மஸ்கத்
Jump to navigation
Jump to search
மஸ்கத் مسقط Masqaṭ | |
|---|---|
| Muscat | |
| முத்திரா, மஸ்கட் முத்திரா, மஸ்கட் | |
|
மஸ்கத்-இன் கொடி கொடி | |
| நாடு | படிமம்:Flag of Oman.svg ஓமான் |
| ஓமானிய நகரங்கள் | மஸ்கத் |
| அரசு | |
| • வகை | முடியாட்சி |
| • சுல்த்தான் | காபூஸ் இப்னு சஈத் ஆலு சஈத் |
| பரப்பளவு | |
| • மாநகரம் | 3,500 km2 (1,400 sq mi) |
| மக்கள்தொகை (2008) | |
| • பெருநகர் | 10,90,797 |
| நேர வலயம் | ஒசநே+4 (ஓமானிய நேரம்) |
| இணையதளம் | http://www.omanet.om |
மஸ்கத் (Muscat, (அரபு: مسقط) என்பது ஓமானின் மிகப்பெரிய நகரமும், அந்நாட்டின் தலைநகரமும் ஆகும். இதன் மக்கள் தொகை 1,090,797 (2008) இல்) ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 1500 கி.மீ.². இந்நகரம் கிபி முதலாம் நூற்றாண்டில் இருந்து மேற்குலகிற்கும், கிழக்குலகிற்கும் இடையில் ஒரு வணிகத் துறைமுகமாக இருந்து வந்துள்ளது. பல்வேறு பழங்குடியினரால் ஆளப்பட்டு வந்த இந்நகரம் பின்னர் பாரசீகம் மற்றும் போர்த்துக்கல் போன்ற ஆதிக்கவாதிகளாலும் ஆளப்பட்டது. 18ம் நூற்றாண்டளவில் இது ஒரு பிராந்திய வல்லரசாகத் திகழ்ந்தது. அக்காலத்தின் இதன் ஆதிக்கம் கிழக்கு ஆப்பிரிக்கா, சன்சிபார் ஆகிய இடங்களுக்கும் பரவி இருந்தது.