கும்பகோணம் பகவத் விநாயகர் கோயில்
இருப்பிடம்
கும்பகோணத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று. இக்கோயில் நாகேஸ்வரர் கோயில் திருமஞ்சன வீதியில் உள்ளது. இக்கோயிலை பகவத் விநாயகர் கோயில் என்றும் பகவ விநாயகர் கோயில் என்றும் அழைக்கின்றனர். முச்சந்தி பாதாளகாளியம்மன் கோயில், யானையடி அய்யனார் கோயில், ஜெகந்நாதப்பிள்ளையார் கோயில், படைவெட்டி மாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களும் உள்ளன.
மூலவர்
இக்கோயிலில் மூலவராக விநாயகப்பெருமான் உள்ளார்.
பௌத்தம் தொடர்பு
வரலாற்றறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி, நாகேசுவரசுவாமித் திருமஞ்சன வீதியில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் பகவரிஷி என்னும் பெயருள்ள ஒரு புத்தர் உருவம் இருக்கிறது என்றும், பவன் என்பது புத்தர் பெயர்களில் ஒன்று, புத்தருக்கு விநாயகன் என்னும் பெயர் உண்டென்று நிகண்டுகள் கூறுகின்றன என்றும், புத்தர் கோயில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோயில்களாகக்கப்பட்டன என்றும், இங்குள்ள விநாயகர் கோயிலும் அதில் உள்ள புத்தர் உருவம் இதற்குச் சான்றாகும் என்றும் கூறுகிறார். [1]
களப்பணி
இக்கோயிலில் மயிலை சீனி வேங்கடசாமி கூறிய புத்தர் சிலை காணப்படவில்லை. அங்குள்ள சிலை பகவத் அல்லது பகவ முனிவர் என்பவருடைய சிலையாகும். புத்தர் சிலைக்குரிய கூறுகள் இச்சிலையில் காணப்படவில்லை.
குடமுழுக்கு
2006இல் இக்கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 2016இல் நடைபெறவுள்ள மகாமகத் திருவிழாவின் காரணமாக இக்கோயிலில் குடமுழுக்கு நடத்த 22.2.2015 ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடுகள் தொடங்கப்பட்டு, பாலாலயம் நடைபெற்றது. [2] அக்டோபர் 26, 2015இல் குடமுழுக்கு நடைபெற்றது. [3] [4]
மேற்கோள்கள்
- ↑ மயிலை சீனி.வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்
- ↑ குடந்தை பகவத்விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள், தினமணி, 23.2.2015
- ↑ கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர், அமிர்தகலசநாதர் கோயில்களில் குடமுழுக்கு விழா, தினமணி, அக்டோபர் 23, 2015
- ↑ கும்பகோணத்தில் ஏகாம்பரேஸ்வரர், கும்பகோணத்தில் 14 கோயில்களில் குடமுழுக்கு, தினமணி, அக்டோபர் 27, 2015