மரகத நாணயம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மரகத நாணயம்
இயக்கம்ஏ.ஆர்.கே. சரவணன்
தயாரிப்புஜி. டில்லிபாபு
திரைக்கதைஏ.ஆர்.கே. சரவணன்
இசைடிபி நியான் தாமஸ்
நடிப்புஆதி
நிக்கி கல்ரானி
ஆனந்த் ராஜ்
ராம்தாஸ்
டேனியல் போப்
ஒளிப்பதிவுபிவி சங்கர்
படத்தொகுப்புபிரசன்னா ஜி. கே.
கலையகம்ஆக்சிஸ் பிலிம் பேக்டரி
வெளியீடுசூன் 16, 2017 (2017-06-16)
ஓட்டம்132 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மரகத நாணயம் (ஆங்கிலம்: Maragadha Naanayam) என்பது 2017-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். கதை மற்றும் இயக்கம் ஏ.ஆர்.கே. சரவணன். இப்படத்தில் கதாநாயகனாக ஆதி நடித்துள்ளார். இப்படத்தின் முன்தோற்றம் மார்ச் 11 அன்று வெளியிடப்பட்டது.[1] இப்படம் தெலுங்கில் மரகதமணி என்ற பெயரில் வெளியிட்ப் பட்டுள்ளது.[2] இத்திரைப்படம் சிறந்த படமாக மக்களிடையே விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

நடிகர்கள

  • ஆதி
  • நிக்கி கல்ராணி
  • ஆனந்தராஜ்
  • ராம்தாஸ்
  • மைம் கோபி
  • கோட்டா சினிவாச ராவ்
  • எம். எஸ். பாஸ்கர்
  • காளி வெங்கட்
  • சங்கிலி முருகன்
  • கார்திசனா

தயாரிப்பு

மே 2016 இல், அறிவிக்கப்பட்ட இத்திரைப்படம் ஏ.ஆர்.கே சரவணனால் இயக்க தீர்மானிக்கப்பட்டது. இவர் முண்டாசுபட்டி இயக்கிய ராம்குமாரிடம் துணை இயக்குநராக பணியாற்றியவர். ஆதி நடித்த யாகாவாராயினும் நா காக்க படத்தை அடுத்து நடித்த படம் இது. [3][4] படத்தின் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2016 மே 26 இல் துவங்கி ஆகஸ்ட் 10ல் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது.

கதை

பல நூற்றாண்டுகளுக்கு முன்னாடி வாழ்ந்த இரும்பொறை என்கிற மன்னனுக்கு சொந்தமான மரகத நாணயம் என்கிற அதிசயக் கல் இந்த நூற்றாண்டைச் சேர்ந்த மனிதர்கள் கைகளில் கிடைக்கிறது. அந்தக் கல் யார் கைகளிலெல்லாம் கிடைக்கிறதோ அவர்கள் வரிசையாகக் கொல்லப்பட அந்த சாவுக்குக் காரணம் இறும்பொறை அரசனுடைய ஆவி என்று வதந்திகள் உலவ ஆரம்பிக்கிறது. கதாநாயகன் ஆதி தன் பணத் தேவைக்காக அந்தக் கல்லை எடுக்க முயற்சி செய்கிறார். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதே கதை.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மரகத_நாணயம்_(திரைப்படம்)&oldid=36261" இருந்து மீள்விக்கப்பட்டது