தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1991
Jump to navigation
Jump to search
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1991 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 5,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1991 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
வ.எண் | தலைப்பு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
---|---|---|---|---|
1 | கவிதை | 1. எழுக என் நாடே (முதல் பரிசு), 2. புலவர் இளஞ்செழியன் கவிதைகள் (இரண்டாம் பரிசு) 3. கவிஞர் கபிலவாணன் கவிதைகள் (மூன்றாம் பரிசு) |
1.புலவர் வரத. கோவிந்தராசன் 2. பெ. அ. இளஞ்செழியன் 3. புலவர் கபிலவாணன் |
1. அருண் புத்தகாலயம், சென்னை. 2. மலர்மாமணி பதிப்பகம் சென்னை. 3. புலவர் கபிலவாணன், சென்னை. |
2 | நாவல் | 1. யாருக்காக உலகம் (முதல் பரிசு) 2. மாவீரன் ஷெர்ஷா (இரண்டாம் பரிசு) 3. பரளியாற்று மாந்தர் (மூன்றாம் பரிசு) |
1. மூவேந்தர் முத்து 2. பொன். பத்மநாபன் 3. மா. அரங்கநாதன் |
1. பூவழகி பதிப்பகம், சென்னை. 2. அருள் புத்தக நிலையம், சென்னை. 3. வேள் பதிப்பகம், சென்னை. |
3 | மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் | 1. தமிழனின் ஒரே கவிஞன் (முதல் பரிசு) 2. தனித் தமிழ் இயக்கம் (இரண்டாம் பரிசு) 3. அளபெடையும் ஆழ்பொருளும் (திருக்குறள் நுண்ணாய்வு) (மூன்றாம் பரிசு) |
1. முனைவர் சாலை இளந்திரையன் 2. இரா. இளங்குமரன் 3. அ. வெ. சுப்பிரமணியன் |
1. முனைவர் சாலை இளந்திரையன், சென்னை. 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 3. திருக்குறள் பதிப்பகம், சென்னை. |
4 | மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் | 1. நிருவாகச் சட்டம் (முதல் பரிசு) 2. பூமியியல் (இரண்டாம் பரிசு) 3. பொருள் முதல் வாதம் என்றால் என்ன? (மூன்றாம் பரிசு) |
1. ஆர். எஸ். தேவர் 2. டாக்டர் ஆனைவாரி ஆனந்தன் 3. அழகுமுத்து |
1. மங்கை நூலகம், சென்னை. 2. மணியம் பதிப்பகம், சென்னை. 3. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. |
5 | பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை | 1. நீங்களும் ஏற்றுமதி செய்யலாம் (முதல் பரிசு) | 1. து. சா. ப. செல்வம் | 1. அபாஸ் கன்சல்டன்சி சர்வீசஸ், சென்னை. |
6 | கணிதவியல், வானவியல் | 1. நிலவுக்கு அப்பால் (முதல் பரிசு) | 1.ஏ. டி. பக்தவச்சலம் | 1. டி. எஸ். புத்தக மாளிகை, சென்னை. |
7 | பொறியியல், தொழில்நுட்பவியல் | 1. கணிப்பொறி அகராதி (முதல் பரிசு) 2. பொறியியல் தச்சுக்கலை (இரண்டாம் பரிசு) 3. திரைப்படம் எடுப்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் |
1. ஆர். ராமசாமி 2.பி. ஜெயராமன் 3. எம். காரிதாசன் |
1. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. 2. வருண் எண்டர்பிரைசஸ், சென்னை. 3. கவிதா பதிப்பகம், சென்னை. |
8 | மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் | 1. வயிற்று நோய்களும் அவற்றின் மருத்துவமும் (முதல் பரிசு) 2. நோய் அறிதல் (இரண்டாம் பரிசு) 3. உடல் நல வழிகாட்டி பாகம் - II, தோல் நோய், இதய நோய், இரத்த ஓட்ட நோய் (மூன்றாம் பரிசு) |
1. டாக்டர் சு. நரேந்திரன் 2. டாக்டர் கு. கண்ணன் 3. வே. தமையந்திரன் |
