உணர்ச்சி
உணர்ச்சி (Emotion) என்பது மனநல செயல்பாட்டு அனுபவம் ஆகும். இது தீவிர உயர் மட்ட இன்பம்[1] அல்லது அதிருப்தி[2] ஆகியவற்றால் தனித்தன்மையளித்து வகைப்படுத்தப்படும் செயல் ஆகும். விஞ்ஞான எண்ணப் பரிமாறல்கள் மற்றும் அலசல்கள் ஒரு வரையறையை எட்டாமல், வேறு அர்த்தங்களுக்கு இழுத்துச் சென்றுள்ளன. உணர்ச்சி எனும் கூறு, பெரும்பாலும் மனநிலை, குணாம்சம், ஆளுமை, ஒழுங்கமைதி மற்றும் ஆர்வமூட்டல்[3] ஆகியவற்றுடன் பிணைந்துள்ளது.
உணர்வு நம்மில் ஐம்புலன்களால் வழங்கப் பெறும் பெருமை, வெட்கம், கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளும், மூளையில் பொங்கி வழியும் சிந்தனைகளும், வழக்கமாக இலட்சிய, ஆன்மீகப் புலப்பாடுகள், அல்லது உணர்வுக்குறிய புலப்பாடுகள், மனிதர் உணரும் சிந்தனை அல்லது மன அல்லது உடல் நிலைகளை "உணர்ச்சி" எனலாம். உணர்ச்சி என்றால் என்ன என்பதை நோக்கிய எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது வரைவிலக்கணம் இன்னும் இல்லை.
உணர்ச்சி (Emotion) என்பது மனநல செயல்பாட்டு அனுபவம் ஆகும். இது தீவிர உயர் மட்ட இன்பம்[4] அல்லது அதிருப்தி[2] ஆகியவற்றால் தனித்தன்மையளித்து வகைப்படுத்தப்படும் செயல் ஆகும். விஞ்ஞான எண்ணப் பரிமாறல்கள் மற்றும் அலசல்கள் ஒரு வரையறையை எட்டாமல், வேறு அர்த்தங்களுக்கு இழுத்துச் சென்றுள்ளன. உணர்ச்சி எனும் கூறு, பெரும்பாலும் மனநிலை, குணாம்சம், ஆளுமை, ஒழுங்கமைதி மற்றும் ஆர்வமூட்டல்[5] ஆகியவற்றுடன் பிணைந்துள்ளது.
உணர்வு நம்மில் ஐம்புலன்களால் வழங்கப் பெறும் பெருமை, வெட்கம், கோபம், மகிழ்ச்சி போன்ற உணர்வுகளும், மூளையில் பொங்கி வழியும் சிந்தனைகளும், வழக்கமாக இலட்சிய, ஆன்மீகப் புலப்பாடுகள், அல்லது உணர்வுக்குறிய புலப்பாடுகள், மனிதர் உணரும் சிந்தனை அல்லது மன அல்லது உடல் நிலைகளை "உணர்ச்சி" எனலாம். உணர்ச்சி என்றால் என்ன என்பதை நோக்கிய எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொது வரைவிலக்கணம் இன்னும் இல்லை.
உணர்ச்சிசார் கருத்துகள்
- உணர்ச்சிகள் சிக்கலானவை
- நடத்தையை பாதிக்கக்கூடிய உடல் மற்றும் உளவியல் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு நிலையே உணர்ச்சி எனப்படும். இது ஒரு சிக்கலான நிலையாகும்.[2]
- உணர்ச்சியின் அமைப்பானது நரம்பு மண்டலத்தின் விழிப்புடன் தொடர்புடையது
- உணர்ச்சி என்பது நடத்தை போக்குடன் தொடர்புடையது.
