தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2011
Jump to navigation
Jump to search
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 33 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2011 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 30,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ், பதிப்பகத்தினருக்கு ரூபாய் 10,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்படுகின்றன.
இத்திட்டத்தின் கீழ் 2011 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
வ.எண் | நூலின் பிரிவு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
---|---|---|---|---|
1 | மரபுக்கவிதை | இளங்கண்ணன் கவிதைகள் | இளங்கண்ணன் | திருக்குறள் ஆய்வு மையம். |
2 | புதுக்கவிதை | மலர்களின் மாநாடு | கவிஞர் நாவேந்தன் | அன்னை முத்தமிழ் பதிப்பகம். |
3 | புதினம் | மூனுவேட்டி | அரு.மருததுரை | காவ்யா பதிப்பகம், சென்னை. |
4 | சிறுகதை | பர்வின்பானு சிறுகதைகள் | பர்வின்பானு | தணல் பதிப்பகம். |
5 | நாடகம் (உரைநடை, கவிதை ) | நாட்டிய நாடகங்கள் | நா. கோபாலகிருஷ்ணன் | அனன்யா பதிப்பகம். |
6 | சிறுவர் இலக்கியம் | அரும்புகளும், அறிவியல் அறிஞர்களும் | சு. முத்துச்செல்லக்குமார் | எஸ். ராமகிருஷ்ணன், ருக்மணி மருத்துவத் தகவல் மைய பிரசுரம் |
7 | திறனாய்வு | புரட்சித்தலைவி ஒரு புறநானூறு | பெ. அ. இளஞ்செழியன் | விஜயலட்சுமி பதிப்பகம். |
8 | மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் | இலக்கண மரபும், இலக்கியப் பதிவும் | ப. வேல்முருகன் | அய்யனார் பதிப்பகம். |
9 | பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் | கரம்சோவ் சகோதரர்கள் | புவியரசு | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. |
10 | நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) | பௌத்த சமயக் கலை வரலாறு | முனைவர். கு. சேதுராமன் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. |
11 | அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் | சினிமா கலைக்களஞ்சியம் | ஆரூர்தாஸ் | மணிவாசகர் பதிப்பகம், சென்னை. |
12 | பயண இலக்கியம் | கங்கை கரையினிலே | ப. முத்துக்குமாரசுவாமி | பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. |
13 | வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு | எல்லா நாளும் கார்த்திகை | டி. பவா செல்லதுரை | வம்சி பதிப்பகம். |
14 | நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு | தமிழக வரலாற்றில் நீர் உரிமை- சங்ககாலம் முதல் கி.பி. 1600 வரை | கி. கிரா. சங்கரன் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. |
15 | கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியியல் | எண்களின் எண்ணங்கள் | இரா. சிவராமன் | பை கணித மன்றம். |
16 | பொறியியல், தொழில்நுட்பம் | அடிப்படை ரேடியோ தொடர்பாடம் | கதிரவன் கிருஷ்ணமூர்த்தி | அடையாளம் நிறுவனம், புத்தானத்தம், திருச்சிராப்பள்ளி மாவட்டம். |
17 | மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) | அரவானிகள் அன்றும், இன்றும் | கி. அய்யப்பன் | விசாலாட்சி பதிப்பகம். |
18 | சட்டவியல், அரசியல் | பெண்களுக்கான சட்டங்கள் | ஆ. ஜெகதீசன் | மணிவாசகர் பதிப்பகம், சென்னை. |
19 | பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் | ஆளுமை மேம்பாடு | முனைவர் இரா. சாந்தகுமாரி, ந. வைரவராஜ் | சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை. |
20 | மருந்தியல், உடலியல், நலவியல் | மருத்துவ சவால் | மருத்துவர் ஜெயம் கண்ணன் | கர்ப்ப ரக்ஷாம்பிகை மகப்பேறு மையம். |
21 | தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) | திருதோஷ மெய்ஞான தத்துவ விளக்கம் | இல. மகாதேவன், மகாதேவ ஐயர்ஸ் | மகாதேவ ஐயர்ஸ் பதிப்பகம். |
22 | சமயம், ஆன்மீகம், அளவையியல் | திருச்செந்தூரின் கடலோரத்தில்... | ராமநாதன் பழனியப்பன் | ராமநாதன் பழனியப்பன் பதிப்பகம். |
23 | கல்வியியல், உளவியல் | நீ + நான் = புகழ் | சுடர் முருகையா | விடிவெள்ளி பப்ளிகேசன்ஸ். |
24 | வேளாண்மையியல், கால்நடையியல் | ----- | ----- | ----- |
25 | சுற்றுப்புறவியல் | சுற்றுச்சூழல் மாசு விளைவுகளும், விழ்ப்புணர்வும் | வேணு சீனிவாசன் | விஜயா பதிப்பகம் |
26 | கணிணியியல் | ----- | ----- | ----- |
27 | நாட்டுப்புறவியல் | ----- | ----- | ----- |
28 | வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் | கூடுகள் சிதைந்த போது | அகிலேசுவரன் சாம்பசிவம் | வம்சி பதிப்பகம். |
29 | இதழியல், தகவல் தொடர்பு | இதழ்கள் பேசுகின்றன | மா. ரா. அரசு | ராசமாணிக்கனார் இதழியல் ஆய்வு மையம். |
30 | விளையாட்டு | ----- | ----- | ----- |
31 | பிற சிறப்பு வெளியீடுகள் | நுனிப்புல் | வெ. நல்லதம்பி | வையவிப் பதிப்பகம். |
32 | தமிழர் வாழ்வியல் | ஆற்றுப்படை இலக்கியத்தில் தமிழர் வாழ்வியல் | பி. சேதுராமன் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. |
30 | மகளிர் இலக்கியம் | ----- | ----- | ----- |
குறிப்புகள்
- 1. வேளாண்மையியல், கால்நடையியல், 2. கணிணியியல், 3. நாட்டுப்புறவியல், 4. விளையாட்டு, 5. மகளிர் இலக்கியம் ஆகிய ஐந்து வகைப்பாடுகளில் எந்தப் புத்தகமும் பரிசுக்குத் தேர்வு செய்யப்பெறவில்லை.
ஆதாரம்
- தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீட்டு எண்:224, நாள்:12-04-2013 (பி.டி.எப். கோப்பு)