ஜனனம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜனனம்
இயக்கம்ரமேஷ் செல்வன்
தயாரிப்புக்ரெசென்ட் பிலிம் இன்டர்நேஷனல்
இசைபரத்வாஜ்
நடிப்புஅருண் விஜய்
பிரியங்கா திரிவேதி
ஆஷிஷ் வித்யார்த்தி
ரகுவரன்
வடிவேலு
சார்லி
நாசர்
வெளியீடு17 திசம்பர் 2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜனனம் 2004 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். அருண் விஜய், பிரியங்கா திரிவேதி, ஆஷிஷ் வித்யார்த்தி, ரகுவரன், வடிவேலு, சார்லி மற்றும் நாசர் ஆகியோர் நடிப்பில், ரமேஷ் செல்வன் இயக்கத்தில், பாலகுமாரன் வசனத்தில் பரத்வாஜ் இசையில் வெளியானது. 2002 ஆம் ஆண்டு துவங்கிய இப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியானது.

கதைச்சுருக்கம்

சூர்யா (அருண் விஜய்) வேலை தேடிக்கொண்டிருக்கும் முதுநிலை பட்டதாரி இளைஞன். அவனது காதலி சுருதி (பிரியங்கா திரிவேதி). சமுதாயத்தில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டு கோபப்படும் சூர்யாவை சுருதி சமாதானப்படுத்துகிறாள். பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்ற சூர்யாவின் நண்பனுக்கு (சார்லி) வேலை கிடைக்கவில்லை. வங்கியில் சுயதொழில் கடன் கொடுக்கவும் மறுக்கிறார்கள். வேலை தேடிக்கொண்டிருக்கும் மற்றொரு தங்கப்பதக்கம் பெற்ற நண்பன் விபத்தில் இறக்கிறான். எழுத்தாளர் உதயமூர்த்தியை (ரகுவரன்) சந்திக்கும் சூர்யாவின் வாழ்க்கை மாறுகிறது. சூர்யா, உதயமூர்த்தி மேலும் சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து 'வேலையற்ற பட்டதாரிகள் அமைப்பு' என்பதை உருவாக்கி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தர முயற்சிக்கின்றனர். இதற்கு அரசியல்வாதி முத்துக்கருப்பன் (ஆஷிஷ் வித்யார்த்தி) தடை செய்கிறான். உதயமூர்த்தி சுடப்பட்டு இறக்கிறார். சூர்யா சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறான். வேலைவாய்ப்பற்ற இளைஞர்களைக் கொண்டு மிகப்பெரும் பேரணி நடத்தி மக்கள் கவனத்தை ஈர்க்கிறான். இதனால் இளைஞர்களின் பிரச்சனை தீர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

நடிகர்கள்

தயாரிப்பு

இப்படம் நிதிப்பிரச்சனை உட்பட பல காரணங்களால் மிகத் தாமதமாக வெளியானது. பிரியங்கா திரிவேதி- உபேந்திரா திருமணமும் படத்தயாரிப்பு தடைபட ஒரு காரணமானது.[1]

இசை

பாராட்டு

அருண் விஜய் : எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அஞ்சலி தெரிவித்து அருண் விஜய் ட்வீட் செய்தது. "என்னுடைய ஜனனம் திரைப்படம் சமூகப் பிரச்சினை குறித்து ஆழமாகப் பேசக்கூடிய படமென்பதால், அதற்காக மிகுந்த சிரத்தையுடன் பணிபுரிந்தார். அந்தப் படத்தில் அவர் எழுதிய வசனங்கள் அனைத்தும் நினைவுகூரத்தக்கன."[2][3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஜனனம்&oldid=37958" இருந்து மீள்விக்கப்பட்டது