கும்பகோணம் பாட்ராச்சாரியார் தெரு நவநீதகிருஷ்ணன் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நவநீதகிருஷ்ணன் கோயில்

கும்பகோணத்தில் உள்ள குறிப்பிடத்தக்க கிருஷ்ணன் கோயில் இதுவாகும். [1] இக்கோயில் நவநீதகிருஷ்ணன் கோயில் என்றழைக்கப்படுகிறது.

இருப்பிடம்

கும்பகோணம் நகரில் பாட்ராச்சாரியார் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது.

மூலவர்

மூலவர் கிருஷ்ணன் ருக்மணி சத்யபாமாவுடன் இருந்து அருள் பாலிக்கிறார்.

12 கருட சேவை

கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர். [2] [3]

மேற்கோள்கள்