கும்பகோணம் சரநாராயணப்பெருமாள் கோயில்
கும்பகோணத்தில் உள்ள வைணவக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். [1]
இருப்பிடம்
சரநாராயணப்பெருமாள் கோயில் கும்பகோணம் நகரில் பெரிய கடைவீதியில் அமைந்துள்ளது.பெரிய கடைத்தெருவில் பெரியக்கடைத்தெரு அனுமார் கோயில் தொடங்கி இத்தெருவில் சரநாராயணப்பெருமாள் கோயில்,கூரத்தாழ்வார் சன்னதி, உடையவர் சன்னதி, ராஜகோபாலஸ்வாமி கோயில், கும்பகோணம் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன.
மூலவர்
இக்கோயிலின் மூலவர் சன்னதியில் மகாவிஷ்ணுவின் தசாவதார மூர்த்திகள் காணப்படுகின்றனர். தசாவதார மூர்த்திகளின் தனித்தலமாக இக்கோயில் போற்றப்படுகிறது. இக்கோயிலை தசாவதாரக்கோயில் என்றும் அழைக்கின்றனர். இக்கோயிலில் சங்கு சக்கரம் மாறிய நிலையில் சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பது சிறப்பு அம்சம் என்று கூறுகின்றனர். கருவறையின் இடப்புறம் ராஜகோபாலசுவாமி சன்னதி உள்ளது.
குடமுழுக்கு
அண்மைக்காலம் வரை இக்கோயிலுக்கு உள்ளே செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. (பிப்ரவரி 2015)திருப்பணியின் காரணமாக கோயிலின் முழு அமைப்பையும் காணமுடிந்தது.29 ஜனவரி 2016 காலை இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது.[2]
மேற்கோள்கள்
- ↑ புலவர் சி.இளங்கோவன், மகாமகமா வாருங்கள், வாருங்கள், மகாமகம் 1992 சிறப்பு மலர்
- ↑ குடந்தையில் 10 கோயில்களில் மகா கும்பாபிஷேகம், திரளான மக்கள் பங்கேற்பு, தினமணி, 30 ஜனவரி 2016