ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா
ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா Stanley Jeyaraja Tambiah | |
---|---|
படிமம்:SJtambiah.jpg | |
பிறப்பு | யாழ்ப்பாணம், இலங்கை | சனவரி 16, 1929
இறப்பு | சனவரி 19, 2014 கேம்பிரிட்ச், மாசச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா | (அகவை 85)
தேசியம் | இலங்கையர், அமெரிக்கர் |
துறை | மானிடவியல் |
பணியிடங்கள் | இலங்கைப் பல்கலைக்கழகம் கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகம் சிக்காகோ பல்கலைக்கழகம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | இலங்கைப் பல்கலைக்கழகம் கோர்னெல் பல்கலைக்கழகம் |
தாக்கம் செலுத்தியோர் | எட்மண்ட் லீச்[1] |
விருதுகள் | பல்சான் பரிசு (1997) ஃபுகோக்கா ஆசியக் கலாச்சார விருது (1998) |
எஸ். ஜே. தம்பையா என அழைக்கப்படும் ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா (Stanley Jeyaraja Tambiah; 16 சனவரி 1929[2] - 19 சனவரி 2014[3])என்பவர் சமூக மானிடவியலாளரும்[4] ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரும் ஆவார்.[5] இவரது ஆய்வுத் துறைகள்: இனத்துவம், இனமுரண்பாடுகள், பௌத்தம், வன்முறையின் மானிடவியல், இனக்குழுமங்களின் வரலாறு, தாய்லாந்து, இலங்கை, மற்றும் தமிழர் போன்றன. இவர் ஆசியப் படிப்புகளுக்கான அமைப்பின் (Association for Asian Studies) முன்னாள் தலைவருமாவார். மானிடவியல் ஆய்வுகளுக்காக இவருக்கு 1997ம் ஆண்டுக்கான பல்சான் பரிசு வழங்கப்பட்டது.
வாழ்க்கைக் குறிப்பு
ஸ்டான்லி தம்பையா இலங்கையில் யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ தமிழ்க் குடும்பத்தில் சார்ல்சு ராசக்கோன், எலீசா செலானா தம்பையா ஆகியோருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார்.[3] கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் பள்ளிப் படிப்பை முடித்து பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். 1951 இல் இளங்கலைப் பட்டம் பெற்று நியூ யோர்க் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் பட்டப் பின்படிப்பைத் தொடர்ந்தார். அங்கு 1954 இல் முடித்து முனைவர் பட்டத்தைப் பெற்றார்[4].
படிப்பை முடித்துக் கொண்டு 1955 இல் இலங்கை திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையில் விரிவுரையாளராக 1960 வரையில் பணியாற்றினார். பின்னர் சில காலம் யுனெஸ்கோவின் அனுசரனையில் தாய்லாந்து, பாங்கொக்கில் இயங்கும் Bangkok Institute for Child Studies என்ற ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் 1963 முதல் 1972 வரை கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், 1973 முதல் 1976 வரை சிக்காகோ பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார்[2]. 1976 இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்[5].
விருதுகள்
- நவம்பர் 1997 இல், "தென்கிழக்காசியாவில் இனவன்முறைகள் ஏற்படுவதற்கான சமூக-மானுடவியல் காரணங்களுக்கான ஆய்வுகளுக்காகவும், பௌத்தம் தொடர்பான ஆய்வுகளுக்காகவும்" புகழ்பெற்ற பால்சான் பரிசை பெற்றார்[4],[6].
- 1997 இல் பிரித்தானியாவின் ரோயல் மானிடவியல் கழகம்[7] ஹக்ஸ்லி நினைவு விருதை வழங்கிக் கௌரவித்தது[8].
- செப்டம்பர், 1998 இல், ஜப்பான் ஃபுகோக்கா ஆசியக் கலாச்சார விருது வழங்கியது[9]
- 2000 ஆம் ஆண்டில் பிரித்தானிய அக்காதெமியின் Corresponding Fellow ஆனார்[10]. இது சர்வதேசரீதியில் மானிடவியல் மற்றும் சமூகவியல் ஆய்வுகளில் புகழ் பெற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது[11].
இவரது நூல்கள்
- Sri Lanka: Ethnic Fratricide and the Dismantling of Democracy
- Buddhism and the Spirit Cults in North-East Thailand. Cambridge University Press, 1970. ISBN 0-521-09958-7.
- World Conqueror and World Renouncer : A Study of Buddhism and Polity in Thailand against a Historical Background (Cambridge Studies in Social and Cultural Anthropology). Cambridge University Press, 1976. ISBN 0-521-29290-5.
- Magic, Science and Religion and the Scope of Rationality (Lewis Henry Morgan Lectures). Cambridge University Press, 1990. ISBN 0-521-37631-9.
