பிரசன்னா ஜி. கே.

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பிரசன்னா ஜி. கே.
பிறப்பு16 திசம்பர் 1986 (1986-12-16) (அகவை 37)
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்சென்னை கிறித்துவக் கல்லூரி
பணிதிரைப்படத் தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2010-தற்போது வரை

பிரசன்னா ஜி. கே. (Prasanna GK) என்பவர் ஒரு இந்திய திரைப்பட படத் தொகுப்பாளர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் திரைப்படங்களில் பணிபுரிகிறார். இவர் திரைப்பட படத்தொகுப்பாளர் ஏ. ஸ்ரீகர் பிரசாத்தின் உதவியாளராக இருந்தவர் ஆவார். இவரை பாலாஜி மோகன் மாரி படத்தில் அறிமுகப்படுத்தினார்.

தொழில்

பிரசன்னா ஜி. கே [1] சென்னை கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்ற பின்னர், எல். வி. பிரசாத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி அகாதமியில் படத்தொகுப்பு மற்றும் ஒலி வடிவமைப்பில் பட்டயப் படிப்பை முடித்தார். பின்னர் படத்தொகுப்பாளர்கள் லியோ ஜான் பால் மற்றும் டி. எஸ். சுரேஷ் ஆகியோரிடம் பிரசன்னா உதவியாளராக இருந்தார். பின்னர் ஏ. ஸ்ரீகர் பிரசாத்திடம் உதவியாளராக இணைந்தார். ஆரம்பம், ஃபைண்டிங் ஃபன்னி, யான் போன்ற படங்களில் ஸ்ரீக்கர் பிரசாத்தின் உதவியாளராக பணியாற்றினார். பின்னர் பாலாஜி மோகனின் மாரி மூலம் இவர் படத்தொகுப்பாளராக அறிமுகமானார். வார்ப்புரு:எப்பொழுது தனுஷ் இயக்குனராக பணியாற்றிய பவர் பாண்டியைத் தவிர, தற்போது செல்வராகவன் நெஞ்சம் மறப்பதில்லை [2] மற்றும் மன்னவன் வந்தானடி ஆகிய படங்களில் பணியாற்றி வருகிறார்.

திரைப்படவியல்

படத் தொகுப்பு

விசை
Films that have not yet been released இதுவரை வெளியிடப்படாத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு படம் குறிப்புகள்
2015 மாரி
2016 அவியல்
2017 பவர் பாண்டி
ரங்கூன்
மரகத நாணயம்
யானும் தீயவன்
வேலையில்லா பட்டதாரி 2 இருமொழி படம் (தமிழ், தெலுங்கு )
2018 கஜினிகாந்த்
மாரி 2
2019 சத்ரு
2019 இஃக்லூ
2020 டாணா
சர்பத்
எஃப். ஐ. ஆர்
2021 டி 43 (2021 படம்) / டி 43 2021 நானே வருவன் 2021 நட்சத்திரம் 2021 யாக்கை திரு

விருதுகள்

ஆண்டு விருது படம் முடிவு மேற்கோள்
2021 சிறந்த படத்தொகுப்பாளருக்கான பிளாக்ஷீப் டிஜிட்டல் விருதுகள் டிப்பிள்ஸ் (2020 வலைத் தொடர்) Won [3]

குறிப்புகள்

 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பிரசன்னா_ஜி._கே.&oldid=23726" இருந்து மீள்விக்கப்பட்டது