- புறமுகர்கள் சமூகமாக இருக்கவும் தம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் ஆர்வம் காட்டுவர்
- அகமுகர்கள் சமூகத்தை விட்டு விலகி இருப்பர். தங்கள் உணர்வுகளை மூடிமறைப்பர்
- நேர்மறை அல்லது எதிர்மறை செயல்கள் அனைத்திலும் உணர்ச்சிகள் பெரும் உந்து சக்தியாகும்.[6]
- உணர்ச்சிகள் இயல்பான சக்திகள் அல்ல (சில சமயங்களில்)
- உணர்வுகள் பல்வேறு கூறுகளின் தொகுப்பு
- உணர்ச்சிகளின் கூறுகள்: ஊக்கம், உணர்வு, நடத்தை, உடலியல் மாற்றங்கள், போன்றவை
- மேற்காண் கூறுகளில் எதுவும் உணர்ச்சி இல்லை
- மேற்காண் கூறுகளில் எதுவும் உணர்வியாகவும் இல்லை[7]
- உடற்கூறியல் கூறுகள், கலாச்சார அல்லது உணர்ச்சி அடையாளங்கள் (கோபம், ஆச்சரியம், முதலியன), உணர்ச்சியற்ற உடல் நடவடிக்கைகள், சூழ்நிலைகள், சூழல்களின் மதிப்பீடு ஆகியவற்றை உள்ளடக்கியவை உணர்ச்சிகள்- பெக்கி தோய்ட்ஸ்[8]
நிகழ்கால ஆய்வுகள்:
உணர்ச்சி கருத்துக்களில் தற்போது ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டிய பகுதிகள்:
- உணர்ச்சிகளை உற்சாகப்படுத்தும் பகுதிகள்
- உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கான பொருட்கள்
கூடுதலாக பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியல் மற்றும் வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு ஆகியவற்றின் மூலம், மூளையில் உள்ள செயல்திறன் செயல்முறைகளை ஆய்வு செய்ய முடியும்.[9]
கடந்த காலங்களில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு மேற்கொண்ட தழுவல் நடத்தைகளை ஊக்குவிப்பதில் உணர்ச்சிகள் முக்கிய பங்களிக்கின்றன. உணர்வுகள் குறிப்பிடத்தக்க உள் மற்றும் வெளிப்புற நிகழ்வுகளுக்கு பிரதிபலிப்பாகும்.[10]
சொற்பிறப்பியல், இயல் வரையறைகள், மற்றும் வேறுபாடுகளைக் கண்டறிதல்
"Emotion" (உணர்ச்சி) என்ற சொல் 1579 ஆம் ஆண்டுக்கு முற்பட்டது. இது umouvoir என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதற்கு "தூண்டுதல்" என்று பொருள். கல்வி விவாதத்தில் உணர்ச்சி என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. இது அதிகமான விருப்பு, உணர்ச்சிவயக் கருத்து, உணர்ச்சி தாக்குதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தனிச் சொல் ஆகும்.[11] ஓர் அகராதிப்படி, இந்த வார்த்தையின் ஆரம்பகால முன்னோடிகள், பெரும்பாலும் மொழியின் தோற்றங்களையே சார்ந்து இருக்கிறார்கள்.[12] நவீனயுகத்தில், உணர்வு என்ற வார்த்தை பலபடித்தானதாக உள்ளது.[13] யாரோ அல்லது ஏதாவது ஒன்றோ இயக்கும் தீவிர உணர்வுகளைக் குறிக்க உணர்ச்சி என்ற வார்த்தை சில இடங்களில் பயன்பாடுத்தப்பட்டு வருகிறது.[14] உணர்ச்சிகள் பற்றிய பிற கருத்துக்கள் பின் வருமாறு: உணர்ச்சிகள் லேசானவை (எரிச்சலூட்டப்பட்ட அல்லது உள்ளடக்கம் போன்றவை). இவற்றின் இயல் நிலைகள் எந்த விஷயத்தையும் (கவலை மற்றும் மனத் தளர்ச்சி போன்றவை) குறிப்பாகக் குறிக்க பயன்படுத்தப்படுவதில்லை. உணர்ச்சிகள் பற்றிய தொடர் ஆராய்ச்சி, உணர்ச்சிகள் என்ற வார்த்தையை, தினசரி மொழியாக அர்த்தப்படித்துகிறது[13] ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் "உணர்ச்சிகள்" என்ற கருத்தைக் குறிக்க ஒரேமாதிரியான வார்த்தைகள் இல்லை என்று ஓர் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு கூறுகிறது.