காலா
காலா | |
---|---|
இயக்கம் | பா. ரஞ்சித் |
தயாரிப்பு | தனுஷ் |
கதை | பா. ரஞ்சித் (உரையாடல்) பா. ம. மகிழ்நன் ஆதவன் தீட்சண்யா |
இசை | சந்தோஷ் நாராயணன் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | முரளி. ஜி |
படத்தொகுப்பு | ஏ. சேகர் பிரசாத் |
கலையகம் | வண்டர்பார் பிலிம்ஸ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 120 கோடி |
மொத்த வருவாய் | 211crores(Timesnow)in 22days |
காலா (Kaala) (English: Black)[1][2] என்பது 2018 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இது மும்பையில் உள்ள தாராவியில் வாழும் மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இது ஒரு அதிரடித் திரைப்படம் ஆகும்[1][3]. இதை எழுதி இயக்குபவர் பா. ரஞ்சித், தயாரிப்பாளர் தனுஷ்.[4] இந்தத் திரைப்படத்தில் ரசினிகாந்த் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.[5][6] இந்தத் திரைப்படத்தின் அறிவிப்பானது 2016 ஆம் ஆண்டில் வெளியானது. ஏப்ரல் 27, 2018 தமிழ்ப் புத்தாண்டு அன்று வெளியிடுவதாக இருந்தது. ஆனால் நடிகர் சங்கத்தின் போராட்டத்தின் காரணமாகவும்[7], காவிரி ஆற்று நீருக்கான போராட்டம் ஆகிய காரணங்களினாலும் இந்தத் திரைப்படம் சூன் 7, 2018 அன்று வெளியானது.[8][9]சவூதி அரேபியாவில் வெளியான முதல் இந்தியத் திரைப்படம் எனும் பெருமை பெற்றது.[10]
நடிகர்கள்
- ரஜினிகாந்த் கரிகாலனாக "காலா"
- ஹியூமா குரேஷி
- சமுத்திரக்கனி
- அஞ்சலி பாட்டில்
- நானா படேகர்[11]
- சுகன்யா[12]
- ஈஸ்வரி ராவ்[12]
- சாயாஜி சிண்டே[12]
- சம்பத் ராஜ் [12]
- ரவி கேளா[12]
- பங்கஜ் திரிபாதி[12]
- அரவிந்து ஆகாசு[12] சிவாஜி ராவ் கெய்வாட்டாக
- வத்திக்குச்சி திலீபன்[12]
- மித்துன் ராஜகுமார்[12] 'காலா'வின் பேரன் [13]
தயாரிப்பு
ரஜினிகாந்த் நடித்து பா. ரஞ்சித் இயக்கிய கபாலி (2016) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ், 2016 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தின் பிற்பகுதியில் தனது தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் இதே கூட்டணியைக் கொண்டு ஒரு புதிய படத்தைத் தயாரிப்பதாக அறிவித்தார்.[15][16] இப்படம் கபாலி படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் அறிவியல் புனைகதைத் திரைப்படமான 2.0 (2018) படப்பிடிப்புப் பணிகள் முடிந்தபின், 2017 ஆம் ஆண்டின் நடுவில் பணிகள் துவங்கும் என்று தனுஷ் அறிவித்தார். 2017 ஆம் ஆண்டு மே மாதம் படத்தின் தயாரிப்பாளருக்கு ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகனான, சுந்தர் ஷெக்கர் மிஸ்ரா ஒரு கடிதத்தை எழுதினார். அதில் இப்படத்தின் கதையில் தனது தந்தையை எதிர்மறையான முறையில் சித்தரிக்கக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.[17] இதற்கு பதிலளித்த பா. ரஞ்சித் இந்த படத்திற்கும் ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாற்றுக்கும் சம்மந்தமில்லை என்று மறுத்தார். மேலும் இந்த திரைப்படம் கற்பனை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டது என்பதையும் தெளிவுபடுத்தினார். அதே நேரத்தில் திருநெல்வேலியில் இருந்து, சிறுவனாக இருந்த ரஜினி தப்பி மும்பை தாராவி சேரிக்கு வந்து சேர்ந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்ட கதை எனவும் விளக்கினார்.[18] படத்தின் பெயரான காலா என்பதை, 2017 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிவித்து, தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் திரைப்படத்தின் முதல் சுவரோட்டியை வெளியிட்டனர்.[19]
படப்பிடிப்பு
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் 2017 மே 28 இல் துவங்கியது. இந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார்.[20][21][22][23][24]
பாடல்கள்
காலா | ||||
---|---|---|---|---|
பின்னணி இசை
| ||||
வெளியீடு | 9 மே 2018 | |||
இசைப் பாணி | பியூச்சர் பிலிம் இசை | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | வண்டர்பார் பிலிம்ஸ் | |||
இசைத் தயாரிப்பாளர் | சந்தோஷ் நாராயணன் தனுஷ் | |||
சந்தோஷ் நாராயணன் காலவரிசை | ||||
|
தமிழ் பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "செம்ம வெயிட்டு" | ஹரிஹரசுதன், சந்தோஷ் நாராயணன் | 04:57 | |||||||
