காஞ்சிபுரம் விண்டுவீசர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காஞ்சிபுரம் விண்டுவீசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் விண்டுவீசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:விண்டுவீசர்.

காஞ்சிபுரம் விண்டுவீசர் கோயில் (விண்டுவீசம்) என விளங்கும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். திருமால் வழிபட்ட இக்கோயில் காஞ்சி திருவேகம்பத்தின் மூன்றாம் பிராகாரம் தெற்கு பக்கம் ஆயிரங்கால் மண்டபத்திலுள்ள கோபுர வாயிலுக்கு நேரே தென் பிராகாரத்தில் பிள்ளையார் சந்நிதிக்கு பக்கத்தில் உள்ளது. மேலும், இவ்விறைவரை விஷ்ணுவேஸ்வரர் என்ற பெயராலும் அழைக்கப்படும் இக்கோயில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

தல சிறப்பு

திருப்பாற்கடலிலிருந்து திருமால் தன் மனையாட்டியினருடன் தில்லையில் வந்து திருநடனம் காணத் தவம்புரியங்கால் தில்லை நாதன் திருக்காஞ்சியில் எம்மை வழிபட்டு வருவாய் எனில் இங்கு எமது நடனத்தைப் பெறுவாயென்று கட்டளையிட அவ்வண்ணமே வந்து பூசித்தனர்.[2]

தல வரலாறு

தில்லையில் இறைவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தன்யோக நித்திரையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் திருமால், அந்தற்புத நடனத்தை இலக்குமி முதலியோருக்கும் காட்ட விரும்பி, காஞ்சியில் விண்டுவீசர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டு, இறைவனின் அருளால் அனைவரையும் தில்லைக்கு அழைத்துச் சென்று ஆனந்த நடனத்தைக் காட்ட, அனைவரும் கண்டு பரவசப்பட்டனர் என்பது வரலாறாகும்.[3]

தல பதிகம்

அமைவிடம்

இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின் காஞ்சி திருவேகம்பத்தின் பிரகாரத்தில் - பிள்ளையார் சந்நிதிக்கு பக்கத்தில் விண்டுவீசம் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கில் ½ மைல் தூரமுள்ள காஞ்சி சங்கர மடத்தை கடந்து சற்று தூரம் சென்றால் திருவேகம்பத்தில் இக்கோயில் தாபிக்கப்பட்டுள்ளது.[5]

போக்குவரத்து

மேற்கோள்கள்

  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 61. தழுவக்குைழந்த படலம் (2023- 2449) | 2172 விண்டுவீச்சர வரலாறு / கலிநிலைத்துறை
  2. "palsuvai.ne | 17. விஷ்ணுவேஸ்வரர் விண்டுவீசர் | காஞ்சிபுர சிவலிங்கங்கள்". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-04-13.
  3. "shaivam.org | (விண்டுவீசம்) விண்டுவீசர்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-04-13.
  4. tamilvu.org | காஞ்சிப் புராணம் | தழுவக் குழைந்த படலம் | விண்டுவீச்சர வரலாறு கலிநிலைத் துறை | பாடல்கள்: 150 - முதல் | பக்கம்: 631 - முதல்
  5. dinaithal.com | விண்டுவீசம் விண்டுவீசர் கோயில்
  6. tripadvisor.in 15 temples in Kanchipuram

புற இணைப்புகள்