தமிழர்விக்கி
சுப்பிரமணிய பாரதி(சுப்பிரமணிய பாரதி)
ஜெயகாந்தன்(ஜெயகாந்தன்)
யாழ்ப்பாணம் (இரண்டாம் சங்கிலி மன்னன் சிலை, நல்லூர்)
புதிய தமிழ் கலைக்களஞ்சியமான தமிழர்விக்கி, பக்கச்சார்பு அற்றதாகத் தனி நபர்களின் அரசியல், இலக்கிய, நாட்டாமைகளைத் தவிர்த்து, தகுதியானவர்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்க, தனிநபர் முயற்சியிலும், பொருளாதாரத்திலும் உருவாக்கப்பட்டது.
கட்டுப்பாடுகள் சிலவற்றிற்கு விலக்களிக்க, தமிழில் மேலும் கட்டுரைகளைச் சுதந்திரமாக வெளியிடுவதற்கு, விடுபட்ட, விலக்கப்பட்ட தமிழ் சமுதாயத்தின் தகவலுக்காக நோர்வேயில் உருவாக்கப்பட்ட, தகவற் களஞ்சியம் (விக்கி தளம்) இது. இதில் தமிழ் உலகிற்குத் தேவையான கனமான தகவல்களை நேர்த்தியான கட்டுரைகளாகப் பதியலாம். கட்டுரைகளை ஏற்றுக்கொள்ளும் அல்லது மறுதலிக்கும் அதிகாரம் தமிழர்விக்கிக்கு உண்டு.
மேலும் இந்த தளத்தை அபிவிருத்தி செய்ய உங்கள் ஆதவரை நாடுகிறோம். தமிழ்மேல் பற்றுகொண்ட அனைவரும் இணைந்து கொள்ளலாம்.
தமிழர்விக்கி இலட்சினை | |
வலைத்தள வகை | இணைய கலைக்களஞ்சியம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | தமிழ் |
உரிமையாளர் | தமிழர்விக்கி |
வணிக நோக்கம் | இல்லை |
பதிவு செய்தல் | திறந்த படிப்பு அணுகல். பொது திருத்தத்திற்கு ,
|
உள்ளடக்க உரிமம் | படைப்பாக்கப் பொதுமங்களின் பண்புக்கூறு/ பகிர்வுரிமை 4.0 (பெரும்பாலான உரை கு.த.ஆ. உ. இன் கீழ் இரட்டை உரிமம் பெற்றது) ஊடக உரிமம் மாறுபடும் |
வெளியீடு | அக்டோபர் 2023 |
உரலி | tamilar |
தமிழர்விக்கி (Tamilarwiki), தமிழர்விக்கி கலைக்களஞ்சியத்தின் தமிழ் மொழி பதிப்பு ஆகும், ஐப்பசி 2023-இல் இது தொடங்கப்பட்டது. 10 நவம்பர் 2024 அன்று, 17,928 கட்டுரைகள் உள்ளன.
வளர்ச்சி
- 2024, ஆனி மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை நான்காயிரத்தைத் தாண்டியது.
- 2024, ஆவணி மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியது.
- 2024, ஐப்பசி மாதம் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை பதினைந்தாயிரத்தைத் தாண்டியது.
தமிழர்விக்கி குறித்த தரவுகள்
எண்ணிக்கை | |
---|---|
பக்கங்கள் | 31,670 |
கட்டுரைகள் | 17,928 |
கோப்புகள் | 10,044 |
தொகுப்புகள் | 38,729 |