முத்தையா வனிதா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முத்தையா வனிதா
பிறப்புஇந்தியா, சென்னை
பணிஅறிவியலாளர்
செயற்பாட்டுக்
காலம்
1987–தற்போதுவரை
அமைப்பு(கள்)இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO)

முத்தையா வனிதா (Muthayya Vanitha) என்பவர் ஒரு இந்திய மின்னணு அமைப்பு பொறியாளர் ஆவார். இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் செயற்கைக்கோள்கள் குறித்த திட்டங்களுக்கு தலைமை தாங்கியுள்ளார். இவர் தற்போது இஸ்ரோவின் சந்திரயான்-2 பணியின் திட்ட இயக்குநராக உள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

வனிதா தமிழ்நாட்டின், சென்னையைச் சேர்ந்தவர். இவர் முதலில் வடிவமைப்பு பொறியாளராகப் பயிற்சி பெற்றார். இவர் கிண்டியின் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர். [1]

தொழில்

வனிதா மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இஸ்ரோவில் பணியாற்றியுள்ளார். இவர் முதலில் வன்பொருள் சோதனை மற்றும் மேம்பாட்டு போன்ற பல்வேறு துறைகளில் பணிபுரியும் இளநிலைப் பொறியாளராக இஸ்ரோவில் சேர்ந்தார். பின்னர் இவர் நிர்வாக பணிகளில் பங்காற்றியிருக்கிறார். இந்திய விண்வெளி ஆய்வு மைய செய்மதி நடுவத்தின் டிஜிட்டல் சிஸ்டம்ஸ் குழுவில் டெலிமெட்ரி மற்றும் டெலிகாமண்ட் பிரிவுகளை வழிநடத்தியுள்ளார். கார்ட்டோசாட்-1, ஓசியன்சாட் -2, மற்றும் மேகா-டிராபிக்ஸ் உள்ளிட்ட பல செயற்கைக்கோள்களுக்கான திட்ட துணை இயக்குநராகவும் இவர் பணியாற்றியுள்ளார். அங்கு இவர் தரவு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருந்தார். [2] 2013 ஆம் ஆண்டில் செவ்வாய் கோளை ஆராயும் மங்கல்யான் திட்டப் பணியிலும் பணியாற்றியுள்ளார்.

சந்திரயன் -2

வனிதா இஸ்ரோவின் சந்திரனை ஆராயும் சந்திரயான் -2 திட்டப் பணிக்கான இணை இயக்குநராக இருந்து திட்ட இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். இஸ்ரோவில் விண்கோள்களுக்கிடையான திட்டப் பணிக்கு தலைமை தாங்கிய முதல் பெண் இவர். இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநரும் இவர் ஆவார். [3] முந்தைய சந்திரயான் -1 திட்ட இயக்குனர், மயில்சாமி அண்ணாதுரை, தனது பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி செய்தார், இவரது தரவு கையாளும் திறண், குழு மேலாண்மை மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன் ஆகியவை இப் பதவிக்கு சிறந்த நபராக இவரை ஆக்கியுள்ளன என்று கூறினார். வனிதாவின் பொறுப்புகள் அனைத்து அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளை முழுமையாக மேற்பார்வையால் உறுதிசெய்தல் மற்றும் திட்டத்திற்கான அதிகார புள்ளியாக செயல்படுதல் போன்றவை அடங்கும். ஏவுதல் 22 ஜூலை 2019 அன்று வெற்றிகரமாக நிகழ்ந்தது. சந்திரயான்-1 போலல்லாமல், சந்திரனின் சுற்றுப்பாதையை சுற்றி வருவது அல்லாமல் ஆய்வுக்காக தரையிறக்கும் நோக்கமும் கொண்டது.

விருதுகள் மற்றும் கௌரவங்கள்

வனிதா 2006 ஆம் ஆண்டில் இந்திய வானியல் சங்கத்தால் சிறந்த பெண் அறிவியலாளருக்கான விருதைப் பெற்றார். 2019 ஆம் ஆண்டில் நேச்சர் இதழில் ஐந்து அறிவியலாளர்களில் ஒருவராகவும் இவர் குறிப்பிடப்பட்டார். [4]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=முத்தையா_வனிதா&oldid=23849" இருந்து மீள்விக்கப்பட்டது