நாச்சியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நாச்சியார்
இயக்கம்பாலா
தயாரிப்புபாலா
கதைபாலா
இசைஇளையராஜா
நடிப்புஜோதிகா
ஜி. வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவுதேனி ஈஸ்வர்
படத்தொகுப்புசதீஸ் சூரியா
கலையகம்பி ஸ்டுயோஸ்
ஈஓஎன் ஸ்டுடியோஸ்
வெளியீடு16 பெப்ருவரி 2018
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாச்சியார் பாலாவின் இயக்கத்தில், ஜோதிகா, ஜி. வி. பிரகாஷ் குமார் உள்ளிட்டோரின் நடிப்பில் பிப்ரவரி 16, 2018இல் வெளியான தமிழ்திரைப்படம். இத்திரைப்படம் இளையாராஜாவின் இசையில், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில், சதீஸ் சூரியாவின் படத்தொகுப்பில் உருவாகி உள்ளது. இத்திரைப்படத்தின் உருவாக்கப்பணிகள் மார்ச் 2017இல் தொடங்கின.[1]

நடிப்பு

படப்பணிகள்

பிப்ரவரி 2017இல் பாலா இத்திரைப்படத்தின் உருவாக்கம் ஜோதிகாவின் நடிப்பில் ஒரு குற்றவியல் அதிரடிப்படமாக உருவாக உள்ளதை உறுதிப்படுத்தினார். நாச்சியார் பட உருவாக்கத்தின் பொருட்டு இயக்குநர் பாலா, யுவன் மற்றும் பிரகதி குருபிரசாத் நடித்த அவரது பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பை ஒத்திவைக்க முடிவு செய்தார்.[2] இத்திரைப்படத்தின் முன்னோட்டத்துளியினை நடிகர் சூர்யா வெளியிட்டார்.[3] இத்திரைப்படத்தின் முன்னோட்டத்துளியில் ஜோதிகாவின் ஒற்றைச்சொல் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.[4] இத்திரைப்படத்தின் முன்னோட்டம் சனவரி 15, 2018இல் வெளியானது.[5]

சான்றுகள்

  1. "Jyothika, G.V. Prakash to star in Bala's next". The Hindu. 2017-02-28. பார்க்கப்பட்ட நாள் 2017-04-22.
  2. "Jyothika in Bala's film". Deccanchronicle.com. பார்க்கப்பட்ட நாள் 2017-04-22.
  3. https://www.vikatan.com/news/cinema/107907-naachiyaar-teaser-released.html
  4. http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article21243141.ece
  5. http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article22441595.ece

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நாச்சியார்&oldid=34636" இருந்து மீள்விக்கப்பட்டது