இந்திய நாடாளுமன்றத்தின் பத்தாவது மக்களவை 1991 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. இவர்கள் 1991 மே-ஜூன் மாதங்களில் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலின் போது தேர்ந்தெடுக்கப்பட்டனர். மக்களவை என்பது இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையாகும்.[1]
இந்திய தேசிய காங்கிரசின் பி. வி. நரசிம்ம ராவ் 21 ஜூன் 1991 முதல் 16 மே 1996 வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரசு 244 இடங்களை வென்றது. இது முந்தைய 9வது மக்களவையில் இ. தே. கா. பெற்ற எண்ணிக்கையினை விட 47 பேர் அதிகம்.[1][2][3]
இதனையடுத்து 11வது மக்களவை 1996 இந்தியப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு 15 மே 1996 அன்று அமைக்கப்பட்டது.