மண்மங்கலம் வட்டம்
Jump to navigation
Jump to search
மண்மங்கலம் வட்டம், தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் புதிதாக நிறுவப்பட்ட ஆறாவது வருவாய் வட்டம் ஆகும்.[1] இவ்வட்டம் கரூர் வட்டத்தின் வடக்கில் உள்ள சில பகுதிகளைக் கொண்டு 12 பிப்ரவரி 2014 நிறுவப்பட்டது.[2] மண்மங்கலம் வட்டம் 326 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. மண்மங்கலம் வட்டத்தின் மக்கள்தொகை 1.65 இலட்சம் ஆகும். [3]
நிர்வாகம்
இவ்வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் மண்மங்கலத்தில் செயல்படுகிறது. மண்மங்கலம் வட்டம் வாங்கல், மண்மங்கலம் மற்றும் தாளப்பட்டி என 3 உள்வட்டங்கள் எனும் பிர்காக்களும், 21 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[4]
மண்மங்கல வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
வாங்கல் துணை வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- நஞ்செய் கடம்பங்குறிச்சி
- புஞ்செய் கடம்பங்குறிச்சி
- நன்னியூர்
- வாங்கல்
- குப்புச்சிப்பாளையம்
மண்மங்கலம் துணை வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- மண்மங்கலம்
- ஆத்தூர்
- காதப்பாறை
- மின்னாம்பள்ளி
- நெரூர் (வடபாகம்)
- நெரூர் (தென்பாகம்)
- அச்சமாபுரம்
- சோமூர்
- கோயம்பள்ளி
- பஞ்சமாதேவி
தாளப்பட்டி துணை வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ஆண்டாங்கோயில் (கிழக்கு)
- ஆண்டாங்கோயில் (மேற்கு)
- கருப்பம்பாளையம்
- அப்பிப்பாளையம்
- பள்ளபாளையம்
- தாளப்பட்டி