நிரபராதி (1984 திரைப்படம்)

நிரபராதி (Niraparaadhi) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் மொழி குற்றப் படம் ஆகும். இத்திரைப்படத்தினை கே. விஜயன் இயக்கினார். சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் கே.பாலாஜி தயாரித்தார்.

நிரபராதி
இயக்கம்கே. விசயன்
தயாரிப்புகே. பாலாஜி
கதைஆரூர்தாஸ் (வசனம்)
இசைசங்கர் கணேஷ்
ஒளிப்பதிவுதிவாரி
படத்தொகுப்புவி. சங்கரபாணி
கலையகம்சுஜாதா சினி ஆர்ட்ஸ்-
வெளியீடுஏப்ரல் 10, 1984 (1984-04-10)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படத்தில் மாதவி மற்றும் சில்க் ஸ்மிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தார்.[1][2] இந்தப் படம் பீ ஆப்ரூ என்ற இந்தி திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[3]

நடிகர்கள்

  • நிருபர் ராதாவாக மாதவி
  • சில்க் ஸ்மிதா
  • அனுராதா
  • இன்ஸ்பெக்டர் பாலனாக சுரேஷ் கோபி (அறிமுக படம்)
  • சத்தியகலா
  • இராணி பத்மினி
  • இன்ஸ்பெக்டர் ராஜாவாக மோகன் (நட்பு தோற்றம்)
  • நளினிகாந்த்
  • வி.கே. ராமசாமி - கௌரவத் தோற்றம்
  • ஆர். எஸ். மனோகர்
  • கே. விஜயன்
  • நிழல்கள் ரவி
  • சங்கிலி முருகன்
  • என்னத்தே கண்ணையா
  • மனோரமா
  • சத்யகலா
  • அருந்ததி
  • ராணி பத்மினி
  • உசிலை மணி
  • லட்சுமி நாராயணன்
  • ஷாவாலாஸ் வெங்கட்ராமன்
  • சூரியகலா
  • பாக்யலட்சுமி
  • விஜயராணி
  • ஆஷாதேவி
  • பேபி ராணி
  • நீலு
  • பஞ்சாபி
  • தஞ்சை பாலகிருஷ்ணன்
  • எல். ஐ. சி வெங்கட்ராமன்
  • சௌந்திரராஜ்
  • டி.வி.நாகன்
  • டக்லஸ் கண்ணையா
  • சாந்திகுமார்
  • ஜம்பு
  • தங்கையன்

கதைகளம்

நிழல்கள் ரவி ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். இருவரும் ஒரு பங்களாவில் வாழ வருகிறார்கள். வி.கே. ராமசாமி, கே. விஜயன் போன்றோர் அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்துகொள்கின்றனர். அதன்பிறகே நிழல்கள் ரவி தொடர்ந்து காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி அவர்களிடம் விற்றுவிடுவது தெரிகிறது.

ஒலிப்பதிவு

இத்திரைப்படத்திற்கு சங்கர்-கணேஷ் இசையமைத்தனர்.[4]

வ. எண் பாடல் பாடகர்(கள்) பாடலாசிரியர்
1 "மாங்கனி செம்மாங்கனி" வாணி ஜெயராம் வாலி
2 "தேவி நீயின்றி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் புலமைப்பித்தன்
3 "பொள்ளாச்சி மச்சானே" வாணி ஜெயராம், பி. எஸ். சசிரேகா வாலி
4 "பெண்ணுக்கு தெய்வம்" கே. ஜே. யேசுதாஸ், குழுவினர் புலமைப்பித்தன்

வெளியீடு

படம் வெளியிடுவதற்கு முன்னர் தணிக்கை சிக்கல்களை எதிர்கொண்டது.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=நிரபராதி_(1984_திரைப்படம்)&oldid=34817" இருந்து மீள்விக்கப்பட்டது