[15][16] உணர்ச்சிகள் கால அளவில் சுருக்கமாக உள்ளன. அவை வாய்மொழி, உடலியல், நடத்தை மற்றும் நரம்பியல் வழிமுறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்த துலங்கல்களின் தொகுப்பாக உள்ளன. மனநல மருத்துவர் மைக்கேல் சி. கிரஹாம் "அணைத்து உணர்ச்சிகளும், ஊக்கமிகுதியினால் ஏற்படும் உணர்வின் தொடர்ச்சியாகும்" என விவரிக்கிறார்.[17] நடுக்கம், கிலி, பயங்கரம், பயம் அல்லது அவமானம் ஆகியவற்றின் காரணமாக, எளிமையான சங்கடத்திலிருந்து, தடுமாற்றம், மனக்கலவரம் போன்ற இக்கட்டான சூழலுக்கு வரக்கூடும்.[18] உணர்ச்சிகளின் பாரம்பரியமானது, உயிரியல் ரீதியாக பெறப்பட்டதாக இருக்கலாம் அல்லது பரிணாமத்தின் விளைவாக ஏற்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஏனென்றால், இவை, நமது முன்னோர்கள் எதிர்கொண்ட பண்டைய மற்றும் தொடர்ச்சியான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப் பெரிதும் பயன்பட்டன.[19] மன நிலைகள் உணர்ச்சிகளைக் காட்டிலும் குறைந்த செறிவுடைய மனவெழுச்சிகளைக் கொண்டுள்ளன. இவை, பெரும்பாலும் சூழிசைவு சார்ந்த ஆதாரங்களால் ஊக்கப்படுத்தப்படுவதில்லை.[14] உவ்ர்ச்சி சார்ந்த நரம்பியல் விஞ்ஞானத்திற்குள் இது போன்ற பல ஒத்த அமைப்புகள் உள்ளன. அவற்றிலிருந்து மனவெழுச்சிகளை எளிதில் வேறுபடுத்தப்படலாம்.[20] எதிர்மறையானவற்றுடன் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய நேர் அல்லது எதிர் உணர்வுகளுக்கும், மனவெழுச்சிகளுக்கும் இடையே தொடர்புகள் உள்ளன. இந்த கருத்துக்கள் மனவெழுச்சிகளின் மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் வகைப்படுத்தல் மூலம் விவரிக்கப்பட்டுள்ளன. கிரஹாம் என்பவர் செயல்பாட்டு அல்லது செயலிழப்பு மனவெழுச்சிகளை வேறுபடுத்தி உள்ளார். அனைத்து செயல்பாட்டு மனவெழுச்சிகளும் நன்மைகளையே வெளிப்பாடாகக் கொடுக்கும் என்று வாதிடுகிறார்.[21]
கூறுகள்
ஷெரெரின்(Scherer)[22] உணர்ச்சி கூறுகள் மாதிரியில் உணர்வுகள், ஐந்து முக்கிய கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கூறுகள் செயலாக்க முன்னோக்கின் அடிப்படையில் நோக்கும்போது,
- உணர்ச்சி அனுபவங்கள் அனைத்தும் ஒரு குறுகிய காலத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்டு, ஒத்திசைக்கப்படுதல் அவசியம்.
- இவை அனைத்தும் மதிப்பீட்டு செயன்முறைகளால் உந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
சில உளவியல் கோட்பாட்டாளர்கள், மனவெழுச்சிகளும், அறிவாற்றலும், தனித்தனியாக இருப்பதாகவும், ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தும் அமைப்புகளாக இருப்பதாகவும் கருதுகின்றனர். அறிவாற்றல் மதிப்பீட்டு அமைப்புகள், கூறு செயலாக்க அமைப்பில் மனவெழுச்சிகளை வகைப்படுத்தப்படுகின்றன. உணர்வுசார் கருப்பொருளை வகைப்படுத்தும் அத்தியாயத்தில், ஒரு தொகுப்பு அல்லது செயலில், ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்புகளை விவரிக்கும் நிகழ்வுகளின் ஒரு தொடர்வரிசைச் சீர்மையாக உள்ளது தெளிவாகிறது. இருப்பினும் அவற்றுக்கிடையே சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உள்ளன.
- அறிவாற்றல் மதிப்பீடு: நிகழ்வுகள் மற்றும் பொருள்கள் பற்றிய மதிப்பீட்டை வழங்குகிறது.
- உடல் அறிகுறிகள்: உணர்ச்சி அனுபவத்தின் அடிப்படையிலான உடலியல் வெளிப்பாட்டுக் கூறுகள்
- செயல்படும் போக்குகள்: ஊக்குவிப்பு திசையில் உடல் இயக்கத் துலங்கல்களை ஏற்படுத்துதல்.
