கும்பகோணம் பழனியாண்டவர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பழனியாண்டவர் கோயில்

கும்பகோணம் பழனியாண்டவர் கோயில் கும்பகோணத்தில் உள்ள முருகன் கோயிலாகும். [1]

இருப்பிடம்

கும்பகோணத்தில் பழனியாண்டவர் சன்னதித் தெருவில் அமைந்துள்ளது.

மூலவர்

இக்கோயிலின் மூலவராக முருகன் பால தண்டாயுதபாணியாக நின்ற நிலையில் உள்ளார். மூலவரின் வலப்புறம் இடும்பனும், சுந்தரேஸ்வரரும், இடப்புறம் கணபதியும் மீனாட்சியும் உள்ளனர். சன்னதியில் மகாலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்ரமணியர், விஷ்ணு துர்க்கை,சண்டிகேஸ்வரர்,பைரவர், நவக்கிரகங்கள், வன துர்க்கை, செல்லப்ப விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், சரஸ்வதி ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன.

குடமுழுக்கு

சூலை 10, 2011இல் இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றதாகக் கல்வெட்டு உள்ளது.


மேற்கோள்கள்

  1. புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை, கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992