கும்பகோணம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கும்பகோணம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் கும்பகோணத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும்.

நுழைவாயில்
மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில்

அமைவிடம்

டபீர் குளம் படித்துறையில் ஆற்றின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயிலை சித்திவிநாயகர் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில் என்றும் அழைக்கின்றனர். [1]

இறைவன்

இக்கோயிலில் லிங்கத் திருமேனியாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளார். அருகே நந்தியும், பலிபீடமும் உள்ளன.

பிற தெய்வங்கள்

வலப் புறம் விநாயகரும், இடப்புறம் சுப்ரமணியரும் உள்ளனர். சிற்பங்கள் அனைத்தும் சிறிய அளவில் உள்ளன.

மேற்கோள்கள்

  1. புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை, கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992