2. | "தங்க சேலை" | சங்கர் மகாதேவன், பிரதீப் குமார் & அனந்து | 04:54 | |||||||
3. | "கற்றவை பற்றவை" | யோகி. பி, அருண்ராஜ காமராஜ் & ரோஷன் ஜம்ரோக் | 03:45 | |||||||
4. | "கண்ணம்மா" | பிரதீப் குமார் & தீ | 05:14 | |||||||
5. | "கண்ணம்மா (பக்க வாத்தியமில்லாமல்)" | அனந்து | ||||||||
6. | "உரிமயை மீட்போம்" | விஜய் பிரகாஷ் & அனந்து | ||||||||
7. | "போராடுவோம்" | டோபியாடெலிசிஸ் | 03:35 | |||||||
8. | "தெருவிளக்கு" | டோபியாடெலிசிஸ் & முத்தமிழ் | 02:51 | |||||||
9. | "நிக்கல் நிக்கல்" | டோபியாடெலிசிஸ், விவேக் & அருண்ராஜ காமராஜ் |
வழக்கு
காலா படத்தை தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் திரவியம் நாடார் மற்றும் நாடார் சமூகம் குறித்து தவறான கருத்துகள் இடம் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. படக்குழு அவற்றை நீக்கும் வரை காலா படத்தை வெளியிட தடை தேவை" என வழக்குத் தொடரப்பட்டுள்ளது.[25]
கருநாடகாவில் தடை
ரஜினி காவிரி பிரச்சினை சம்பந்தமாக கருத்துக்கள் கூறி வந்தார். அந்தக் கருத்துக்கள் கருநாடக மாநில மக்களுக்கு எதிராக இருந்ததால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை ‘காலா’ திரைப்படத்திற்கு தடை விதித்தது. இதனால் கருநாடக மாநிலத்தில் 'காலா' திரைப்படம் வெளியீடுவது கேள்விக்குறியாக உள்ளது.[26] பின் கருநாடகத்தில் திரைப்படத்தை கட்டாயமாக வெளியிட்டே ஆக வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது எனவும், வெளியாகும் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் சூலை 5, 2018 இல் நீதிமன்றம் ஆணைப் பிறப்பித்தது.[27]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 KAALA – British Board of Film Classification
- ↑ ]
- ↑ Kaala teaser: Rajinikanth's reunion with Pa Ranjith after Kabali poses a serious question — will the man ever age?
- ↑ "kaala | Latest tamil news about kaala | VikatanPedia" (in ta). http://www.vikatan.com/topics/kaala. பார்த்த நாள்: 2017-06-05.
- ↑ "KZaala | Latest Tamil news about Kaala" (in ta). http://www.vikatan.com/topics/kaala.
- ↑ "Never seen such a humble Superstar: Huma Qureshi" (in en). www.deccanchronicle.com/. 2017-08-16. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/150817/never-seen-such-a-humble-superstar-huma-qureshi.html.
- ↑ https://en.wikipedia.org/wiki/Virtual_Print_Fee
- ↑ "Is the release of ‘Kaala’ getting postponed? – Times of India". The Times of India. https://m.timesofindia.com/entertainment/tamil/movies/news/is-the-release-of-kaala-getting-postponed/articleshow/63555982.cms.
- ↑ "Lyca tweet hints at Kaala postponement" (in en-US). The Indian Express. 2018-03-30. http://indianexpress.com/article/entertainment/tamil/lyca-tweet-hints-at-kaala-postponement-5117461/.
- ↑ Gopalan, Sathya (2018-06-07), "சவுதியில் ரிலீஸான காலா! - அரபு நாட்டில் வெளியாகும் முதல் இந்தியப் படம்", Vikatan, retrieved 2018-06-09[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Rajinikanth’s Kaala Karikaalan will have Nana Patekar in a powerful role". The Indian Express. 29 May 2017 இம் மூலத்தில் இருந்து 29 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170529085445/http://indianexpress.com/article/entertainment/regional/rajinikanth-kaala-karikaalan-will-have-nana-patekar-in-a-powerful-role-4678949/. பார்த்த நாள்: 29 May 2017.
- ↑ 12.0 12.1 12.2 12.3 12.4 12.5 12.6 12.7 12.8 12.9 "40 days Mumbai schedule for Superstar's 'Kaala'". Sify. 29 May 2017 இம் மூலத்தில் இருந்து 29 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170529090332/http://www.sify.com/movies/40-days-mumbai-schedule-for-superstar-s-kaala-news-tamil-rf3j5oggfdegh.html. பார்த்த நாள்: 29 May 2017.
- ↑ "வாய் தவறி ரஜினியை 'டேய்'னு கூப்பிட்டுட்டேன்!- 'காலா'வின் மூத்த பேரன் மிதுன் கலகல பேட்டி". தி இந்து. 13 June 2018. http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article24151746.ece. பார்த்த நாள்: 20 June 2018.