- வெளிப்பாடு: முகம் மற்றும் குரலில் ஏற்படும் வெளிப்பாடு எப்பொழுதும் உணர்வுபூர்வமானதாக உள்ளது. இது செயல்களின் நேர், எதிர்விளைவுகளையும் மற்றும் நோக்கத்தையும் வெளிப்படுத்தும்.
- உணர்வுகள்: ஒரு நிகழ்வு, முடிந்தபின் உணர்வு ரீதியாகத் தோன்றும் நிலைமையின் அகநிலை அனுபவம்.
வகைப்பாடு
உணர்ச்சி தொடர் நிகழ்வுகளுக்கும், மற்றும் உணர்ச்சி ஒழுங்கமைதிக்கும் இடையில் குறிப்பிடத்தக்க ஒரு வேறுபாடு உருவாக்கப்படலாம். உணர்வுக் குறைபாடுகள் நடத்தைப் பண்புகளுக்கு ஒப்பானவையாகும். சில உளவியல் கருத்தாளர்கள், உணர்ச்சிகளைச் சார்ந்து சில பொதுவான " உளப்பாங்கு நிலை" கருத்துகளைக் கொண்டுள்ளனர். அந்த உளப்பாங்கு நிலையில், இன்பம், வலி, ஊக்குவிப்பு நிலைகள் (உதாரணமாக, பட்டினி, உந்துதலால் தோன்றும் அறிவார்வம்), மனநிலைகள், இடர்பாடுகள், ஒழுங்கமைதி நிலைகள், தனிப்பண்புத் திறம் மற்றும் பண்புக்கூறுகள் போன்ற உணர்ச்சிசார் நிகழ்வுகள் அடங்கும்.[23]
முக்கியமான இரண்டு அடிப்படை கருத்துக் கூறுகளின்படி, உணர்ச்சிகளின் வகைப்பாடு ஆராயப்படுகிறது.
முதல் கண்ணோட்டம்: உணர்ச்சிகள் தனித்துவமானவை. தனித்தனியானவை. தனித்தியங்கக்கூடியவை. அடிப்படையில் வேறுபட்ட அமைப்புகளாக இருக்கின்றன.
முதல் கண்ணோட்டம்: குழுவில் ஒரு குறிப்பிட்ட பரிமாண அடிப்படையில் உணர்ச்சிகள் வகைப்படுத்தப்படலாம்.
உணர்ச்சிகள் பட்டியல்
-
- அன்பு - Love
- பாசம் - Affection
- கோபம் - Anger
- சினம் - wrath
- ஆனந்தம் - Joy
- இன்பம், மகிழ்ச்சி - Happiness
- துக்கம் - sorrow
- ஆசை - desire
- பொறாமை - Jealousy, Envy
- வெறுப்பு - Hate, Disgust
- விரக்தி - Anguish
- அமைதி - Peace
- பயம் - Fear
- கவலை - worry
- எதிர்பார்ப்பு - Anticipation, Hope,
- ஏமாற்றம் - disappointment
- ஆச்சரியம் - Surprise
- வெட்கம் - Shyness
- பரிவு, இரக்கம் - Pity
- காதல் - Love
- காமம் - Sexual Attraction
- எரிச்சல் - Irritation or discomfort
- சலிப்பு - Boredom
- குற்றுணர்வு - Guilt
- மனவுளைச்சல் அல்லது மன அழுத்தம் - Stress
- ஈர்ப்பு - attraction
- பெருமை - pride
- உணர்வின்மை - apathy
- நம்பிக்கை - hope
- மனக்கலக்கம்
- தவிப்பு - Anxiety
- பற்று - Attachment
- அவநம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை - lack of trust
- சோம்பல் - lethargy
- அதிர்ச்சி - surprise or shock
- மன நிறைவு அல்லது திருப்தி - satisfaction or contentment
- தனிமை - loneliness
- அவா - desire
- வலி - pain
- அலட்சியம் - carelessness or negligence
- திகில் - terror
- பீதி - phobia or extreme fear
மேற்கோள்கள்
- ↑ Cabanac, Michel (2002). "What is emotion?" Behavioural Processes 60(2): 69-83. "[E]motion is any mental experience with high intensity and high hedonic content (pleasure/displeasure)."
