தனி மேற்கோள்குறி (தமிழ் நடை)
Learn more இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நல்ல தமிழில் எழுத விரும்புவோர் அதற்கேற்ற தமிழ் நடையைக் கையாளல் வேண்டும். மொழி நடை என்பது ஒழுங்கான அமைப்பில் எழுதுவதற்கான நெறிமுறையைக் குறிக்கும்.
இத்தகைய நெறிமுறையில் நிறுத்தக்குறிகள் (punctuation marks) பெரும் பங்கு வகிக்கின்றன. பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளை உரைநடையில் காட்டவும், செய்திப் பரிமாற்றத்தில் குழப்பம் ஏற்படாமல் தவிர்க்கவும், கருத்துத் தெளிவு துலங்கவும், படிப்பவரின் அக்கறையை தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் செல்லவும் பயன்படும் குறிகளாகும்.
நிறுத்தக்குறிகளுள் ஒன்று தனி மேற்கோள்குறி (apostrophe) ஆகும். இது ஒற்றை மேற்கோள்குறி போலவே தோற்றமளித்தாலும் பயன்பாட்டால் வேறுபடுகிறது.
தனி மேற்கோள்குறி (')
1) எண் அல்லது எழுத்து விடுபடுவதைக் குறிக்கத் தனி மேற்கோள்குறி பயன்படுகிறது.
- எடுத்துக்காட்டுகள்:
- 27 ஏப்ரல் '88
- (பேச்சு வழக்கில்): ஆமாம்'பா (ஆமாம் அப்பா)
2) நீட்டலளையில் அடி என்பதைக் குறிக்க தனி மேற்கோள்குறி பயன்படுகிறது. (விரலளவு [அங்குலம்] குறிக்க இரட்டை மேற்கோள்குறி பயன்படுகிறது).
- எடுத்துக்காட்டு:
- அவர் உயரம் 5' 10 ஆகும். (= 5 அடி, 10 விரலளவு [அங்குலம்]).
சான்றுகள்
1) இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனம் (மைசூர்), மொழி அறக்கட்டளை (சென்னை), தமிழ்ப் பல்கலைக்கழகம் (தஞ்சாவூர்), தமிழ் நடைக் கையேடு, சென்னை: அடையாளம், 2004.