தொண்டன் (1995 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தொண்டன்
இயக்கம்கார்வண்ணன்
தயாரிப்புஆர். கே. பிலிம் சர்க்யூட்
கதைகார்வண்ணன்
தீரன் (வசனம்)
இசைராஜன் சர்மா
நடிப்பு
ஒளிப்பதிவுசுந்தர்ராஜன்
படத்தொகுப்புசாய் நாகேஷ்
கலையகம்ஆர். கே. பிலிம் சர்க்யூட்
வெளியீடுமார்ச்சு 10, 1995 (1995-03-10)
ஓட்டம்125 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

தொண்டன் (Thondan) 1995 ஆம் ஆண்டு முரளி, ரோகிணி மற்றும் ச. ராமதாசு நடிப்பில், கார்வண்ணன் இயக்கத்தில், ஆர். கே. பிலிம் மேக்கர் சர்க்யூட் தயாரிப்பில், ராஜன் சர்மா இசையில் வெளியான தமிழ் திரைப்படம்.[1][2][3][4][5]

கதைச்சுருக்கம்

கோபக்கார இளைஞரான ஜீவா (முரளி) ஒரு ஆட்டோ ஓட்டுநர். அவன் தந்தை அவனை சிறுவயதில் பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்பியதால் அவன் படிக்கவில்லை. தான் படிக்கவில்லை என்பதை அவன் தாழ்வு மனப்பான்மையாக எண்ணி வருந்தினான். எனவே குழந்தைகள் வேலை செய்வதைக் கண்டால் அவன் அவர்களைப் பள்ளியில் சேர்த்து படிக்கவைத்தான். ஜீவாவின் பால்ய நண்பனான இளவேனில் (ஆனந்தராஜ்) நன்கு படித்து காவல் துறை அதிகாரியாகிறான்.

பெரியநாயகம் (ஞானவேல்) தன் நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி சட்ட விரோத தொழில்களைச் செய்துவருகிறான். அவனுக்கு அமைச்சரின் (மணிவண்ணன்) ஆதரவு இருப்பதால் இளவேனிலால் அவனைக் கைது செய்ய முடியவில்லை.

மருத்துவரான சஞ்சீவி ராமன் (ச. ராமதாசு) குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்தக்கூடாது என்பதற்காக போராடிவருபவர். அவர் தொடுத்த வழக்கின் காரணமாக குழந்தைத் தொழிலாளர்களை எந்த நிறுவனமும் பணியமர்த்தக் கூடாதென்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது. தங்கள் தொழில் பாதிக்கக் காரணமான சஞ்சீவி ராமனைக் கொல்ல பெரியநாயகமும் மற்ற நிறுவன உரிமையாளர்களும் திட்டமிடுகின்றனர். இவர்கள் திட்டமிடுவதைப் பார்த்துவிடும் செல்வியை (வினோதினி) அங்கேயே கொல்கின்றனர். அந்தக் கொலையைக் கண்ட நூலகர் சுபாவைக் (ரோகிணி) கொல்ல துரத்துகிறார்கள். அங்குவரும் ஜீவா அவளைக் காப்பாற்றுகிறான். அதன்பின் என்ன நடந்தது என்பது மீதிக்கதை.

நடிகர்கள்

இசை

படத்தின் இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ராஜன் சர்மா[6] .

வ.எண் பாடல் பாடகர்கள் காலநீளம்
1 லிட்டாளா மனோ, சித்ரா 4:41
2 மனமிருந்தால் மனோ 3:53
3 எதுக்கு சிலித்து சுரேஷ் பீட்டர்ஸ் 4:40
4 சின்ன சின்ன மின்மினி 4:41
5 நட்டநடு முரளி 3:52

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=தொண்டன்_(1995_திரைப்படம்)&oldid=34440" இருந்து மீள்விக்கப்பட்டது