- ↑ 2.0 2.1 2.2 Scirst=Daniel L. (2011). Psychology Second Edition. 41 Madison Avenue, New York, NY 10010: Worth Publishers. பக். 310. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4292-3719-2.
- ↑ "Theories of Emotion". Psychology.about.com. 13 September 2013 இம் மூலத்தில் இருந்து 17 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131017213239/http://psychology.about.com/od/psychologytopics/a/theories-of-emotion.htm. பார்த்த நாள்: 11 November 2013.
- ↑ Cabanac, Michel (2002). "What is emotion?" Behavioural Processes 60(2): 69-83. "[E]motion is any mental experience with high intensity and high hedonic content (pleasure/displeasure)."
- ↑ "Theories of Emotion". Psychology.about.com. 13 September 2013 இம் மூலத்தில் இருந்து 17 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131017213239/http://psychology.about.com/od/psychologytopics/a/theories-of-emotion.htm. பார்த்த நாள்: 11 November 2013.
- ↑ Gaulin, Steven J. C. and Donald H. McBurney. Evolutionary Psychology. Prentice Hall. 2003. ISBN 978-0-13-111529-3, Chapter 6, p 121-142.
- ↑ Barrett, L.F. and Russell, J.A. The psychological construction of emotion. Guilford Press. 2015. ISBN 978-1462516971.
- ↑ Thoits, P. A. (1989). "The sociology of emotions". Annual Review of Sociology 15: 317–342. doi:10.1146/annurev.soc.15.1.317. https://archive.org/details/sim_annual-review-of-sociology_1989_15/page/317.
- ↑ Cacioppo, J.T & Gardner, W.L (1999). Emotion. "Annual Review of Psychology", 191.
- ↑ Schacter, D. L., Gilbert, D. T., Wegner, D. M., & Hood, B. M. (2011). Psychology (European ed.). Basingstoke: Palgrave Macmillan.
- ↑ Dixon, Thomas. From passions to emotions: the creation of a secular psychological category. Cambridge University Press. 2003. ISBN 978-0521026697. link.
- ↑ Merriam-Webster (2004). The Merriam-Webster dictionary (11th ed.). Springfield, MA: Author.
- ↑ 13.0 13.1 Fehr, B.; Russell, J.A. (1984). "Concept of Emotion Viewed from a Prototype Perspective". Journal of Experimental Psychology, General 113 (3): 464–486. doi:10.1037/0096-3445.113.3.464. https://archive.org/details/sim_journal-of-experimental-psychology-general_1984-09_113_3/page/464.
- ↑ 14.0 14.1 Hume, D. Emotions and Moods. Organizational Behavior, 258-297.
- ↑ Russell, J.A. (1991). "Culture and the Categorization of Emotion". Psychological Bulletin 110 (3): 426–450. doi:10.1037/0033-2909.110.3.426. பப்மெட்:1758918. https://archive.org/details/sim_psychological-bulletin_1991-11_110_3/page/426.
- ↑ Wierzbicka, Anna. Emotions across languages and cultures: diversity and universals. Cambridge University Press. 1999.
- ↑ Graham, Michael C. (2014). Facts of Life: ten issues of contentment. Outskirts Press. பக். 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4787-2259-5.
- ↑ Graham, Michael C. (2014). Facts of Life: Ten Issues of Contentment. Outskirts Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4787-2259-5.
- ↑ Ekman, Paul (1992). "An argument for basic emotions". Cognition & Emotion 6 (3): 169–200. doi:10.1080/02699939208411068.
- ↑ Fox 2008, ப. 16–17.
- ↑ Graham, Michael C. (2014). Facts of Life: ten issues of contentment. Outskirts Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4787-2259-5.
- ↑ Scherer, K. R. (2005). "What are emotions? And how can they be measured?". Social Science Information 44 (4): 693–727. doi:10.1177/0539018405058216.
- ↑ Schwarz, N. H. (1990). Feelings as information: Informational and motivational functions of affective states. Handbook of motivation and cognition: Foundations of social behavior, 2, 527-561.
