தொகுப்பு உடுக்குறி (தமிழ் நடை)
நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறையைக் குறிக்கும்.[1][2][3]
இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் (punctuation marks) பெரும் பங்கு வகிக்கின்றன. இவை பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.
நிறுத்தக்குறிகளுள் ஒன்று உடுக்குறி (asterisk) ஆகும்.
உடுக்குறி (*)
பக்கத்தின் அடியில் சிறப்புத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்ட உடுக்குறி பயன்படுகிறது.
- எடுத்துக்காட்டு:
- ஒரு நாடோடியின் கதை
- கா. மலைச்சாமி *
(பக்கத்தின் அடியில் உடுக்குறி இட்டு, கீழ்வரும் குறிப்பு தரப்படுகிறது)
ஆசிரியர் தம் மறைவுக்கு முன் இறுதியாக அனுப்பிய படைப்பு.
சான்றுகள்
1) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.
மேற்கோள்கள்
- ↑ "asterisk" பரணிடப்பட்டது 2015-12-08 at the வந்தவழி இயந்திரம், American Heritage Dictionary
- ↑ ἀστερίσκος பரணிடப்பட்டது 2021-01-17 at the வந்தவழி இயந்திரம், Henry George Liddell, Robert Scott, A Greek-English Lexicon, on Perseus
- ↑ Kathleen McNamee, "Sigla," in Sigla and Select Marginalia in Greek Literary Papyri (Brussels: Fondation Egyptologique Reine Elisabeth, 1992), 9.