சுப சங்கல்பம்
பாசவலை (சுப சங்கல்பம்) | |
---|---|
திரைப்பட விளம்பர சுவரொட்டி | |
இயக்கம் | கே. விஸ்வநாத் |
தயாரிப்பு | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
திரைக்கதை | கே. விஸ்வநாத் |
இசை | கீரவாணி |
நடிப்பு | கமல்ஹாசன் அமணி பிரியா ராமன் |
ஒளிப்பதிவு | பி. சி. ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | ஜி. ஜி. கிருஷ்ண ராவ் |
கலையகம் | ஸ்ரீ கோதண்டபாணி பில்ம்ஸ் |
விநியோகம் | ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் |
வெளியீடு |
|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் தெலுங்கு |
பாசவலை என்பது 1995 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படமானது தெலுங்கில் வெளிவந்த சுப சங்கல்பம் (Subha Sankalpam) என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத் திரைப்படம் ஆகும். கே. விஸ்வநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அமணி, பிரியா ராமன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இவர்களோடு இயக்குனர் விஸ்வநாத்தும் நடித்துள்ளார். பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் இப்படத்தை தயாரித்துள்ளார். [1] இந்த படம் தெலுங்கில் வெளியாகி 3 மாதங்கள் கழித்து தமிழில் ஜூலை 28 தேதி வெளியானது, தெலுங்கில் ஏப்ரல் 28ல் வெளியிடப்பட்டது.
கமல்ஹாசன் அவரின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் மூலம் இப்படம் தமிழக திரையரங்குகளில் விநியோகிக்கப்பட்டது. இப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பு பெற்றதோடு அதிக விருதுகளையும் வாங்கியது. அந்த ஆண்டிற்கான ஆந்திர அரசு திரைப்பட விருது வழங்கும் விழாவில் பல்வேறு பிரிவுகளில் 5 விருதுகளை வென்றது, மற்றும் பிலிம் பேர் விருதுகளையும் இப்படம் வாங்கியுள்ளது.
நடிகர்கள்
- கமல்ஹாசன் ... தாசு
- கே. விஸ்வநாத் ... ராயுடு
- அமணி ... கங்கா
- பிரியா ராமன் ... சந்தியா
- கோட்டா சீனிவாச ராவ்
- கோலபுடி மாருதி ராவ் ... சென்னகேசவ ராவ்