கே. வி. ஆனந்த்
கே. வி. ஆனந்த் | |
---|---|
பிறப்பு | பூங்கா நகர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா | 30 அக்டோபர் 1966
இறப்பு | 30 ஏப்ரல் 2021[1] சென்னை,தமிழ்நாடு, இந்தியா | (அகவை 54)
தேசியம் | இந்தியர் |
பணி | ஒளிப்பதிவாளர் திரைப்பட இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 1994–2021 |
பெற்றோர் | வெங்கடேசன் அனசூய வெங்கடேசன் |
பிள்ளைகள் | சினேகா சாதனா[2] |
கே. வி. ஆனந்த் (K. V. Anand, 30 அக்டோபர் 1966 – 30 ஏப்ரல் 2021) ஒரு தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநரும் ஆவார். இவர் கனா கண்டேன் (2005), அயன் (2009) திரைப்படங்கள் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குநராகப் பெயர் பெற்றார். அதற்கு முன்னரே, பல இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்குத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி உள்ளார். 1995-ஆம் ஆண்டு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படம் தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது பெற்றுள்ளார். 1999ஆம் ஆண்டு சங்கரின் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் திரைப்படத்தில் பணியாற்றினார். அப்போது தனது நுட்பமான ஒளிப்பதிவு திறமைக்காகவும், பிரம்மாண்டத்திற்காகவும் பாராட்டப்பட்டார்.[3]
இளமைக் காலம்
ஆனந்த் 1966 அக்டோபர் 30 அன்று இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சென்னையில் கரிமனல் முணுசாமி வெங்கடேசன் மற்றும் அனசூயா வெங்கடேசன் ஆகியோருக்கு பிறந்தார். இவர் குழந்தை பருவத்தில் பழவேற்காட்டில் வளர்ந்தார். பின்னர் ஜூன் 1986 இல் துவாரகதாஸ் கோவர்தன்தாஸ் வைஷ்ணவ கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் சென்னை இலயோலாக் கல்லூரியில், முதுகலை பட்டம் பெற்றார். ஆனந்த் கல்லூரியின் வருடாந்திர இறுதி நாட்களில் இமயமலையில் மலையேற்றப் பயணங்களில் பங்கேற்றார். இந்தியாவின் பல்வேறு தொலைதூர இடங்களுக்கு, அவரது ஆய்வுப் பயணங்கள் புகைப்படம் எடுப்பதில் அவருக்கு ஆர்வத்தைத் தூண்டின. ஆனந்த், கல்லூரியில் மாநில மற்றும் தேசிய அளவிலான புகைப்பட போட்டிகளில் பங்கேற்றார். அவரது காட்சி படங்கள் அவருக்கு ஏராளமான புகைப்பட விருதுகளைப் பெற்றன.
இறப்பு
கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கே. வி. ஆனந்த் வேறு எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத நிலையில், ஏப்ரல் 30, 2021 அன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அதிகாலை 3 மணியளவில் காலமானார்.[4][5]
திரைப்படங்கள்
ஒளிப்பதிவாளராக
மூலம்:[6]
ஆண்டு | திரைப்படம் | மொழி |
---|---|---|
1994 | தென்மாவின் கொம்பத்து | மலையாளம் |
மின்னரம் | மலையாளம் | |
1995 | புண்யா பூமி நா தேசம் | தெலுங்கு |
1996 | காதல் தேசம் | தமிழ் |
1997 | சந்திரலேகா | மலையாளம் |
1997 | நேருக்கு நேர் | தமிழ் |
1998 | டோலி சஜா கே ரக்னா | இந்தி |
1999 | முதல்வன் | தமிழ் |
2000 | ஜோஷ் | இந்தி |
2001 | நாயக் | இந்தி |
2002 | விரும்புகிறேன் | தமிழ் |
த லெஜன்ட் ஆஃப் பகத்சிங் | இந்தி | |
2003 | பாய்ஸ் | தமிழ் |
2004 | செல்லமே | தமிழ் |
2004 | காக்கி | இந்தி |
2007 | சிவாஜி: தி பாஸ் | தமிழ் |
2007 | ஹீரோவா? சீரோவா? | தமிழ் |
இயக்குனராக
மூலம்:[6]
ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் | |
---|---|---|---|---|
2005 | கனா கண்டேன் | தமிழ் | ||
2009 | அயன் | தமிழ் | ||
2010 | கோ | தமிழ் | ||
2012 | மாற்றான் | தமிழ் | ||
2015 | அனேகன் | தமிழ் | ||
2017 | கவண் | தமிழ் | ||
2019 | காப்பான் | தமிழ் |
நடிகராக
மூலம்:[6]
- மீரா (1992)
- சிவாஜி: தி பாஸ் (2007)
- மாற்றான் (2012)
- கவண் (2017)
மேற்கோள்கள்
- ↑ Director and cinematographer K.V. Anand no more. The Hindu. 30 April 2021. https://www.thehindu.com/news/cities/chennai/director-and-cinematographer-kv-anand-no-more/article34446227.ece.
- ↑ What happened to director K. V. Anand? Everything that you need to know about him. Republic World. 30 April 2021. https://m.republicworld.com/entertainment-news/regional-indian-cinema/what-happened-to-director-k-v-anand-everything-that-you-need-to-know-about-him.html.
- ↑ http://silverscreen.in/features/man-moment-kv-anand-interview/
- ↑ அபிரபல திரைப்பட இயக்குநர் கே.வி. ஆனந்த் காலமானார். தினமணி இதழ். 30 ஏப்ரல் 2021. https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2021/apr/30/tamil-cinema-director-kvanand-died-3614567.html.
- ↑ பிரபல இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் காலமானார்: திரையுலகினர் அதிர்ச்சி. தி ஹிந்து தமிழ் இதழ். 30 ஏப்ரல் 2021. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/665432-kv-anand-passed-away.html.
- ↑ 6.0 6.1 6.2 "K.V. Anand - Movies, Biography, News, Age & Photos". https://in.bookmyshow.com/person/kv-anand/11048.