பேச்சுலர் (2021 திரைப்படம்)
பேச்சுலர் | |
---|---|
இயக்கம் | சதீஷ் செல்வகுமார் |
தயாரிப்பு | ஜி. டில்லிபாபு |
கதை | சதீஷ் செல்வகுமார் |
இசை |
|
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | தேனி ஈஸ்வர் |
படத்தொகுப்பு | சான் லோகேஷ் |
கலையகம் | ஆக்சஸ் பிலிம் ஃபேக்டரி |
விநியோகம் | சக்தி பிலிம் ஃபேக்டரி |
வெளியீடு | 3 திசம்பர் 2021 |
ஓட்டம் | 175 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பேச்சுலர் (Bachelor) என்பது அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் எழுதி இயக்கி 2021ஆம் ஆண்டு இந்திய தமிழ் மொழியில் வெளியான காதல் பரபரப்பூட்டும் திரைப்படமாகும். ஆக்சஸ் பிலிம் பேக்டரியின் கீழ் ஜி. டில்லிபாபு தயாரித்த இப்படத்தில் ஜி. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி (அவரது தமிழ் அறிமுகம்) ஆகியோர் நடித்திருந்தனர். இது 2021 திசம்பர் 3 அன்று வெளியிடப்பட்டது.[1] இப்படம் கலவையான நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஜி.வி. பிரகாஷ் குமாரின் நடிப்பு, இயக்கம் , ஒளிப்பதிவு ஆகியவை பாராட்டைப் பெற்றது. ஆனால் படத்தின் அதிக நீளம் குறித்து விமர்சிக்கப்பட்டது.
நடிகர்கள்
- டார்லிங்காக ஜி.வி.பிரகாஷ்குமார்
- சுப்பு "சுப்பு" லட்சுமியாக (பூ) திவ்ய பாரதி
- லந்தசாக முனிஷ்காந்த்
- பக்ஸாக பகவதி பெருமாள் [2]
- பாஸ்டர் மருத்துவராக மிஷ்கின் (சிறப்புத் தோற்றம்)
- மருத்துவராக கார்த்திக் குணசேகரன் (சிறப்புத் தோற்றம்)
- டார்லிங்கின் நண்பராக சுபாஷ் செல்வம்
தயாரிப்பு
செப்டம்பர் 2019 இல் ஜி.வி.பிரகாஷ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். 2019 செப்டம்பர் 13 அன்று, படத்தின் முதல் தோற்றமும், நடிகர்களின் விவரமும் வெளியிடப்பட்டது.[3] அக்டோபர் 2020 இல் படப்பிடிப்பு முடிவடைந்தது.[4] பட முன்னோட்டம் 2021 பெப்பிரவரி 13 அன்று வெளியிடப்பட்டாலும், கோவிட்-19 பாதிப்பின் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட வெளியீடு தாமதமானது.[5]
ஒலிப்பதிவு
ஜி. வி. பிரகாஷ் குமார், திபு நினன் தாமஸ், ஏ. எச். காஷிப் ஆகியோர் இசையமைத்தனர்.
மேற்கோள்கள்
- ↑ "GV Prakash Kumar and Divyabharathi's Bachelor to release on December 3". The Times of India (in English). 15 November 2021. Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "'Bachelor' trailer: GV Prakash displays a raw shade of acting". The Times of India (in English). 23 November 2021. Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "First-look out from GV Prakash Kumar's next titled 'Bachelor'". The News Minute. 13 September 2019. Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "GV Prakash's Bachelor gets theatrical release date". The News Minute. 16 November 2021. Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ A. Kameshwari (13 February 2021). "Bachelor teaser: GV Prakash Kumar plays an obsessive lover". The Indian Express (in English). Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.