின் முதல் சில அதிகாரங்களை மட்டுமே மொழிபெயர்த்து இருந்தார்.[7]
மேற்கோள்கள்
- ↑ "Place Index - 713 (Tangernaikpuram)". The Peerage. n.d.. http://www.thepeerage.com/pd713.htm#i31584.
- ↑ Kindersley, Nathaniel Edward (1794). "Specimens of Hindoo Literature: Consisting of Translations, from the Tamoul Language, of Some Hindoo Works of Morality and Imagination, with Explanatory Notes". London: W. Bulmer and Company. https://books.google.com/books?id=aVsUAAAAQAAJ.
- ↑ "Nathaniel Edward Kindersley". Geni.com. 2016. https://www.geni.com/people/Nathaniel-Kindersley/6000000039074716891.
- ↑ "Kindersley, Richard Torin (KNDY809RT)". A Cambridge Alumni Database. University of Cambridge.
- ↑ "Kindersley, Nathaniel William (KNDY811NW)". A Cambridge Alumni Database. University of Cambridge.
- ↑ Lundy, Darryl (2015). "The Peerage: A genealogical survey of the peerage of Britain as well as the royal families of Europe (Person Page - 56729)". Darryl Lundy, Wellington, New Zealand. http://www.thepeerage.com/p56729.htm#i567284.
- ↑ Kindersley, N. E. (1794). "Specimens Of Hindu Literature". https://archive.org/details/in.ernet.dli.2015.106452.
மேலும் பார்க்க
- Henry Davidson Love. (1913). Indian Records Series Vestiges of Old Madras 1640-1800 (4 vols.). New Delhi: Mittal Publications.
- N. E. Kindersley. (1794). Specimens of Hindoo Literature: Consisting of Translations, from the Tamoul Language, of Some Hindoo Works of Morality and Imagination, with Explanatory Notes. London: W. Bulmer and Company (sold by F. Wingrave, successor to Mr. Nourse). 335 pp.