அவியல் (திரைப்படம்)
அவியல் | |
---|---|
இயக்கம் | அல்போன்ஸ் புத்தரன், ஷமீர் சுல்தான், மோஹித் மெஹ்ரா, லோகேஷ் கனகராஜ் |
தயாரிப்பு | கார்த்திக் சுப்புராஜ் |
கதை | அல்போன்சு புத்திரன் சமீர் சுல்தான் மோகிட் மீரா லோகேஷ் கனகராஜ் குரு சமரன் |
இசை | ராஜேஷ் முருகேசன் ஜாவித் ரியாஸ் சமீர் சுல்தான் விஷால் சந்திரசேகர் அந்தோணிதாசன் ரகு தீஜித் |
நடிப்பு | நிவின் பாலி பாபி சிம்ஹா அம்ருதா சீனிவாசன் ராஜிவ் கோயிந்த பிள்ளை அர்ஜூனன் ராமச்சந்திரன் துரைராஜ் தீபக் பரமேஷ் |
ஒளிப்பதிவு | மதன் குனதேவா சூர்யா ராஜேந்திரன் எஸ். கே. செல்வக்குமார் குகன் பழனி ஆனந்த் சந்திரன் |
படத்தொகுப்பு | அணில் கிருஷ்ணன் அல்போன்சு புத்திரன் ரோகித் பிலோமின் ராஜ் பிரசன்னா ஜி. கே. பூபதி செல்வராஜ் |
கலையகம் | ஸ்டோன் பென்ச் கிரியேசன் பீச் பிளக்ஸ் |
விநியோகம் | தேனாண்டாள் படங்கள் |
வெளியீடு | மார்ச்சு 11, 2016 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அவியல் என்பது 2016 ஆம் ஆண்டு இந்தியத் தமிழ் மொழி சுயாதீன தொகைத் திரைப்படமாகும். இத்திரைப்படம் அல்போன்ஸ் புத்தரன், ஷமீர் சுல்தான், மோஹித் மெஹ்ரா, லோகேஷ் கனகராஜ், மற்றும் குரு ஸ்மரன் ஆகிய ஐந்து இயக்குனர்களால் எழுதப்பட்டு இயக்கப்பட்டது. நடிகர்கள் நிவின் பாலி, பாபி சிம்ஹா, அம்ருதா சீனிவாசன், ராஜீவ் கோவிந்த பிள்ளை, அர்ஜுனன், ராமச்சந்திரன் துரைராஜ், தீபக் பரமேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.
கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் மற்றும் பெஞ்ச் ஃப்ளிக்ஸ் ஆகியவற்றின் கீழ் தயாரித்தார், இது பெஞ்ச் டாக்கீஸ் - தி ஃபர்ஸ்ட் பெஞ்சிற்குப் பிறகு அவர்களின் இரண்டாவது தயாரிப்பாகும்.[1] இந்த படத்தை நவம்பர் 2015 இல் தேனாண்டல் பிலிம்ஸ் விநியோகித்தது. இத்திரைப்படம் 11 மார்ச் 2016 அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டது.
நடிகர்கள்
ஸ்ருதி பெதம் | கலாம் | கண்ணீர் அஞ்சலி | எலி |
---|---|---|---|
|
|
|
|
ஒலிப்பதிவு
இத்திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருந்தார். பாடல்களை ஷமீர் சுல்தான் எழுதியிருந்தார். ஜாவேத் ரியாஸ், ஷம்மீர் சுல்தான், விஷால் சந்திரசேகர், அந்தோணி தாசன் மற்றும் ரகு தீட்சித் ஆகியோரால் பாடப்பட்டன.
சந்தைப்படுத்தல் மற்றும் வெளியீடு
இந்தத் திரைப்படம் அவியல் 10 ஜனவரி 2016 அன்று 13 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது . [2] திரைப்படத்திற்கு ரசிகர்களின் நற்மதிப்பினை பெற்றபின்பு விஜய் சேதுபதி மற்றும் பாபி சிம்ஹா ஆகியோரால் 22 ஜனவரி 2016 இல் படத்தின் முதல் டீசர் வெளியிடப்பட்டது. இந்த படம் தமிழ்நாட்டில் 70 க்கும் மேற்பட்ட திரைகளிலும், கேரளாவில் 30 திரைகளிலும், 11 மார்ச் 2016 அன்று அமெரிக்காவில் ஒரு சில திரைகளிலும் திரையிடப்பட்டது. [3]
குறிப்புகள்
- ↑ Nath, Parshathy J. (2015-03-04). "Short cut to success". https://www.thehindu.com/features/metroplus/society/short-cut-to-success/article6958962.ece.
- ↑ James, Anu (2016-01-23). "First look poster, teaser of Karthik Subbaraj's anthology film 'Aviyal' released [PHOTO+VIDEO"] (in en). https://www.ibtimes.co.in/karthik-subbaraj-releases-first-look-poster-anthology-film-aviyal-photo-665052.
- ↑ Subramanian, Anupama (2016-03-09). "Aviyal to arrive soon!" (in en). https://www.deccanchronicle.com/entertainment/kollywood/090316/aviyal-to-arrive-soon.html.