கண் கண்ட தெய்வம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கண் கண்ட தெய்வம்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
கதைகே. எஸ். கோபாலகிருஷ்ணன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். வி. ரங்கராவ்
பத்மினி
எஸ். வி. சுப்பையா
நாகேஷ்
ஒளிப்பதிவுