காஞ்சிபுரம் விடுவக்சேனேசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
காஞ்சிபுரம் விஷ்வக்சேனம்
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் விஷ்வக்சேனம்
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:விஷ்வக்சேனேசுவரர் (பைரவர்).

காஞ்சிபுரம் விடுவக்சேனேசுவரர் கோயில் (விடுவக்சேனம்) என வழங்கப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவக் கோயில்களில் ஒன்றாகும். மேலும், இவ்விறைவரை விடுவக்சேனர் என்பவர் வழிப்பட்டதாக அறியப்படுகிறது இத்தலம்; பிள்ளையார் பாளையம் திருவேகம்பன் தெருவிலுள்ள காஞ்சி சோளீசுவரர் கோயிலின் அகத்தில் பைரவர் சந்நிதியாக அழைக்கப்படும் இக்கோயில் குறிப்புகள், காஞ்சி புராண படலத்துள் உட்கோயில்களாகச் சொல்லப்பட்டுள்ளன.[1]

தல சிறப்பு

விடுவக்சேனன் வைரவ ரூப மூர்த்தியின் சூலத்திலிருந்த தன்னைக் திருமால் மீட்பித்தனரானதால் அதற்கு கைம்மாறாகத் தக்ஷயாகத்தில் திருமாலிழந்த சக்கரத்தை தான் வீரபத்திர மூர்த்தியிடம் பெற்றுக் கொடுக்கப் பூசித்தனர்.[2]

தல வரலாறு

சலந்தரனை அழிப்பதற்காக இறைவனால் வழங்கப்பட்ட சக்கராயுதத்தை வீரபத்திரர் மீது பிரயோகப்படுத்தியபோது அவர் அணிந்துள்ள வெண்டலை மாலையில் உள்ள ஒரு தலை அதை விழுங்கிவிட்டது. "சக்கராயுதத்தை இழந்த நான் எவ்வாறு என் காத்தல் தொழிலை செய்வது" என்று திருமால் ஒருசமயம் புலம்பிக் கொண்டிருந்தார். இதைக் கேட்ட விடுவக்சேனர் தன்னை திருமால், வயிரவரின் சூலத்தினின்றும் விடுவித்து ஏற்றமையால், தானும் திருமாலுக்கு ஏதேனும் உபாயம் செய்யவிரும்பி, சக்கராயுதத்தை திரும்பப் பெற்றுத்தரும் நோக்குடன் வீரபத்திரர் கோயிலுக்குள் நுழைந்தார். பானுகம்பன் முதலானோர் விடுவக்சேனரைப் பிடித்து வெளியில் தள்ளினர். துயரமுற்ற விடுவக்சேனர், முனிவர்கள் சிலர் கூறிய யோசனைப்படி, காஞ்சியை அடைந்து தன் பெயரில் சிவலிங்கம் பிரதிட்டை (இம்மூர்த்தம் பிள்ளையார் பாளையம் சோளீஸ்வரர் கோயிலில் உள்ளது.) செய்து வழிபட்டார். உடனே வீரபத்திரர் இவர் முன்தோன்றினார்; விடுவக்சேனரும், சக்கராயுத்தை வேண்டி நின்றார். சக்கராயுதம் எம்மிடமில்லை அது வெண்டலையின் வாயில் இருக்குமானால் வெண்டலையே கொடுக்க நீ பெற்றுக்கொள் என்றருளினார் வீரபத்திரர். விடுவக்சேனர், செய்வதறியாது கலக்கமுற்று நின்றார். பிறகு, அனைவரும் சிரிக்கும்படி, உடம்பையும்-கைகால்களையும் மாற்றி மாற்றி வளைத்தும் கோணலாக்கியும், வாய்-மூக்கினை கோணலாக்கிக் காட்டியும் விகடக் கூத்தாடினார். இதைக் கண்டு அனைவரும் பெரும் நகைப்புக் கொண்டனர். வெண்டலையும் சிரித்தது; சக்கராயுதம் அதன் வாயினின்றும் கீழே விழுந்துவிட்டது. சட்டென்று அச்சக்கராயுதத்தை விநாயகர் எடுத்துக்கொண்டு, மீண்டுமொருமுறை தனக்காக விகடக் கூத்து ஆடுமாறு செய்து, (விகடச் சக்கர விநாயகர் திருவேகம்பத்தில் எழுந்தருளியுள்ளார்; இவரே காஞ்சி நகரின் தல விநாயகராவார்.) அதைக்கண்டு மகிழ்ந்து சக்கரத்தை விடுவக்சேனரிடம் தந்தார். விடுவக்சேனர் சக்கராயுதத்தை திருமாலிடம் ஒப்படைத்தார். மகிழ்ந்த திருமால் விடுவக்சேனருக்கு சேனாதிபதி தலைமையை அளித்தார் என்பது வரலாறு.[3]

தல பதிகம்

அமைவிடம்

இந்தியாவின் தென்கடை மாநிலம் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான பெரிய காஞ்சிபுரம் எனப்படும் சிவகாஞ்சியின் பிள்ளையார் பாளையம் திருவேகம்பன் தெருவிலுள்ள காஞ்சி சோளீசுவரர் கோயிலின் உள்ளே பைரவர் சந்நிதியாக உள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து மேற்கில் 1 மைல் தூரம் சென்றால் இக்கோயிலை அடையலாம்.[5]

போக்குவரத்து

மேற்கோள்கள்

  1. projectmadurai.org | காஞ்சிப் புராணம் | 34. விடுவேச்சேனசப் படலம் (1163-1193) | 1164 விஷ்ணு சக்கரம் இழந்தயர்தல்
  2. "palsuvai.ne | 62. ஸ்ரீ விஷ்வக்ஸேனேஸ்வரர் | காஞ்சிபுர சிவலிங்கங்கள்". Archived from the original on 2016-06-29. பார்க்கப்பட்ட நாள் 2016-04-18.
  3. "shaivam.org | விஷ்வக்சேனம் விஷ்வக்சேனேசுவரர் | தல வரலாறு". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-04-18.
  4. tamilvu.org | காஞ்சிப் புராணம் | விடுவச்சேனேசப் படலம் | திருமால் சக்கரம் இழந்தயர்தல் | பாடல்: 1 - 31 | பக்கம்: 358 - 366
  5. dinaithal.com | விஷ்வக்சேனம்
  6. tripadvisor.in 15 temples in Kanchipuram

புற இணைப்புகள்