- ↑ "Sakshi Agarwal’s next is Kaala". Deccan Chronicle. 1 June 2017 இம் மூலத்தில் இருந்து 4 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170604084756/http://www.deccanchronicle.com/entertainment/kollywood/010617/sakshi-agarwals-next-is-kaala.html. பார்த்த நாள்: 25 June 2017.
- ↑ "Rajinikanth-Pa.Ranjith combo under Dhanush's production soon". The Hindu. http://www.thehindu.com/features/cinema/Rajinikanth-Pa.Ranjith-combo-under-Dhanushs-production-soon/article15619095.ece. பார்த்த நாள்: 26 May 2017.
- ↑ "Rajinikanth Kaala shooting started at Mumbai pics". Telugu Celebs. http://www.telugucelebs.com/kaala-shooting-started-mumbai/. பார்த்த நாள்: 29 May 2017.
- ↑ "Rajini’s next film is not based on Haji Masthan". The Hindu. 15 May 2017. http://www.thehindu.com/news/cities/chennai/rajinis-next-film-is-not-based-on-haji-masthan/article18453321.ece. பார்த்த நாள்: 26 May 2017.
- ↑ "Rajinikanth film Kaala Karikaalan poster: Dhanush reveals first look of Thalaivar’s gangster drama, see photos". The Indian Express இம் மூலத்தில் இருந்து 25 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170525124637/http://indianexpress.com/article/entertainment/regional/rajinikanth-next-titled-kaala-karikaalan-dhanush-reveals-new-posters-see-photos-4672750/. பார்த்த நாள்: 26 May 2017.
- ↑ "Superstar Rajinikanth's next titled 'Kaala'". Sify இம் மூலத்தில் இருந்து 25 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170525152633/http://www.sify.com/movies/superstar-rajinikanth-s-next-titled-kaala-imagegallery-kollywood-rfzlxPicbiiej.html. பார்த்த நாள்: 26 May 2017.
- ↑ "Rajinikanth leaves for Mumbai to shoot for Kaala" (in en-US). The Indian Express. 28 May 2017 இம் மூலத்தில் இருந்து 28 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170528053537/http://indianexpress.com/article/entertainment/regional/rajinikanth-leaves-for-mumbai-to-shoot-for-kaala-4677319/.
- ↑ "Rajinikanth leaves for Mumbai to shoot for 'Kaala'" (in en-US). Daily News and Analysis. 27 May 2017 இம் மூலத்தில் இருந்து 27 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170527153833/http://www.dnaindia.com/entertainment/report-rajinikanth-leaves-for-mumbai-to-shoot-for-kaala-2453080. பார்த்த நாள்: 28 May 2017.
- ↑ "Thalaivar 164: Rajinikanth heads to Mumbai for his next with Pa Ranjith : Celebrities, News - India Today". India Today இம் மூலத்தில் இருந்து 25 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170525161006/http://indiatoday.intoday.in/story/thalaivar-164-rajinikanth-pa-ranjith-huma-qureshi-dhanush/1/961539.html. பார்த்த நாள்: 26 May 2017.
- ↑ "Amid talk on his political career, Rajinikanth arrives in Mumbai to shoot for Kaala" (in en). Deccan Chronicle. 28 May 2017 இம் மூலத்தில் இருந்து 28 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170528071233/http://www.deccanchronicle.com/entertainment/kollywood/280517/amid-talk-of-his-political-career-rajinikanth-arrives-in-mumbai-to-shoot-for-kaala.html.
- ↑ "Rajinikanth's 'Kaala Karikaalan' starts rolling". The New Indian Express இம் மூலத்தில் இருந்து 28 May 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170528080628/http://www.newindianexpress.com/entertainment/tamil/2017/may/28/rajinikanths-kaala-karikaalan-starts-rolling-1609991.html.
- ↑ "நாடார் சமூகம் குறித்து தவறான கருத்துக்கள்.. காலா ரிலீசை தடை செய்யக் கோரி ஹைகோர்ட்டில் மனு!". https://tamil.oneindia.com/news/tamilnadu/petition-against-kaala-release-321647.html. ஒன் இந்தியா தமிழ் (05 சூன் 2018)
- ↑ "காலா’ தடை : கொதித்தெழுந்த விஷால்". http://www.puthiyathalaimurai.com/news/cinema/46084-vishal-condemned-about-ban-kaala-in-karnataka.html. புதிய தலைமுறை (30 மே 2018)
- ↑ "காலா -கருநாடகம்". https://www.vikatan.com/news/tamilnadu/126852-karnataka-court-judgement-in-kala-release-issue.html.
வெளியிணைப்புகள்
- Album articles with non-standard infoboxes
- Articles with hAudio microformats
- Album infoboxes lacking a cover
- Pages using infobox album with unknown parameters
- IMDb title ID not in Wikidata
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- பா. இரஞ்சித் இயக்கிய திரைப்படங்கள்
- ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்
- 2018 தமிழ்த் திரைப்படங்கள்
- சந்தோஷ் நாராயணன் இசையமைத்த திரைப்படங்கள்
- சமுத்திரக்கனி நடித்த திரைப்படங்கள்