கும்பகோணம் பொய்யாத விநாயகர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கோயில் முகப்பு

கும்பகோணம் பொய்யாத விநாயகர் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நெல்லுக்கடைத்தெருவில் உள்ள விநாயகர் கோயிலாகும். [1] இத்தெருவின் அருகே காவேரிக்கரைத்தெரு உள்ளது.

மூலவர்

மூலவராக விநாயகர் உள்ளார். அவர் பொய்யாத விநாயகர் எனப்படுகிறார்.

அமைப்பு

முன் மண்டபம், கருவறை, திருச்சுற்றுடன் உள்ள கோயில். சற்றே உயர்ந்த தளத்தில் உள்ளது.

குடமுழுக்கு

3 பிப்ரவரி 2016 காலை இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது.[2]

மேற்கோள்கள்

  1. புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை,கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992
  2. குடந்தையில் 3 கோயில்களில் மகா கும்பாபிஷேகம், தினமணி, 4 பிப்ரவரி 2016