1. பூம்புகார் பதிப்பகம், சென்னை. 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 3. கண்ணப்பன் பதிப்பகம், சென்னை. |
9 | தத்துவம், சமயம், அளவியல், அறவியல் | 1. வாழ வழிகாட்டிய வள்ளல் (முதல் பரிசு) 2. அந்த நாளும் வந்திடாதோ (இரண்டாம் பரிசு) 3. கடமை தருவது பெருமை |
1. மு. பார்த்தசாரதி 2. துரை. இராமு 3. மெர்வின் |
1. முத்தையன் பதிப்பகம், சென்னை 2. துரை. இராமு பதிப்பகம், சென்னை. 3. குமரன் பதிப்பகம், சென்னை. |
10 | சிறுகதை | 1. மண் சுமை (முதல் பரிசு) 2. இங்கே ஸ்ரீ ராமன் தீக்குளிக்கின்றான் (இரண்டாம் பரிசு) 3. நினைவுகள் (மூன்றாம் பரிசு) |
1. சு. சமுத்திரம் 2. பூவை. எஸ். ஆறுமுகம் 3. அறிவழகன் |
1. மணிவாசகர் நூலகம், சென்னை 2. துரை. இராமு பதிப்பகம், சென்னை. 3. அறிவகம், சென்னை. |
11 | நாடகம் | ----- | ----- | ----- |
12 | கவின் கலைகள் | 1. பஞ்சமரபு (முதல் பரிசு) | 1. டாக்டர். வீ. பா. கா. சுந்தரம் | 1. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை. |
13 | கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் | 1. பாவேந்தர் பாரதிதாசன் (முதல் பரிசு) 2. செயற்கரிய செய்த பெரியார் (இரண்டாம் பரிசு) 3. கொலம்பஸ் கதை (மூன்றாம் பரிசு) |
1. டாக்டர் மா. அண்ணாதுரை 2. புலவர் என். இ. இராமலிங்கம் 3. கி. மா. பக்தவத்சலம் |
1. பூங்கொடி வெளியீடு, ஈரோடு. 2. திருவள்ளுவர் பதிப்பகம், சென்னை. 3. பூம்புகார் பதிப்பகம், சென்னை. |
14 | தாவரவியல், விலங்கியல், உயிரியல், வானியல் | 1. மீன்கள் அன்றும் இன்றும் (முதல் பரிசு) 2. உலகிலுள்ள வௌவால்கள் (இரண்டாம் பரிசு) 3. சங்க இலக்கியத்தில் அறிவியற்கலை (மூன்றாம் பரிசு) |
1. ச. பரிமளா 2. கே. கே. ராஜன் 3. பி. எல். சாமி |
1. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். 2. சூடாமணி பிரசுரம், சென்னை. 3. சேகர் பதிப்பகம், சென்னை. |
15 | இயற்பியல், வேதியியல் | 1. லேசர் (முதல் பரிசு) | 1. எம். எஸ். ப்பி. முருகேசன் | 1. ஓசோன் புக்ஸ், சென்னை. |
16 | கல்வி, உளவியல் | 1. மனவளர்ச்சிக் குறை (முதல் பரிசு) 2. பள்ளிகளின் அமைப்பும் மேலாண்மையும் (இரண்டாம் பரிசு) |
1. சீ. முருகசெல்வம் 2. டாக்டர். மு. கோவிந்தராசன் |
1. பூங்கொடி பதிப்பகம், சென்னை. 2. சரசுவதி பதிப்பகம், சென்னை. |
17 | வரலாறு, தொல்பொருளியல் | 1. தமிழ்ப் பண்பாட்டு வரலாறு (முதல் பரிசு) 2. கல்வெட்டில் வாழ்வியல் (இரண்டாம் பரிசு) 3. புதுச்சேரி விடுதலைப் போராட்ட வரலாறு (மூன்றாம் பரிசு) |
1. செ. வைத்தியலிங்கம் 2. டாக்டர் அ. கிருட்டிணன் 3. அ. இராமசாமி |
1. அண்ணாமலைப் பல்கலைக்கழக நூல் வெளியீட்டுத் துறை, சிதம்பரம். 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 3. பூங்குன்றம் பதிப்பகம், மதுரை |
18 | வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் | ----- | ----- | ----- |
19 | சிறப்பு வெளியீடுகள் | ----- | ----- | ----- |
20 | குழந்தை இலக்கியம் | 1. பேசும் கிளியே (முதல் பரிசு) 2. மாய மின்சாரம் (இரண்டாம் பரிசு) 3. ரோபோ என் தோழன் (மூன்றாம் பரிசு) |
1. குழ. கதிரேசன் 2. கல்வி கோபாலகிருஷ்ணன் 3. டாக்டர் வ. தேனப்பன் |
1. யாழ் வெளியீடு, சென்னை. 2. கல்வி கோபாலகிருஷ்ணன் டிரஸ்ட், சென்னை. 3. தெய்வம் பதிப்பகம், தேவகோட்டை. |