வெளி இணைப்புகள்
நிகழ்கால ஆய்வுகள்:
உணர்ச்சி கருத்துக்களில் தற்போது ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டிய பகுதிகள்:
- உணர்ச்சிகளை உற்சாகப்படுத்தும் பகுதிகள்
- உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கான பொருட்கள்
கூடுதலாக பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியல் மற்றும் வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு ஆகியவற்றின் மூலம், மூளையில் உள்ள செயல்திறன் செயல்முறைகளை ஆய்வு செய்ய முடியும்.[1]
கடந்த காலங்களில் மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு மேற்கொண்ட தழுவல் நடத்தைகளை ஊக்குவிப்பதில் உணர்ச்சிகள் முக்கிய பங்களிக்கின்றன. உணர்வுகள் குறிப்பிடத்தக்க உள் மற்றும் வெளிப்புற நிகழ்வுகளுக்கு பிரதிபலிப்பாகும்.[2]
சொற்பிறப்பியல், இயல் வரையறைகள், மற்றும் வேறுபாடுகளைக் கண்டறிதல்
"Emotion" (உணர்ச்சி) என்ற சொல் 1579 ஆம் ஆண்டுக்கு முற்பட்டது. இது umouvoir என்ற பிரெஞ்சு வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதற்கு "தூண்டுதல்" என்று பொருள். கல்வி விவாதத்தில் உணர்ச்சி என்பது அறிமுகப்படுத்தப்பட்டது. இது அதிகமான விருப்பு, உணர்ச்சிவயக் கருத்து, உணர்ச்சி தாக்குதல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தனிச் சொல் ஆகும்.[3] ஓர் அகராதிப்படி, இந்த வார்த்தையின் ஆரம்பகால முன்னோடிகள், பெரும்பாலும் மொழியின் தோற்றங்களையே சார்ந்து இருக்கிறார்கள்.[4] நவீனயுகத்தில், உணர்வு என்ற வார்த்தை பலபடித்தானதாக உள்ளது.[5] யாரோ அல்லது ஏதாவது ஒன்றோ இயக்கும் தீவிர உணர்வுகளைக் குறிக்க உணர்ச்சி என்ற வார்த்தை சில இடங்களில் பயன்பாடுத்தப்பட்டு வருகிறது.[6] உணர்ச்சிகள் பற்றிய பிற கருத்துக்கள் பின் வருமாறு: உணர்ச்சிகள் லேசானவை (எரிச்சலூட்டப்பட்ட அல்லது உள்ளடக்கம் போன்றவை). இவற்றின் இயல் நிலைகள் எந்த விஷயத்தையும் (கவலை மற்றும் மனத் தளர்ச்சி போன்றவை) குறிப்பாகக் குறிக்க பயன்படுத்தப்படுவதில்லை. உணர்ச்சிகள் பற்றிய தொடர் ஆராய்ச்சி, உணர்ச்சிகள் என்ற வார்த்தையை, தினசரி மொழியாக அர்த்தப்படித்துகிறது[5] ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் "உணர்ச்சிகள்" என்ற கருத்தைக் குறிக்க ஒரேமாதிரியான வார்த்தைகள் இல்லை என்று ஓர் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு கூறுகிறது.[7][8] உணர்ச்சிகள் கால அளவில் சுருக்கமாக உள்ளன. அவை வாய்மொழி, உடலியல், நடத்தை மற்றும் நரம்பியல் வழிமுறைகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்த துலங்கல்களின் தொகுப்பாக உள்ளன. மனநல மருத்துவர் மைக்கேல் சி. கிரஹாம் "அணைத்து உணர்ச்சிகளும், ஊக்கமிகுதியினால் ஏற்படும் உணர்வின் தொடர்ச்சியாகும்" என விவரிக்கிறார்.[9] நடுக்கம், கிலி, பயங்கரம், பயம் அல்லது அவமானம் ஆகியவற்றின் காரணமாக, எளிமையான சங்கடத்திலிருந்து, தடுமாற்றம், மனக்கலவரம் போன்ற இக்கட்டான சூழலுக்கு வரக்கூடும்.