பேபி ராணி
பேபி ராணிBaby Rani | |
---|---|
பிறப்பு | ராணி ருத்ரமாதேவி |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1966 - 1982 |
பெற்றோர் | சாம்பசிவராவ், சீதாராவம்மா |
வாழ்க்கைத் துணை | சாம்பசிவராவ் ராயலா |
பிள்ளைகள் | 3 |
பேபி ராணி (Baby Rani, பிறப்பு:1964) இந்தியக் குழந்தை நடிகை ஆவார். இவர் 60-70களில் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 90 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.[1][2][3] மூன்றரை வயதிலேயே சிறந்த நடிப்பிற்காக தேசிய விருதை இவர் வென்றுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
ராணி ருத்ரமாதேவி என்ற இயற்பெயரைக் கொண்ட பேபி ராணி 1964 இல் பிறந்தார். பிறந்து 21 நாளிலேயே தெலுங்குப் படம் ஒன்றில் நடித்தார். தொடர்ந்து 1965 இல் வாழ்க்கைப் படகு தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். 1966 இல் வெளிவந்த சித்தி திரைப்படம் இவருக்குப் புகழைத் தேடித் தந்தது. 1968 ஆம் ஆண்டு குழந்தைக்காக தமிழ்த் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது கிடைத்தது. தொடர்ந்து டீச்சரம்மா, கண்ணே பாப்பா, அடிமைப் பெண், பொண்ணு மாப்பிள்ளை போன்ற பல படங்களில் நடித்தார். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சில் (1976) ரஜினிகாந்தின் தங்கையாக நடித்தார். 1982 இல் தனது 18-ஆவது அகவையில் உறவினர் ஒருவரைத் திருமணம் செய்தார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
நடித்த தமிழ்த் திரைப்படங்கள் சில
- வாழ்க்கைப் படகு, 1965
- சித்தி, 1966
- பொண்ணு மாப்பிள்ளை, 1966
- பேசும் தெய்வம், 1967
- குழந்தைக்காக, 1968
- டீச்சரம்மா, 1968
- கண்ணே பாப்பா, 1969
- அடிமைப் பெண், 1969
- திருடன், 1969
- ராமன் எத்தனை ராமனடி, 1970
- ஆதி பராசக்தி, 1970
- கண்காட்சி, 1971
- திருமகள், 1971
- ராணி யார் குழந்தை, 1972
- அப்பா டாட்டா, 1972
- தசாவதாரம், 1976
- மூன்று முடிச்சு, 1976
- சிறீ கிருஷ்ண லீலா, 1977
விருதுகள்
ஆண்டு | திரைப்படம் | வகை | முடிவு | மேற்கோள்கள் |
---|---|---|---|---|
1968 | குழந்தைக்காக | சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது | வெற்றி | [4][5] |
1969 | கண்ணே பாப்பா | சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது | வெற்றி | [3] |
மேற்கோள்கள்
- ↑ "Baby Rani". antrukandamugam.worpress. 29 August 2013. பார்க்கப்பட்ட நாள் 20 May 2019.
- ↑ Dhananjayan, G. (2014). Pride of Tamil Cinema: 1931 to 2013. Blue Ocean Publisher. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-84301-05-7.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 3.0 3.1 Film News, Anandhan (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraippada Varalaru (Tamil Films History and its Achievements. Sivagami Publications. p. 738.
- ↑ Dhananjayan 2014, ப. 204.
- ↑ "16th National Film Awards" (PDF). Directorate of Film Festivals. p. 2. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.