கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோயில்
பெயர்
பெயர்:கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோயில்
அமைவிடம்
ஊர்:கும்பகோணம்ககும்பகோணம் வட்டம்[1]
மாவட்டம்:தஞ்சாவூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சோமநாதர்(எ) பாணபுரீஸ்வரர்
தாயார்:சோமகமலாம்பாள், கமலாம்பிகை

கும்பகோணம் பாணபுரீஸ்வரசுவாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] கும்பகோணத்தில் காவிரியின் கரையில் திருமஞ்சனம் பெற்ற தனிச்சிறப்பு மட்டுமன்றி மகாமக தீர்த்தவாரியில் எழுந்தருளும் மகாசிறப்பினைப் பெற்றது இக்கோயில்.

வரலாறு

இக்கோயில் பொ.ஊ. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் சோமநாதர்(எ) பாணபுரீஸ்வரர், கமலாம்பிகை சன்னதிகளும், விநாயகர், முருகன், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், துர்க்கை, பைரவர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிருவாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் காரணாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் நவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி, மாசி மாதம் ஆருத்ராதரிசனம், மாசிமகம் திருவிழாக்களாக நடைபெறுகின்றன.

இறைவன், இறைவி

இறைவன் பாணபுரீஸ்வரர், இறைவனின் மூலவர் திருமேனி (சிவலிங்கம்) பானம் அகண்டிருப்பது தனிச்சிறப்பாகும். இவரைப் பற்றி மாணிக்கவாசகர் தமது கீர்த்தித் திருவகலில் பின்வருமாறு சிறப்பித்துக் கூறியுள்ளார்.

இறைவி சோமகலாம்பாள் இக்கோயிலின் மகா மண்டபத்தில் வடக்கு பாகத்தில் அழகே உருவாக, நின்ற திருக்கோலத்தில் நான்கு கரங்களுடன் (அபயம், வரதம், ருத்ராட்சமாலை, பத்மம் ஆகியவற்றுடன்) தெற்கு முகமாக எழுந்தருளி கொலு வீற்றிருக்கிறார். அம்பாளின் திருக்காட்சி காண்போருக்கு கண்கொள்ளா தெய்வத்திருக்காட்சியாகும்.[3]

பேறு பெற்றோர்

வியாச முனிவர் நாராயணமூர்த்தி வாக்கின்படி இவரை சிவபூசை செய்து வழிபட்டு தமது சாபம் நீங்கப்பெற்றப் பெருமையைப் பெற்றது இத்தலம். வங்காள மன்னன் சூரசேனனின் மனைவி காந்திமதியின் கொடிய நோய் (குஷ்டம்) இவரது திருவருளால் நீங்கப்பெற்ற சிறப்பையும் பெற்றது இக்கோயில்.

குடமுழுக்கு

மகாமகத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் பெரும்பாலான கோயில்களில் குடமுழுக்கு நடைபெறும் நிலையில் இக்கோயிலில் அக்டோபர் 26, 2015இல் குடமுழுக்கு நடைபெற்றது.[4][5]

26 அக்டோபர் 2015 குடமுழுக்கு படத்தொகுப்பு

மேற்கோள்கள்