[10] உணர்ச்சிகளின் பாரம்பரியமானது, உயிரியல் ரீதியாக பெறப்பட்டதாக இருக்கலாம் அல்லது பரிணாமத்தின் விளைவாக ஏற்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஏனென்றால், இவை, நமது முன்னோர்கள் எதிர்கொண்ட பண்டைய மற்றும் தொடர்ச்சியான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கப் பெரிதும் பயன்பட்டன.[11] மன நிலைகள் உணர்ச்சிகளைக் காட்டிலும் குறைந்த செறிவுடைய மனவெழுச்சிகளைக் கொண்டுள்ளன. இவை, பெரும்பாலும் சூழிசைவு சார்ந்த ஆதாரங்களால் ஊக்கப்படுத்தப்படுவதில்லை.[6] உவ்ர்ச்சி சார்ந்த நரம்பியல் விஞ்ஞானத்திற்குள் இது போன்ற பல ஒத்த அமைப்புகள் உள்ளன. அவற்றிலிருந்து மனவெழுச்சிகளை எளிதில் வேறுபடுத்தப்படலாம்.[12] எதிர்மறையானவற்றுடன் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய நேர் அல்லது எதிர் உணர்வுகளுக்கும், மனவெழுச்சிகளுக்கும் இடையே தொடர்புகள் உள்ளன. இந்த கருத்துக்கள் மனவெழுச்சிகளின் மாறுபட்ட கருத்துக்கள் மற்றும் வகைப்படுத்தல் மூலம் விவரிக்கப்பட்டுள்ளன. கிரஹாம் என்பவர் செயல்பாட்டு அல்லது செயலிழப்பு மனவெழுச்சிகளை வேறுபடுத்தி உள்ளார். அனைத்து செயல்பாட்டு மனவெழுச்சிகளும் நன்மைகளையே வெளிப்பாடாகக் கொடுக்கும் என்று வாதிடுகிறார்.[13]
கூறுகள்
ஷெரெரின்(Scherer)[14] உணர்ச்சி கூறுகள் மாதிரியில் உணர்வுகள், ஐந்து முக்கிய கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. கூறுகள் செயலாக்க முன்னோக்கின் அடிப்படையில் நோக்கும்போது,
- உணர்ச்சி அனுபவங்கள் அனைத்தும் ஒரு குறுகிய காலத்திற்கு ஒருங்கிணைக்கப்பட்டு, ஒத்திசைக்கப்படுதல் அவசியம்.
- இவை அனைத்தும் மதிப்பீட்டு செயன்முறைகளால் உந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
சில உளவியல் கோட்பாட்டாளர்கள், மனவெழுச்சிகளும், அறிவாற்றலும், தனித்தனியாக இருப்பதாகவும், ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தும் அமைப்புகளாக இருப்பதாகவும் கருதுகின்றனர். அறிவாற்றல் மதிப்பீட்டு அமைப்புகள், கூறு செயலாக்க அமைப்பில் மனவெழுச்சிகளை வகைப்படுத்தப்படுகின்றன. உணர்வுசார் கருப்பொருளை வகைப்படுத்தும் அத்தியாயத்தில், ஒரு தொகுப்பு அல்லது செயலில், ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்புகளை விவரிக்கும் நிகழ்வுகளின் ஒரு தொடர்வரிசைச் சீர்மையாக உள்ளது தெளிவாகிறது. இருப்பினும் அவற்றுக்கிடையே சர்ச்சைக்குரிய கருத்துக்கள் உள்ளன.
- அறிவாற்றல் மதிப்பீடு: நிகழ்வுகள் மற்றும் பொருள்கள் பற்றிய மதிப்பீட்டை வழங்குகிறது.
- உடல் அறிகுறிகள்: உணர்ச்சி அனுபவத்தின் அடிப்படையிலான உடலியல் வெளிப்பாட்டுக் கூறுகள்
- செயல்படும் போக்குகள்: ஊக்குவிப்பு திசையில் உடல் இயக்கத் துலங்கல்களை ஏற்படுத்துதல்.
- வெளிப்பாடு: முகம் மற்றும் குரலில் ஏற்படும் வெளிப்பாடு எப்பொழுதும் உணர்வுபூர்வமானதாக உள்ளது. இது செயல்களின் நேர், எதிர்விளைவுகளையும் மற்றும் நோக்கத்தையும் வெளிப்படுத்தும்.
- உணர்வுகள்: ஒரு நிகழ்வு, முடிந்தபின் உணர்வு ரீதியாகத் தோன்றும் நிலைமையின் அகநிலை அனுபவம்.
