மன்னர் வகையறா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மன்னர் வகையறா
இயக்கம்பூபதி பாண்டியன்
தயாரிப்புவிமல்
கதைபூபதி பாண்டியன்
இசைஜேக்ஸ் பெஜாய்
நடிப்புவிமல்
ஆனந்தி
பிரபு
ஒளிப்பதிவுபி. ஜி. முத்தையா
சூரஜ் நல்லுசாமி
படத்தொகுப்புகோபி கிருஷ்ணா
கலையகம்ஏவி3 சினிமாஸ்
விநியோகம்சினிமா சிட்டி
வெளியீடுசனவரி 26, 2018 (2018-01-26)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மன்னர் வகையறா (Mannar Vagaiyara) பூபதி பாண்டியன் இயக்கத்தில், விமல் தயாரிப்பில், விமல், ஆனந்தி, பிரபு ஆகியோரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் தமிழ் நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படம் ஜேக்ஸ் பிஜோய் இசையில், பி. ஜி. முத்தையா, சூரஜ் நல்லுசாமி ஆகியோரின் ஒளிப்பதிவில் சனவரி 26, 2018இல் திரையரங்குகளில் வெளியானது. [1]

நடிப்பு

கதை

சட்டப்படிப்பிற்கு இறுதித்தேர்வினை எழுதி, தேர்வு முடிவிற்குக் காத்திருக்கும் மாணவன் மதியழகன் (விமல்). மதியழகனுக்கு இளையராணியைக் (ஆனந்தி) கண்டவுடன் காதல். மதியழகனின் அப்பா பிரபு ஊரிலேயே, நல்ல மனிதர். ஊரில் எழும் சிக்கல்களுக்காகப் போராடுபவர்.[2] மதியழகனின் அண்ணன் அறிவழகன் (கார்த்திக் குமார்) பக்கத்து ஊரில் இருக்கும் கலையரசியைக் காதலிக்கிறார். கலையரசிக்கு திருமணம் முடிவுசெய்யப்பட, அதைக்கேள்விப்பட்டு பூச்சிக்கொல்லியைக் குடித்துவிடும் அறிவழகனைக் காப்பாற்றி, அந்தப் பெண்ணையும் திருமண மண்டபத்தில் இருந்து அழைத்து வந்து திருமணம் செய்து வைக்கிறார் மதியழகன். அறிவழகன்-கலையரசியை இரு வீட்டாரும் ஏற்றுக்கொள்ள மறுக்க, அவர்களைத் தனிவீட்டில் குடி வைக்கிறார் மதியழகன். பிறகு பல முயற்சிகளை எடுத்து இரண்டு குடும்பத்தினரையும் சேர்த்து வைக்கிறார். மதியழகனுக்கு இளையராணியைக் (ஆனந்தி) கண்டவுடன் ஏற்பட்ட காதல் என்னவானது? மூன்று குடும்பங்களுக்குள் எழும் முரண்பாடுகள் எப்படிக் களையப்பட்டன? என்பதே கதை.[3][4]

இசை

இத்திரைப்படத்தில் ஐந்து பாடல்களுக்கான இசை, பின்னணி இசை ஆகியப்பணிகளை ஜேக்ஸ் பிஜோய் மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கான பாடல்களை பூபதி பாண்டியனும், மணி அமுதவனும் எழுதியுள்ளனர்.

சான்றுகள்

"https://tamilar.wiki/index.php?title=மன்னர்_வகையறா&oldid=36348" இருந்து மீள்விக்கப்பட்டது