ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா
ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயான் (Agent Sai Srinivasa Athreya) 2019 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு நகைச்சுவை - திகில் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் நேர்மறையான விமர்சனங்கள் பெற்றது.[1][2]
ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா | |
---|---|
இயக்கம் | ஸ்வரூப் ஆரெஸ்ஜெ |
தயாரிப்பு | ராகுல் யாதவ் நக்கா |
கதை | ஸ்வரூப் ஆரெஸ்ஜெ |
திரைக்கதை | ஸ்வரூப் ஆரெஸ்ஜெ நவீன் பாலிசெட்டி |
இசை | மார்க்கே ராபின் |
நடிப்பு | நவீன் பாலிசெட்டி ஷ்ருதி ஷர்மா |
ஒளிப்பதிவு | சன்னி குரபதி |
படத்தொகுப்பு | அமித் திரிபதி |
வெளியீடு | 21 சூன் 2019 |
ஓட்டம் | 143 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | ௹ 5 கோடி [3] |
மொத்த வருவாய் | ௹ 20 கோடி[4] |
கதை
தனியார் துப்பறிவு மையம் நடத்தி வரும் சாய் ஸ்ரீனிவாசன் மற்றும் அவனது பெண் உதவியாளர் சினேகாவின் வசம் வருகிறது ஒரு புது வழக்கு. ஒரு பெண் காணாமற் போனதை அடுத்து, அவரைத் தேடத் தொடங்கும் சாய், விரைவில் அந்த மொத்த வழக்கும் அவனுக்கான பொறி என்று தெரிந்து கொள்கிறான். மூடநம்பிக்கைகளையும் அவற்றால் ஏற்படும் விளைவுகளையும் ஊக்குவிக்கப்படும் குற்றங்களையும் மையக்கருத்தாகக் கொண்டுள்ளது இத்திரைப்படம்..
நடிப்பு
- நவீன் பாலிசெட்டி
- சினேகா
- ஷ்ருதி ஷர்மா
இசை
இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் மார்க் கே ராபின். படத்தில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது.
தடப்பட்டியல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர் | நீளம் | |||||||
1. | "ஷெர்லாக் ஹோம்ஸ்" | அனுராக் குல்கர்னி | 4:06 |
வெளியீடு
2016 இல் இத்திரைப்படத்தின் திரைக்கதையை எழுதத் துவங்கி ஒரு திங்களில் கதை நிகழ்வுகளை வரிசைப்படுத்தி இருந்தேன். பின்னர், ஒரு மாத இடைவெளியில் 50 க்கும் மேற்பட்ட திகில் திரைப்படங்களை பார்த்து அலசி ஆராய்ந்து அவற்றில் இருந்து கற்று கொண்டேன். எப்படி ஒரு திகில் திரைப்படம் துவங்குகிறது, எங்கு சிக்கல் உருவாகிறது, எப்படி முடிக்கப்படுகிறது என்பதை கவனித்தேன். நான் பார்த்த திரைப்படங்கள் என் திரைப்படத்தின் திரைக்கதையை எழுதிட பேருதவி புரிந்தன.
என இயக்குனர் ஸ்வரூப் ஆரெஸ்ஜெ நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.[5]
இத்திரைப்படம் 21 சூன் 2019 அன்று வெளியானது. யூடியூபிலும் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஏஜெண்ட் சாய் என்கிற பெயரில் 23 சனவரி 2021 அன்று வெளியானது.[6][7]
மேற்கோள்கள்
- ↑ "ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா - பிலிம் கம்பேனியன் விமர்சனம்" இம் மூலத்தில் இருந்து 2020-05-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200514153820/https://www.filmcompanion.in/agent-sai-srinivasa-athreya-movie-review-naveen-polishetty.
- ↑ "ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா - தெலங்கானா டுடே". https://telanganatoday.com/agent-sai-srinivasa-athreya-to-release-on-june-21.
- ↑ Chowdhary, Y. Sunita (2019-09-24). "What ails the Telugu film industry?" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/telugu-film-industry-struggles-to-cap-budgets-owing-to-financial-indiscipline-and-high-remunerations/article29498429.ece.
- ↑ "2019లో భారీ వసూళ్లు రాబట్టిన సినిమాలివే.." (in te). 2019-12-31. https://www.sakshi.com/news/family/roundup-2019-special-story-tollywood-movies-1252065.
- ↑ "ஸ்வரூப் ஆரெஸ்ஜெ - வாக்ஸ் நேர்காணல்". https://www.voxspace.in/2019/09/07/voxtalks-with-swaroop-rsj/.
- ↑ "ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா - இந்தி மொழிமாற்றம்". https://www.youtube.com/watch?v=GVIkN8bv6FQ&t=1026s.
- ↑ "ஏஜெண்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா - தி ஹான்ஸ் இந்தியா". https://www.thehansindia.com/cinema/tollywood/agent-sai-srinivasa-athreya-censor-report-534432.