காரியாபட்டி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

காரியாபட்டி (ஆங்கிலம்:Kariapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டத்தில் அமைந்த முதல்நிலைப் பேரூராட்சி ஆகும்.

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 30 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 24 கிமீ தொலைவிலும், அருப்புக்கோட்டையிலிருந்து 20 கிமீ தொலைவிலும், கல்குறிச்சியிலிருந்து 8 கிமீ தொலைவிலும் காரியாபட்டி அமைந்துள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, காரியாபட்டி பேரூராட்சி 4,881 வீடுகளும், 18,191 மக்கள்தொகையும் கொண்டது.[1] இது 9.20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 91 தெருக்களும் கொண்ட காரியாபட்டி பேரூராட்சி, திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,194 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். காரியாபட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காரியாப்பட்டி மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இங்குள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள்

இங்குள்ள கோவில்கள் மாந்தோப்பு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி, ஆவியூர் பெருமாள் கோவில், ஆவியூர் கருப்பசாமி கோவில், ஆவியூர் பெரிய கருப்பசாமி கோவில், ஆவியூர் ஶ்ரீமாணிக்கவாசக அய்யணார் கோவில், ஸ்ரீவாலகுருநாதன் ஆலயம், மாந்தோப்பு மாரியம்மன்ஆலயம், மாந்தோப்பு பெருமாள் கோவில், மாந்தோப்பு காருப்புசாமி கோவில், முக்கு ரோடு முத்துமாரியம்மன் கோவில், NGO மாரியம்மன் ஆலயம், வைத்தீஸ்வரன் கோவில், சின்னகாரியாபட்டி ஐயப்பன் ஆலயம்,அ.நெடுங்குளம் ஸ்ரீ மாடசாமி கோவில், செவல்பட்டி பெருமாள் கோவில்கள் உள்ளது. கிருஸ்தவர்களுக்கு அமல அன்னை ஆலயமும், முஸ்லிம்களுக்கு சின்ன காரியாபட்டியில் முஹைதீன் ஆண்டவர் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மற்றும் பாண்டியன் நகர் நூர் பள்ளிவாசல் ஆகிய இரண்டு பள்ளிவாசல்கள் உள்ளன.

பிரசித்தி பெற்ற விழாக்கள்

வருடாவருடம் பங்குனி மாதம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழாவும் வைகாசி மாதம் நடைபெறும் முக்கு ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவும் மிகவும் புகழ்பெற்றது. சுமார் இரண்டு வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும். மாந்தோப்பு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி ஸ்ரீவாலகுருநாதன் ஆலயம் வருடாவருடம் வைகாசி திருவிழா மிகவும் புகழ்பெற்றது சுமார் ஒரு வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும். ஆவியூர் பெருமாள் கோவில் மாசி தீபத்திருவிழா, ஆவியூர் செல்லாயி அம்மன் ஆடி முளைப்பாரி மற்றும் பூக்குழி திருவிழா. ஆவியூர் பெரிய காருப்பசாமி கோவில் மாசி கழரி மற்றும் ஜல்லிக்கட்டு திருவிழா, ஆவியூர் சின்னகருப்பசாமி பங்குனி கழரி மற்றும் ஜல்லிக்கட்டு திருவிழா, ஆவியூர் ஶ்ரீமாணிக்கவாசக அய்யணார் கோவில் பங்குனி திருவிழா மற்றும் வடமாடு ஜல்லிக்கட்டு. ஆவியூர் லிட்டில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (Little star sports club) நடத்தும் தைபொங்கள் விளையாட்டு விழா

காரியாபட்டி சந்தை

காரியாபட்டியில் வாராவாரம் வியாழக்கிழமை நடைபெறும் சந்தை சுற்றுவட்டாரத்தில் பிரபலம் ஆகும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் சந்தையில் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர் மற்றும் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை சந்தைப்பேட்டையில் கோழி சந்தை நடைபெறும்.

பள்ளிகள்

  • ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி
  • ஸ்ரீசபரி நேசனல் பள்ளி.(சிபிஎஸ்இ).
  • அரசு மகளிர் மேல்நிலை பள்ளி
  • அரசு மேல்நிலை பள்ளி
  • செயிண்ட் மேரிஸ் மெட்ரிகுலேசன் பள்ளி
  • கற்றலின் இனிமை பள்ளி
  • சி.இ.ஓ.ஏ மெட்ரிக் பள்ளி
  • சர்வ சேவா மெட்ரிக் பள்ளி
  • ஸ்ரீ சபரி ப்ளே & நர்சரி பள்ளி
  • அமலா உயர்நிலைப்பள்ளி
  • மீனாட்சி சுட்டி ஸ்கூல்
  • மாந்தோப்பு உயர்நிலை பள்ளி
  • சுந்தரம் மெட்ரிக் பள்ளி ஆவியூர்
  • ஆவியூர் அரசு மேல்நிலை பள்ளி
  • புரோபல் மெட்ரிக் பள்ளி ஆவியூர்

கல்லூரிகள்

  • சேது பொறியியல் கல்லூரி
  • நாசியா கலை அறிவியல் கல்லூரி
  • போகர் பாலிடெக்னிக் கல்லூரி
  • ராமு சீதா பாலிடெக்னிக் கல்லூரி

திருமண மண்டபங்கள்

  1. அமலா சுப்பையா நாடார் திருமண மகால்
  2. SVS திருமண மகால்
  3. MJ மஹால்
  4. பேரூராட்சி திருமண மகால்
  5. செவல்பட்டி சமுதாய மகால்
  6. மாந்தோப்பு சமுதாய மகால்
  7. கட்டுக்குத்தகைக் கரிசல்குளம் சமுதாய மகால்(7 வது வார்டு)
  8. கட்டுக்குத்தகைக் கரிசல்குளம் சமுதாய மகால்(8 வது வார்டு)

அருகில் உள்ள நகரங்கள்

மதுரை 30 கிமீ, அருப்புகோட்டை 20 கிமீ, கல்குறிச்சி 8 கிமீ,விருதுநகர் 24 கிமீ, திருமங்கலம் 30 கிமீ, ஆவியூர் 7 கிமீ.

ஆதாரங்கள்

  1. Kariapatti Population Census 2011
  2. காரியாபட்டி பேரூராட்சியின் இணையதளம்
  3. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)CS1 maint: unfit URL (link)

http://www.census2011.co.in/data/subdistrict/5851-kariapatti-virudhunagar-tamil-nadu.html

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=காரியாபட்டி&oldid=117615" இருந்து மீள்விக்கப்பட்டது