அவலாஞ்சி ஏரி
அவலாஞ்சி ஏரி Avalanche Lake | |
---|---|
பனிச்சரிவு ஏரி | |
அமைவிடம் | தமிழ்நாடு, நீலகிரி மாவட்டம். |
ஆள்கூறுகள் | 11°19′19″N 76°36′40″E / 11.322°N 76.611°ECoordinates: 11°19′19″N 76°36′40″E / 11.322°N 76.611°E |
உறைவு | இல்லை |
Islands | இல்லை |
அவலாஞ்சி ஏரி (Avalanche Lake) தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஏரியாகும்.[1][2]
சொற்பிறப்பு
இந்த ஏரி உள்ளபகுதியில் 1800 களில் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பனிச்சரிவு என்னும் பொருளுள்ள அவலாஞ்சி (avalanche) என்ற பெயர் உண்டானது.[1]
சுற்றுலா
நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சி ஏரி ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும்.[3] ஏரியைச் சுற்றிலும் பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் அமைந்துள்ள நிலப்பகுதியில் மக்னோலியசு, மல்லிகை, ரோடோடென்றான் எனப்படும் கொத்துக் கொத்தான மலர்கள் அழகாகப் பூத்துக்குலுங்குகின்றன.ஏரிக்கு அருகில் அதைச் சுற்றியுள்ள உள்ள பாதையில் சுற்றுலாப்பயணிகள் மெல்லிய காற்றின் துணையுடன் பயணிக்க முடியும்[1]. ஏரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மீன்பிடிப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.[4]. ஏரிக்கு அருகே உள்ள மீன் குஞ்சு பொரிப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் தேவையான மீன்பிடிக்கும் தூண்டில்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் ஆகியவற்றைப் பெற்று தாங்கே தூண்டில் போட்டு மீன் பிடிக்கலாம்.[5] . ஏரியின் அருகில் சுற்றுலாப்பயணிகள் கூடாரங்களை அமைத்தும் தங்குகின்றனர் . ஏரிக்கு அருகிலுள்ள மலைப்பாங்கான பகுதிகளில் மலையேறுவதும், ஏரியில் படகுச் சவாரி மேற்கொள்ளுவதும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் இதர பொழுதுபோக்குகளாகும். [6] மேல் பவானி எனப்படும் பகுதி இத்தகைய மலையேற்றங்களுக்கு உகந்ததாகும். இங்கு அடர்த்தியான காடுகளும் வனவிலங்குகளும் உள்ளன[5]
மேற்கோள்கள்
ஊட்டி பனிச்சரிவு ஏரி
என்பதின் ஊடகங்கள் Wikimedia-விலும் உள்ளன.
- ↑ 1.0 1.1 1.2 Shaji, K A (Feb 18, 2011). "Flowers in the window". The Times of India இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 27, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130927191033/http://articles.timesofindia.indiatimes.com/2011-02-18/coimbatore/28614578_1_forest-orchids-meadows. பார்த்த நாள்: Sep 30, 2011.
- ↑ "Avalanche Lake". traveldest.org. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ Ayub, Akber (May 29, 2011). "Footloose in the Nilgiris". The Hindu இம் மூலத்தில் இருந்து ஜூன் 10, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110610164324/http://www.hindu.com/mag/2011/05/29/stories/2011052950300800.htm. பார்த்த நாள்: Sep 30, 2011.
- ↑ "Fishing in the Nilgiris". tamilnadutourism.org. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ 5.0 5.1 "Peaks of pleasure". Daily News and Analysis. 6 December 2007. http://www.dnaindia.com/entertainment/report_peaks-of-pleasure_1137638. பார்த்த நாள்: 30 September 2011.
- ↑ Cycil, Chandrika (18 May 2002). "Adventure: Avalanche". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 ஜனவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040105145051/http://www.hindu.com/thehindu/yw/2002/05/18/stories/2002051800060200.htm. பார்த்த நாள்: 30 September 2011.