லோத்தல்
22°31′17″N 72°14′58″E / 22.52139°N 72.24944°E
| தோலத்தல் | |
|---|---|
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: ஹரப்பா தொல்லியல் களம், லோத்தல், குசராத்து | |
| இருப்பிடம் | லோத்தல், குசராத்து |
| வகை | Settlement |
| வரலாறு | |
| கட்டப்பட்டது | சுமார் கி.மு. 3700 |
| கலாச்சாரம் | சிந்துவெளி நாகரிகம் |
| பகுதிக் குறிப்புகள் | |
| அகழாய்வு தேதிகள் | 1954–1963 |
| நிலை | சிதைந்த நகரம் |
| உரிமையாளர் | பொது |
| மேலாண்மை | இந்தியத் தொல்லியல் ஆய்வகம் |
| பொது அனுமதி | ஆம் |
லோத்தல் சிந்துவெளி நாகரிகக் கால நகரங்களில் ஒன்றாகும். ஹரப்பா பண்பாட்டின் தொடர்ச்சியான லோத்தல் நகரத்தின் அழிபாடுகள் தற்கால இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இதன் தோற்றத்தின் காலம் கி.மு. 3700 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தைச் சேர்ந்த, இந்தியாவிலுள்ள முக்கியமான தொல்லியல் களமாக இது கருதப்படுகின்றது.[1] 1954 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இவ்விடத்தில், 1954-ஆம் ஆண்டு முதல் 1963-ஆம் ஆண்டு முடிய அகழ்வாய்வுகள், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினால் நடத்தப்பட்டது.[2][3]
அமைவிடம்
அகமதாபாத் மாவட்டத்தின் தோல்கா தாலுகாவில் உள்ள சரக்வாலா கிராமத்தின் அருகில் அமைந்துள்ளது. அகமதாபாத் நகரத்திலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் லோத்தல் அமைந்துள்ளது.
அருங்காட்சியகம்
இந்தியத் தொல்லியல் ஆய்வகம், லோத்தல் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களைக் கொண்டு அகமதாபாத் நகரத்தில் லோத்தல் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைத்துள்ளது [3][4] இந்தியத் தொல்லியல் ஆய்வகம்
இவற்றையும் பார்க்கவும்
- தொல்லியல் அருங்காட்சியகம், லோத்தல்
- காளிபங்கான்
- ஹரப்பா
- தோலாவிரா
- இராக்கிகர்கி
- மொஹெஞ்சதாரோ
- மெஹெர்கர்
- சிந்துவெளி நாகரிகம்
- சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- ANCIENT LOTHAL
- The Discovery of Lothal
- லோத்தல், தொல்லியல் நகரம் – காணொலி
- Lothal A Documentary, காணொலி