சாத்தையாறு
Jump to navigation
Jump to search
சாத்தையாறு சிறுமலை பகுதியில் தோன்றி வைகையில் கலக்கும் ஓரு துணையாறு ஆகும். 819 ச.கி.மீ ஆற்றுப்படுகையும், 42.7989 ச.கி.மீ(4279.69 ஹெக்டர்) பாசப்பகுதியும் கொண்டுள்ளது.[1]
சாத்தையாறு அணை
சிறுமலை, வகுத்துமலை, காட்டுநாயக்கன்ஓடை உள்பட பல இடங்களிலிருந்து வரும் நீர் அலங்காநல்லூர் அருகே சாத்தையாறு அணைக்கு வருகிறது. அணையின் கொள்ளளவு 29 அடி. நீர்ப்பிடிப்பு பகுதிகள் 450 எக்டேர் ஆகும். அணை நீர் மூலம் எர்ரம்பட்டி, சின்னணம்பட்டி, கோவில்பட்டி, ஆதனூர் (கட்டிக்காரன் கண்மாய், குறவன்குளம்), கோணப்பட்டி உட்பட 11 கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. பொதுப்பணித்துறை சார்பில் அணை பராமரிக்கப்படுகிறது.[2] அணையின் உபரி நீர் மாட்டுத்தாவணி சம்பக்குளம் கால்வாய் வந்து வண்டியூர் கண்மாய் வந்து அதன் பின்னர் வைகை ஆற்றுடன் கலக்கிறது.[3]
மேற்கோள்கள்
- ↑ "ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை (IAMWARM)" (PDF). Archived from the original (PDF) on 2010-12-26. பார்க்கப்பட்ட நாள் 2012-05-14.
- ↑ தினமலர் செய்தி
- ↑ "சாத்தையாறு அணை நிரம்பியதால் மதுரை மாட்டுத்தாவணி குடியிருப்புகளில் புகுந்த வெள்ள நீர்". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/tamilnadu/881552-madurai-mattuthavani-residences-were-inundated-with-flood-water-due-to-the-fullness-of-the-chhatiyar-dam-2.html. பார்த்த நாள்: 19 November 2023.