வகைப்பாடு
உணர்ச்சி தொடர் நிகழ்வுகளுக்கும், மற்றும் உணர்ச்சி ஒழுங்கமைதிக்கும் இடையில் குறிப்பிடத்தக்க ஒரு வேறுபாடு உருவாக்கப்படலாம். உணர்வுக் குறைபாடுகள் நடத்தைப் பண்புகளுக்கு ஒப்பானவையாகும். சில உளவியல் கருத்தாளர்கள், உணர்ச்சிகளைச் சார்ந்து சில பொதுவான " உளப்பாங்கு நிலை" கருத்துகளைக் கொண்டுள்ளனர். அந்த உளப்பாங்கு நிலையில், இன்பம், வலி, ஊக்குவிப்பு நிலைகள் (உதாரணமாக, பட்டினி, உந்துதலால் தோன்றும் அறிவார்வம்), மனநிலைகள், இடர்பாடுகள், ஒழுங்கமைதி நிலைகள், தனிப்பண்புத் திறம் மற்றும் பண்புக்கூறுகள் போன்ற உணர்ச்சிசார் நிகழ்வுகள் அடங்கும்.[15]
முக்கியமான இரண்டு அடிப்படை கருத்துக் கூறுகளின்படி, உணர்ச்சிகளின் வகைப்பாடு ஆராயப்படுகிறது.
முதல் கண்ணோட்டம்: உணர்ச்சிகள் தனித்துவமானவை. தனித்தனியானவை. தனித்தியங்கக்கூடியவை. அடிப்படையில் வேறுபட்ட அமைப்புகளாக இருக்கின்றன.
முதல் கண்ணோட்டம்: குழுவில் ஒரு குறிப்பிட்ட பரிமாண அடிப்படையில் உணர்ச்சிகள் வகைப்படுத்தப்படலாம்.
உணர்ச்சிகள் பட்டியல்
-
- அன்பு - Love
- பாசம் - Affection
- கோபம் - Anger
- சினம் - wrath
- ஆனந்தம் - Joy
- இன்பம், மகிழ்ச்சி - Happiness
- துக்கம் - sorrow
- ஆசை - desire
- பொறாமை - Jealousy, Envy
- வெறுப்பு - Hate, Disgust
- விரக்தி - Anguish
- அமைதி - Peace
- பயம் - Fear
- கவலை - worry
- எதிர்பார்ப்பு - Anticipation, Hope,
- ஏமாற்றம் - disappointment
- ஆச்சரியம் - Surprise
- வெட்கம் - Shyness
- பரிவு, இரக்கம் - Pity
- காதல் - Love
- காமம் - Sexual Attraction
- எரிச்சல் - Irritation or discomfort
- சலிப்பு - Boredom
- குற்றுணர்வு - Guilt
- மனவுளைச்சல் அல்லது மன அழுத்தம் - Stress
- ஈர்ப்பு - attraction
- பெருமை - pride
- உணர்வின்மை - apathy
- நம்பிக்கை - hope
- மனக்கலக்கம்
- தவிப்பு - Anxiety
- பற்று - Attachment
- அவநம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை - lack of trust
- சோம்பல் - lethargy
- அதிர்ச்சி - surprise or shock
- மன நிறைவு அல்லது திருப்தி - satisfaction or contentment
- தனிமை - loneliness
- அவா - desire
- வலி - pain
- அலட்சியம் - carelessness or negligence
- திகில் - terror
- பீதி - phobia or extreme fear
மேற்கோள்கள்
- ↑ Cacioppo, J.T & Gardner, W.L (1999). Emotion. "Annual Review of Psychology", 191.
- ↑ Schacter, D. L., Gilbert, D. T., Wegner, D. M., & Hood, B. M. (2011). Psychology (European ed.). Basingstoke: Palgrave Macmillan.
- ↑ Dixon, Thomas. From passions to emotions: the creation of a secular psychological category. Cambridge University Press. 2003. ISBN 978-0521026697. link.
- ↑ Merriam-Webster (2004). The Merriam-Webster dictionary (11th ed.). Springfield, MA: Author.
- ↑ 5.0 5.1 Fehr, B.; Russell, J.A. (1984). "Concept of Emotion Viewed from a Prototype Perspective". Journal of Experimental Psychology, General 113 (3): 464–486. doi:10.1037/0096-3445.113.3.464. https://archive.org/details/sim_journal-of-experimental-psychology-general_1984-09_113_3/page/464.
- ↑ 6.0 6.1 Hume, D. Emotions and Moods. Organizational Behavior, 258-297.