வத்திராயிருப்பு வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வத்திராயிருப்பு வட்டம் (Watrap Taluk) இந்தியாவின், தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டத்தின், வத்ராயிருப்பு, கோட்டையூர் மற்றும் நத்தம்பட்டி என 3 உள்வட்டங்களையும், அதனுடன் இணைந்த 22 வருவாய் கிராமங்களைக் கொண்டு புதிய வத்திராயிருப்பு வருவாய் வட்டம் 18 பிப்ரவரி 2019 அன்று தமிழக முதல்வரால் நிறுவப்பட்டது.[1] இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வத்திராயிருப்பு ஆகும்.

இவ்வட்டத்தின் தற்காலிக வட்டாட்சியர் அலுவலகம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்படுகிறது.

வருவாய் வட்ட நிர்வாகம்

வத்திராயிருப்பு வட்டம் வத்திராயிருப்பு, கோட்டையூர், நத்தம் பட்டி என 3 உள்வட்டங்களைக் கொண்டுள்ளது.

வத்திராயிருப்பு உள்வட்டம்

வத்திராயிருப்பு உள்வட்டத்தில் வத்திராயிருப்பு, கான்சாபுரம், வ. புதுப்பட்டி மற்றும் எஸ். கொடிக்குளம் என 4 வருவாய் கிராமங்கள் உள்ளது.

கோட்டையூர் உள்வட்டம்

கோட்டையூர் உள்வட்டத்தில் கோட்டையூர், மகாராஜபுரம், தம்பிப்பட்டி, மாரிகலம்காத்தான், இலந்தைக்குளம், ஆயர்தர்மம், கோவிந்தநல்லூர், வெல்லப்பொட்டல் மற்றும் அயன்கரிசல்குளம் என 9 வருவாய் கிராமங்கள் உள்ளது.

நத்தம்பட்டி உள்வட்டம்

நத்தம்பட்டி உள்வட்டத்தில் நத்தப்பட்டி, சுந்தரபாண்டியம், ருத்திரப்பநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, களத்தூர், அம்மாப்பட்டி, மூவரை வென்றான், துலுக்கப்பட்டி, செம்மண்டிகரிசல்குளம் மற்றும் குன்னூர் ஆகிய 10 வருவாய் கிராமங்கள் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Watrap taluk starts administrative functions". The Hindu

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=வத்திராயிருப்பு_வட்டம்&oldid=103770" இருந்து மீள்விக்கப்பட்டது