தேனி ஈஸ்வர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேனி ஈஸ்வர்
Theni Eswar-5.jpg
பிறப்புஈஸ்வரன் ராமர்
தமிழ்நாடு தேனி மாவட்டம்
கல்விதானியங்கி மின்னியலில் பட்டயப் படிப்பு
பணிஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
2011–தற்போது வரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்மாமன்னன்,பேரன்பு, மேற்குத் தொடர்ச்சி மலை, கர்ணன், பேச்சுலர், நண்பகல் நேரத்து மயக்கம்
விருதுகள்1

தேனி ஈஸ்வர் என்ற திரைப்பெயர் மூலம் அறியப்படும், ஈஸ்வரன் ராமர் என்பவர் ஒரு இந்திய ஒளிப்பதிவாளர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் திரைப்படங்கள் மற்றும் மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார்.

துவக்க கால வாழ்க்கை

ஈஸ்வரன் தேனியில் பள்ளிப்படிப்பை முடித்து தானியங்கி மின்னியலில் பட்டயப் படிப்பை முடித்தார். இவரது கல்லூரி நாட்களில் இவர் ஒளிப்படம் எடுக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தார். அது ஒரு தொழிலாக ஆனது. தெரு ஒளிப்படம் எடுப்பதற்காக கோடாக் விருதைப் பெற்றார். இவர் சென்னைக்கு செல்வதற்கு முந்தைய தனது ஆரம்பகால வாழ்க்கையின் பெரும்பகுதியை தேனியில் கழித்தார்.

திரைப்பட வாழ்க்கை

ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்க ஈஸ்வரன் சென்னைக்குச் சென்றார்.

கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், தமிழாற்றுப்படை உள்ளிட்ட வைரமுத்து நூல்களுக்கு ஈஸ்ரன் ஒளிபடங்களையும் எடுத்தார்.

உதவி ஒளிப்பதிவாளராக வேலை தேடும் போது, ஆனந்த விகடனில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியுடன் இணைந்து ரூட் பஸ் என்ற தொடரை எழுதினார். மேலும் இயற்கை எழில் கொஞ்சும் பயணப் பாதைகள், இடங்கள் மற்றும் உள்ளூர்வாசிகளைப் ஒளிப்படம் எடுக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.

சிவப்பதிகாரம், கற்றது தமிழ், வெண்ணிலா கபடிகுழு மற்றும் பல படங்களை ஒளிப்பதிவு செய்தார். வெண்ணிலா கபடிகுழு படத்தின் ஒளிப்படப்பிடிப்பின் போது, இயக்குனர் சுசீந்திரன் தனது அடுத்த படமான அழகர்சாமியின் குதிரைக்கு ஒளிப்பதிவாளராக இவரை நியமித்தார். பின்னர் இயக்குனர்கள் பாலா, ராம், கௌதம் மேனன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். இவர் தனது இரண்டாவது படமான தரமணி திரைப்படத்தில் ராமுடன் பணிபுரிந்தார். மேலும் கௌதம் மேனனின் அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் கூடுதல் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து புகழ் பெற்றார்.

2018ல் வெளியான பாலாவின் நாச்சியார் படத்தையும் இவர் படமாக்கினார். அதே ஆண்டில் இவர் அறிமுக இயக்குனர் லெனின் பாரதியுடன் இணைந்து பணியாற்றிய மற்றொரு திரைப்படம் மேற்கு தொடர்ச்சி மலை . நோர்வே தமிழ்த் திரைப்பட விழா விருதுகள்[1] மற்றும் அந்தத் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதைப் பெற்றார். ராம் இயக்கி மம்மூட்டி நடித்த பேரன்பு படத்தில் பணியாற்றினார். படம் பிப்ரவரி 2019 இல் வெளியானது. [2]

திரைப்படவியல்

இதுவரை வெளியாகாத படங்களைக் குறிக்கிறது
ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2011 அழகர்சாமியின் குதிரை தமிழ்
2017 தரமணி தமிழ்
2018 நாச்சியார் தமிழ்
மேற்கு தொடர்ச்சி மலை தமிழ்
2019 பேரன்பு தமிழ்
2020 பாவக் கதைகள் தமிழ் பிரிவு: லவ் பண்ணா உட்ரனும்
2021 ஏலே தமிழ்
கர்ணன் தமிழ்
பேச்சுலர் தமிழ்
2022 புழு மலையாளம் [3]
ஏஜென்ட் கண்ணாயிரம் தமிழ் ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயாவின் மறு ஆக்கம்
2023 நண்பகல் நேரத்து மயக்கம் மலையாளம்
மாமன்னன் தமிழ்
ஆபிரகாம் ஓஸ்லர் மலையாளம்
TBA வாழை தமிழ்
வடக்கன் தமிழ்

விருதுகளும் பரிந்துரைகளும்

ஆண்டு விருது வகை திரைப்படம் முடிவு குறிப்புகள்
2019 நோர்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் ஒளிப்பதிவு மேற்கு தொடர்ச்சி மலை|style="background: #9EFF9E; color: #000; vertical-align: middle; text-align: center; " class="yes table-yes2 notheme"|Won
2019 சைமா

தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்

ஒளிப்பதிவு பேரன்பு |style="background: #FFE3E3; color: black; vertical-align: middle; text-align: center; " class="no table-no2 notheme"|Nominated
2022 சைமா

தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்

ஒளிப்பதிவு கர்ணன் |style="background: #FFE3E3; color: black; vertical-align: middle; text-align: center; " class="no table-no2 notheme"|Nominated

மேற்கோள்கள்

  1. "‘Pariyerum Perumal’ bags Best Film award at Norway Tamil Film Festival" (in en). 2019-01-09. https://www.thenewsminute.com/article/pariyerum-perumal-bags-best-film-award-norway-tamil-film-festival-94760. 
  2. "Peranbu Review {4/5}: Peranbu is filled with poignant moments and superb performances". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/peranbu/movie-review/67750595.cms. 
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; :2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://tamilar.wiki/index.php?title=தேனி_ஈஸ்வர்&oldid=21351" இருந்து மீள்விக்கப்பட்டது