கே. சுபாஷ்
Jump to navigation
Jump to search
கே. சுபாஷ் | |
---|---|
பிறப்பு | சங்கர் கிருஷ்ணன் இந்தியா |
இறப்பு | நவம்பர் 23, 2016 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1989–23 Nov 2016 |
கே. சுபாஷ் (பிறப்பு: சங்கர் கிருஷ்ணன்) தமிழ், இந்தி திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் ஆவார். விஜயகாந்த் நடித்த சத்ரியன், அஜித் குமார் நடித்த பவித்ரா, ஆயுள் கைதி, பிரபுதேவா நடித்த நினைவிருக்கும் வரை, ஏழையின் சிரிப்பில் போன்ற பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர், புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இரட்டை இயக்குநர்களான கிருஷ்ணன் பஞ்சு ஆகியோரில், கிருஷ்ணன் அவர்களின் மகனாவார்.[1] இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், நவம்பர் 23, 2016ல் காலமானார்.[2][3]
திரை வாழ்க்கை
நாயகன் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியபோது, இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியதன் மூலமாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.
திரைப்பட விபரம்
இயக்குனராக
ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
1988 | கலியுகம் | தமிழ் | |
1989 | உத்தம புருசன் | தமிழ் | |
1990 | சத்ரியன் | தமிழ் | |
1991 | ஆயுள் கைதி | தமிழ் | |
1991 | வாக்குமூலம் | தமிழ் | |
1991 | பிரம்மா | தமிழ் | |
1992 | பங்காளி | தமிழ் | |
1994 | பவித்ரா | தமிழ் | |
1994 | பிரம்மா | இந்தி | பிரம்மா திரைப்படத்தின் மறுவாக்கம் |
1997 | நேசம் | தமிழ் | |
1997 | அபிமன்யு | தமிழ் | |
1999 | நினைவிருக்கும் வரை | தமிழ் | |
1999 | சுயம்வரம் | தமிழ் | |
2000 | ஏழையின் சிரிப்பில் | தமிழ் | |
2000 | சபாஷ் | தமிழ் | |
2001 | லவ் மேரேஜ் | தமிழ் | சுயம்வரம் மலையாளத் திரைப்படத்தின் மறுவாக்கம் |
2002 | 123 | தமிழ் | |
2005 | இன்சான் | இந்தி | கதம் திரைப்படத்தின் மறுவாக்கம் |
திரைக்கதை ஆசிரியராக
- அந்தாகடு (தெலுங்கு)
- சன்டே (இந்தி)
- சென்னை எக்ஸ்பிரஸ் (இந்தி)
- என்டர்டெயின்மெண்ட் (இந்தி)
- தில்வாலே (இந்தி)
மேற்கோள்கள்
- ↑ "K. Subhash". gomolo.com இம் மூலத்தில் இருந்து 9 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140309124918/http://www.gomolo.com/about-k-subhash/6529. பார்த்த நாள்: 17 December 2014.
- ↑ "சத்ரியன் பட இயக்குநர் கே. சுபாஷ் காலமானார்!". தினமணி. 23 நவம்பர் 2016. http://www.dinamani.com/cinema/cinema-news/2016/nov/23/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2603573.html. பார்த்த நாள்: 23 நவம்பர் 2016.
- ↑ "சத்ரியன், பிரம்மா உள்ளிட்ட படங்களை இயக்கிய கே.சுபாஷ் காலமானார்". விகடன். 23 நவம்பர் 2016. http://www.vikatan.com/news/tamilnadu/73201-sathriyan-director-k-subash-passes-away.art. பார்த்த நாள்: 23 நவம்பர் 2016.