கோயிலின் வெளிப்புறம் முக்குடையுடன் வர்ததமான மகாவீரர் உருவம் உள்ளது. கோயிலின் நடுவில் சன்னதி அமைந்துள்ளது. மகாவீரரின் திருவுருவம் அலங்காரத்துடன் வெண்ணிற உடை உடுத்தி வைக்கப்பட்டுள்ளது. இவ்வுருவத்தின் இருபுறங்களிலும் முதல் தீர்த்தங்கரரான ரிஷபநாதரின் உருவம் உள்ளது. சமணர்களின் ஆலயங்களில் காணப்படும் மனத்தூய்மைக்கம்பம், பலிபீடம் போன்ற அமைப்புகள் இக்கோயிலில் காணப்படவில்லை.
வழிபாடு
காலை பூசையில் பாலாபிஷேகமும் நெய்வேத்தியமும் செய்கின்றனர். மாலையில் தீபாராதனை காட்டி வழிபடுகின்றனர்.
விழா
சுவேதாம்பரர்கள் திருவிழா அன்று சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. மூன்று மாதம் ஒரு முறை அஷ்டமி நாளில் தாசவதானி என்ற விழாவை எட்டு நாள்கள் நடத்துகின்றனர். அந்நாட்களில் மகாவீரர் உருவத்தை வைத்து அர்ச்சனை பூசை வழிபாடுகளை செய்கின்றனர். மகாவீரர் ஜெயந்தி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.