கும்பகோணம் பிரம்மன் கோயில்
தல வரலாறு
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்திலும், தமிழகத்தில் கும்பகோணத்திலும் பிரம்மனுக்கு கோயில் உள்ளதாகக் கூறுவர். கும்பகோணத்தில் உள்ள முக்கியமான வைணவக் கோயில்களில் பிரமன் கோயில் என்றழைக்கப்படும் வேதநாராயணப்பெருமாள் கோயிலும் ஒன்றாகும்.
மூலவர், தாயார்
இக்கோயிலில் உள்ள மூலவர் வேதநாராயணப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ளார். பிரகாரத்தில் வேதவல்லி தாயார் சன்னதி உள்ளது.
பிரம்மன் சன்னதி
மூலவர் சன்னதியின் வலப்புறம் உள்ள சன்னதியில் பிரம்மா உள்ளார். அவருடைய வலப்புறம் சரஸ்வதியும், இடப்புறம் காயத்ரியும் உள்ளனர். மூலவர் சன்னதியின் இடப்புறம் உள்ள சன்னதியில் யோகநரசிம்மர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ளார். ஆண்டாள் சன்னதியும், தன்வந்திரி சன்னதியும் இக்கோயிலில் உள்ளன.
குடமுழுக்கு
இக்கோயிலில் 9.2.1988இல் குடமுழுக்கு நடைபெற்றதற்கான கல்வெட்டு உள்ளது.
அருகிலுள்ள கோயில்கள்
இக்கோயிலின் அருகில்மும்மூர்த்தி விநாயகர் கோயில் மற்றும் வரதராஜப்பெருமாள் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன.