குருப்பார்வை (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குருப்பார்வை
இயக்கம்மனோஜ் குமார்
தயாரிப்புமனோஜ் குமார்
என்.ஜே. மோதி
திரைக்கதைபி.கலைவாணி
இசைதேவா
நடிப்புபிரகாஷ் ராஜ்
குஷ்பூ
அஞ்சு அரவிந்த்
ஈஸ்வரி ராவ்
மது சர்மா
இந்து
தலைவாசல் விஜய்
மணிவண்ணன்
ஒளிப்பதிவுசி. தனபால்
படத்தொகுப்புபி. மோகன்ராஜ்
வெளியீடு15 நவம்பர் 1998
ஓட்டம்150 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

குருப்பார்வை (Guru paarvai) திரைப்படம் 1998-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை மனோஜ்குமார் இயக்கினார். இத்திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், குஷ்பூ, அஞ்சு அரவிந்த், ஈஸ்வரி ராவ், மது சர்மா, இந்து, தலைவாசல் விஜய், மணிவண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் இந்தி மொழியில் டப்பிங் செய்யப்பட்டு நயா நட்வர்லால் என்ற பெயருடன் வெளிவந்தது. பின்னர், வீடு சாமான்யுடு காது என்ற பெயரில் தெலுங்கு மொழியில் வெளிவந்தது.

நடிகர்கள்

  • பிரகாஷ் ராஜ் - குரு மூர்த்தி என்கிற மகேந்திர பூபதி
  • குஷ்பூ - ஷாந்தி, மகேந்திர பூபதியின் மனைவி
  • அஞ்சு அரவிந்த் - ப்ரியா, மகேந்திர பூபதியின் மறைந்த காதலி
  • ஈஸ்வரி ராவ் - பூஜா
  • மது சர்மா - சோனாலி
  • இந்து - இந்து
  • தலைவாசல் விஜய் - காளி என்கிற விஜய், வில்லன்
  • மணிவண்ணன் - நாகராஜன், மகேந்திர பூபதியின் தாய் மாமன்
  • சந்தான பாரதி - ப்ரியாவின் தந்தை
  • மோகன் வி.ராம் - பூஜாவின் தந்தை
  • பேபி அக்ஷ்யா - அக்ஷ்யா
  • ரமேஷ் கண்ணா - லிங்கம்
  • அலெக்ஸ் - ஜோசெப்
  • பாண்டு - விக்னேஷ்
  • சிங்கமுத்து - தேநீர் வியாபாரி
  • டி.பி. கஜேந்திரன்
  • சிம்ரன் - கௌரவ வேடம்
  • எஸ். வி. சேகர் - கௌரவ வேடம்

கதைச்சுருக்கம்

குரு மூர்த்தி (பிரகாஷ் ராஜ்) பூஜைவை (ஈஸ்வரி ராவ்) பின் தொடரும் காட்சியிலிருந்து படம் துவங்குகிறது. குரு தனது கடந்த வாழ்க்கையில் அவனது பெயர் மகேந்திர பூபதி என்றும், அலமேலு என்ற பெண்ணை காதலித்ததாகவும் கூறுகிறான். அவனை பொறுத்தவரை, பூஜா பார்ப்பதற்கு அலமேலு போலவே இருப்பதால், ஒருவழியாக அவளை தன் வசப்படுத்துகிறான். அவர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். ஆனால், திருமணத்திற்கு முந்தைய நாள், பூஜா விபச்சாரம் செய்தாள் என்று குரு போலி புகார் கொடுக்க, அவள் கைது செய்யப்படுகிறாள். உண்மையாக பார்த்தால், குரு மூர்த்தி வைசாகிலும் சென்னையிலும் வாழும் ஒரு மெக்கானிக் ஆவான். ஷாந்தி (குஷ்பூ) சில சிறு திருட்டுகளை செய்து அவளது அக்காள் மகள்களை வளர்த்து வருகிறாள். ஷாந்தி குருவை தன் நண்பனாக ஏற்று அவளது வீட்டில் வசிக்க அனுமதிக்கிறாள். இருவரும் ஒருவரையொருவர் காதல் செய்கிறார்கள். ஷாந்தி என்ற பெயரை சோனாலி என்று பெயர் மாற்றம் செய்கிறான் குரு மூர்த்தி. பின்னர் இருவரும் பதிவுத் திருமணம் செய்துகொள்ளும் பொழுது, ஷாந்தி சோனாலி என்ற பெயரில் கையொப்பம் இடுகிறாள். பின் ஒரு நாள், சோனாலி என்ற இயற்பெயர் கொண்ட ஒரு பெண்ணின் திருமணத்தை நிறுத்துகிறான் குரு. அவன் தான் சோனாலியின் கணவன் என்று நிரூபிக்க அந்த பதிவுத்திருமண சான்றிதழை பயப்படுத்துகிறான். குருவின் மனைவிக்கு இது எதுவுமே புரியவில்லை. கொடூர குருவை ஷாந்தி பிரிய முடிவு செய்கிறாள். அதனால் குரு தான் ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறான் என்று அவனது கடந்தகால வாழ்க்கை பற்றி ஷாந்தியிடம் உண்மையை சொல்கிறான்.

கடந்தகாலத்தில், தங்கப்பதக்கம் பெற்ற பட்டதாரியான மகேந்திர பூபதி வேலை கிடைக்காமல் திண்டாடுகிறான். பூபதி தன் தாய், தங்கை, மாமன் நாகராஜன் (மணிவண்ணன்) ஆகியோருடன் வாழ்ந்து வருகிறான். பக்கத்துக்கு வீட்டு பெண்ணான ப்ரியா (அஞ்சு அரவிந்த்) பூபதியிடம் காதல் வயப்பட்டு, திருமணத்திற்கு முன்பாகவே பூபதியுடன் அவன் வீட்டில் வசிக்க முடிவு செய்கிறாள். ஒரு முக்கிய பரீட்சையில் தேர்வானால் வங்கியில் வேலை கிடைக்க பூபதிக்கு வாய்ப்பு இருந்தது. தேர்வு நாள் அன்று கவனக்குறைவால் நுழைவுச் சீட்டினை பூபதி தொலைத்துவிடுகிறான். அதேநேரம், பூஜா, சோனாலி, இந்து ஆகிய மூவரையும் காளி (தலைவாசல் விஜய்) என்ற ரவுடி தாக்க முயலும் போது, காளியின் தம்பியை தவறுதலாக அவர்கள் கொன்றுவிடுகிறார். போலீஸ் அந்த மூன்று பெண்களையும் உண்மையை சொல்ல வற்புறுத்தும் போது, பூபதியின் ஹால்-டிக்கெட் அவர்கள் கண்களில் பட பூபதி தான் கொலையாளி என்று சொல்கிறார்கள். பூபதி உடனடியாக கைது செய்யப்படுகிறான். அதனை கேள்விப்பட்ட ரவுடி காளி, பூபதியின் மொத்த குடும்பத்தையும், காதலியையும் கொலை செய்கிறான். பூபதிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட, காளியோ ஊட்டிக்கு தப்பித்து விடுகிறான். காளி தன் பெயர் உருவத்தை மாற்றி தொழில் செய்து பெரிய தொழிலதிபராக வளர்ந்துவிடுகிறான். பூபதி குடும்பத்தில் அவனும் அவனது மாமா நாகராஜனும் மட்டுமே தான் தப்பிக்க முடிந்தது.

நிகழ்காலத்தில், குரு மூர்த்தியின் கடந்தகாலத்தை கேட்ட சாந்தி தன் கணவர் அப்பாவி என்று கருதுவதால், அவர் பழிவாங்க உறுதுணையாக இருக்க முடிவு செய்கிறாள். காளியையும் இந்துவையும் தேடுகிறான் குரு. காளிக்கும் இந்துவுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. குரு இந்துவின் மனதை கலைத்து, காளியை துப்பாக்கியால் சுடச் செய்கிறான். சுட்ட குற்றத்திற்காக இந்து கைதுசெய்யப்பட, குரு இந்துவின் மகளை தத்து எடுத்துக்கொள்வதுடன் படம் நிறைவு பெறுகிறது.

இசை

இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் தேவா (இசையமைப்பாளர்) ஆவார். வாலி (கவிஞர்), ஆர்.வி. உதயகுமார், அறிவுமதி மற்றும் வாசன் இப்படத்தின் பாடல்களை எழுதினர்.

வரிசை

எண்

பாடல் பாடகர்கள் நீளம்
1 நந்தவன பூவே அனுராதா ஸ்ரீராம், பி.உன்னிகிருஷ்ணன் 4:56
2 போடு ஜீன்ஸ் ஸ்வர்ணலதா, கிருஷ்ணராஜ் 5:08
3 ஏக் லட்கா மனோ, சித்ரா 5:00
4 பார்வை பார்வை கிருஷ்ணராஜ், சுஜாதா 5:03
5 டிங் டாங் ஸ்வர்ணலதா 5:08

மேற்கோள்கள்

  1. http://www.bbthots.com/reviews/1999/gpaarvai.html பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்