வேடன் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வேடன்
இயக்கம்சுரேஸ் கிருஷ்ணா
தயாரிப்புசெல்வி தியாகராஜன்
ஜி. சரவணன்
கதைசுரேஸ் கிருஷ்ணா
எம். எஸ். மது (உரையாடல்)
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுபி. எஸ். பிரகாஷ்
படத்தொகுப்புகணேஷ்குமார்
கலையகம்சத்ய ஜோதி படங்கள்
வெளியீடு6 மே 1993[1]
ஓட்டம்140 நிமிடம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வேடன் (Vedan) என்பது 1993 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதியன்று வெளியான தமிழ் குற்றவியல் திரைப்படம் ஆகும்.[2] சுரேஸ் கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் சரத்குமார், குஷ்பூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சரண்ராஜ், சரத் பாபு, ஈஸ்வரி ராவ், ராதாரவி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். செல்வி தியாகராஜன் மற்றும் ஜி. சரவணன் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு, தேவா இசை அமைத்தார். கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதினார்.[3] இப்படம் 1993 மே 6 அன்று வெளியானது.

இப்படம் தெலுங்கில் வியாஸ் ஐ.பி.எஸ் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[4]

கதை

உள்ளூர் தாதாவான பூபதியின் ( சரண்ராஜ் ) உதவியாளரால் ஒரு அரசியல்வாதி கொலை செய்யப்படுவதுடன் படம் தொடங்குகிறது. காவல் ஆணையர் கணேஷ் ( சரத் பாபு ) பூபதியை கைது செய்ய ஸ்காட்லாந்து யார்டில் பயிற்சிபெற்றவரான விஜயை ( சரத்குமார் ) நியமிக்கிறார். விஜய் சிறையில் இருந்து விடுதலையான ரஞ்சித் குமார் என்ற பெயரில் பூபதியின் கும்பலில் ஊடுருவுகிறார். விஜய் பின்னர் பூபதியின் சகோதரி பிரியாவை ( ஈஸ்வரி ராவ் ) கடத்த ஏற்பாடு செய்கிறார். பின்னர் அவர் அவளை மீட்கிறார். இதன்பிறகு பூபதிக்கு விஜயை மிகவும் பிடித்துவிட, விஜய் மெதுவாக அவரது வலது கரமாக மாறுகிறார். இதற்கிடையில், விஜயும் உஷாவும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். அதன்பிறகு, காவல் ஆணையர் கணேஷ் கொல்லப்படுகிறார். இதன்பிறகு பூபதியின் கும்பலை ஒழிக்கும் பணியானது விஜய் மட்டுமே செய்யவேண்டி ஆகிறது. இது தவிர, பூபதி விஜயை ஒரு உளவாளி என்று சந்தேகிக்கத் தொடங்குகிறார். அடுத்தது என்ன நடக்கிறது என்பதே கதை ஆகும்.

நடிகர்கள்

இசை

திரைப்பட பின்னணி இசை, பாடல்களுக்கான இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் தேவா மேற்கொண்டார். 1993 இல் வெளியான இந்த படப் பாடல் பதிவில், வைரமுத்து எழுதிய 6 பாடல்கள் உள்ளன.[5]

எண் பாடல் பாடகர்(கள்) காலம்
1 'சின்ன முள்ள தொட்டிடவிட' மின்மினி 4:56
2 'தினத்தந்திக்கு ஒரு' சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:04
3 'ஐ லவ் யூ' சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:10
4 'கம்மா கரையில' சித்ரா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:49
5 'வாழ்க்கையே போர்க்களம்' எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:50
6 'வேடன்' எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:14

குறிப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வேடன்_(திரைப்படம்)&oldid=37849" இருந்து மீள்விக்கப்பட்டது