திருச்சுழி வட்டம்
திருச்சுழி வட்டம் (Tiruchuli taluk), தமிழ்நாட்டின், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக திருச்சுழி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் திருச்சுழி, அ. முக்குளம், நரிக்குடி, வீரசோழன் என 4 உள்வட்டங்களும், 150 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2] திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் ஆகியவை இவ்வட்டத்தில் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 103,290 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 52,072 ஆண்களும், 51,218 பெண்களும் உள்ளனர். 25,806 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 80% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 74.53% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 984 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 11,411 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 929 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 23,049 மற்றும் 11 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.04% , இசுலாமியர்கள் 4.22%, கிறித்தவர்கள் 0.54% மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர்.[3]