- Buddhism Betrayed? : Religion, Politics, and Violence in Sri Lanka (A Monograph of the World Institute for Development Economics Research). University of Chicago Press, 1992. ISBN 0-226-78950-0.
- Leveling Crowds : Ethnonationalist Conflicts and Collective Violence in South Asia. (Comparative Studies in Religion and Society). University of California Press, 199. ISBN 0-520-20642-8.
- Edmund Leach: An Anthropological Life. Cambridge University Press, 2002. ISBN 0-521-52102-5.
மறைவு
பேராசிரியர் எஸ். ஜே. தம்பையா நீண்ட சுகவீனத்தை அடுத்து 2014 சனவரி 19 இல் ஐக்கிய அமெரிக்காவில் மாசச்சூசெட்ஸ், கேம்பிரிட்ச் நகரில் காலமானார். இவருக்கு மனைவி மேரி. எச். தம்பையா, மற்றும் ஜொனத்தன், மேத்தியூ ஆகிய இரு மகன்மார் உள்ளனர்.[3]
மேற்கோள்கள்
- ↑ "Review of Edmund Leach: An Anthropological Life by Edmund Leach; Stanley Tambiah". Anthropology Today, Vol. 21, No. 3 (Jun., 2005), pp. 22-23. https://www.academia.edu/1196244/Scupin_Leachs_Legacy_Review_of_Tambiahs_Edmund_Leach_An_Anthropological_Life_in_Anthropology_Today_Vol_21_2005. பார்த்த நாள்: 21 சனவரி 2014.
- ↑ 2.0 2.1 Anthony, Peterson. "Stanley Tambiah". Anthropology Biography Web (Emuseum @ Minnesota State University, Mankato) இம் மூலத்தில் இருந்து 2007-10-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071018053756/http://www.mnsu.edu/emuseum/information/biography/pqrst/tambiah_stanley.html. பார்த்த நாள்: 2007-08-19.
- ↑ 3.0 3.1 3.2 "STANLEY JEYARAJ TAMBIAH - Obituary, Condolences". த பொஸ்டன் குளோப். 21 சனவரி 2014. http://www.legacy.com/obituaries/bostonglobe/obituary.aspx?n=stanley-jeyaraj-tambiah&pid=169187897&. பார்த்த நாள்: 24 சனவரி 2014.
- ↑ 4.0 4.1 4.2 Gewertz, Ken (1997-10-23). "Stanley Tambiah To Be Awarded Balzan Prize For Groundbreaking Work on Ethnic Violence". Harvard Gazette. http://news.harvard.edu/gazette/1997/10.23/StanleyTambiahT.html. பார்த்த நாள்: 2007-08-19.
- ↑ 5.0 5.1 "Harvard Foundation unveils portraits: Six minority faculty and administrators recognized and recognizable". ஆர்வார்டு கசெட். 2005-05-12 இம் மூலத்தில் இருந்து 2007-08-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070816152158/http://www.news.harvard.edu/gazette/2005/05.12/01-portraits.html. பார்த்த நாள்: 2007-08-19.
- ↑ "Stanley Jeyaraja Tambiah". Fondazione Internazionale Balzan இம் மூலத்தில் இருந்து 2006-05-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060514220748/http://www.balzan.it/Premiati_eng.aspx?Codice=0000001326&nome=Stanley%20Jeyaraja%20Tambiah. பார்த்த நாள்: 2007-08-20.
- ↑ "Honours". Royal Anthropological Institute of Great Britain and Ireland இம் மூலத்தில் இருந்து 2007-08-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070809090447/http://www.therai.org.uk/honours/honours.html. பார்த்த நாள்: 2007-08-19.
- ↑ "Huxley Memorial Medal and Lecture: Prior Recipients". [Royal Anthropological Institute of Great Britain and Ireland இம் மூலத்தில் இருந்து 2007-07-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070712145950/http://www.therai.org.uk/honours/prior_huxley.html. பார்த்த நாள்: 2007-08-19.
- ↑ Gewertz, Ken (1998-08-06). "Stanley Tambiah To Be Awarded Fukuoka Asian Cultural Prize". Harvard Gazette. http://news.harvard.edu/gazette/1998/08.06/StanleyTambiahT.html. பார்த்த நாள்: 2007-08-19.
- ↑ "British Academy elects Tambiah". Harvard Gazette. 2000-11-09. http://www.news.harvard.edu/gazette/2000/11.09/03-newsmakers.html. பார்த்த நாள்: 2007-08-19.
- ↑ "The Fellowship of the British Academy". பிரித்தானிய அக்காதெமி. 2006. http://www.britac.ac.uk/fellowship/index.html. பார்த்த நாள்: 2007-08-19.
வெளி இணைப்புகள்
- எஸ். ஜே. தம்பையாவுடன் ஒரு நேர்காணல் பரணிடப்பட்டது 2007-06-27 at the வந்தவழி இயந்திரம் அலன் மக்பார்லேன், 8 ஜூலை 1983