நாட்டுப்புறப் பாட்டு
நாட்டுப்புறப் பாட்டு | |
---|---|
இயக்கம் | கஸ்தூரி ராஜா |
தயாரிப்பு | விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா |
கதை | கஸ்தூரி ராஜா |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கிச்சாஸ் |
படத்தொகுப்பு | எல்.கேசவன் |
கலையகம் | கஸ்தூரி மங்கா கிரியேஷன்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 9, 1996 |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நாட்டுப்புறப் பாட்டு (Naattupura Paattu) என்பது 1996 ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜாவின் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இந்த திரைப்படத்தில் சிவகுமார், செல்வா, குஷ்பூ, மனோரமா, கவுண்டமணி, செந்தில் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த படம் விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா தயாரிப்பில், இளையராஜா இசையில், 9 பிப்ரவரி 1996 ஆம் ஆண்டு வெளியானது.[2]
கதைச்சுருக்கம்
பாரிஜாதம் (குஷ்பூ) ஒரு பிரபல கரகாட்டம் ஆடும் கலைஞர். திருமணத்திற்கு பிறகு ஆட அனுமத்திக்கும் மாப்பிள்ளை தான் வேண்டும் என்று பாரிஜாதத்தின் தாய் பட்டம்மா எதிர்பார்த்தார். அதன் படியே, மற்றோரு கரகாட்ட கலைஞரான பழனிசாமியை (சிவகுமார்) மணந்தாள் பாரிஜாதம். பொறுப்பில்லாமல் இருக்கும் பழனிசாமியின் தம்பி கோட்டைசாமியை, பாரிஜாதம் நல்வழிப்படுத்துகிறாள். கோட்டைசாமிக்கும் மாலாவிற்கும் திருமணம் ஆனது. பணக்கார நாயக்கருக்கு (வினு சக்ரவர்த்தி) பாரிஜாதத்திற்கும் தவறான தொடர்பு இருப்பதாக பரவிய வதந்தியை தாங்க முடியாமல், பாரிஜாதத்தைப் பிரிந்து வாழ்கிறான் பழனிசாமி.
பிறகு ஒரு நாள், காட்டமுத்துவின் தங்கை மானபங்கப்படுத்தப்பட்டதால், அவள் தற்கொலை செய்துகொள்கிறாள். அதற்கு காரணமானவர்களை கோட்டைசாமி தட்டிக்கேட்டதால், திருவிழாவில் ஆடும் வாய்ப்பு தட்டிப்போனது. அதனால், கோட்டைசாமியும் மாலாவும் துயரத்திற்கு உள்ளானார்கள். அவ்வாறாக ஒரு சமயம், ஆட்டத்தின் பொழுதே மாலா இறந்து விடுவதால், அவளின் இழப்பை தாங்காமல் கோட்டைசாமி மதுவிற்கு அடிமையாகிறான். பழனிசாமி தன் குழந்தையை தனியே வளர்த்துவர, பாரிஜாதம் கரகாட்டம் ஆடுவதை நிறுத்த நேரிடுகிறது.
பல ஆண்டுகளுக்கு பிறகு, பழனிசாமியின் மகன் வேல்பாண்டி (பிரேம்) அமராவதியை (அனுஷா) காதலிக்கிறான். கோட்டைசாமி தன் எதிரிகளை பழிவாங்கினானா? பாரிஜாதமும் பழனிசாமியும் இணைந்தனரா? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.
நடிகர்கள்
- சிவகுமார் - பழனிசாமி
- செல்வா - கோட்டைசாமி
- குஷ்பூ - பாரிஜாதம்
- மனோரமா - பட்டம்மா
- கவுண்டமணி - கட்டமுத்து
- செந்தில் - சின்ன கருப்பன்
- வினு சக்ரவர்த்தி - நாயக்கர்
- குமரிமுத்து - பட்டம்மாவின் அப்பா
- பிரேம் குமார் - வேல்பாண்டி
- அனுஷா - அமராவதி
- அபிராமி - மாலா
- சார்லி -
- ஜெய்கணேஷ்
- சண்முகசுந்தரம்
- அன்வர் அலி - மைனர்
- தாஜ் கான்
- வெங்கட்
- இடிச்சப்புளி செல்வராசு
- கருப்பு சுப்பையா
- பெரிய கருப்பு தேவர்
- ஜான் பாபு - "ஒத்த ரூவா" பாடல் நடனக் கலைஞர்
ஒலிப்பதிவு
கஸ்தூரி ராஜா எழுதிய பாடல் வரிகளுக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.[3][4]"ஒத்த ரூபா" என்ற பாடல் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
- ↑ Saravanan, T. (13 November 2015). "In love with village vistas". The Hindu இம் மூலத்தில் இருந்து 24 January 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180124124506/http://www.thehindu.com/features/metroplus/society/in-love-with-village-vistas/article7872936.ece.
- ↑ "A-Z Continued..." இம் மூலத்தில் இருந்து 27 September 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927193804/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz-4.htm.
- ↑ "Nattupura Pattu" (in en) இம் மூலத்தில் இருந்து 12 July 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230712082359/https://avdigital.in/products/nattupura-pattu.
- ↑ "Nattupura Pattu". 16 September 2017 இம் மூலத்தில் இருந்து 12 July 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230712082400/https://www.jiosaavn.com/album/nattupura-pattu/LAZFwB8DMKk_.
வெளி இணைப்புகள்
- 1996 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்
- சிவகுமார் நடித்த திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- குஷ்பூ நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- சார்லி நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்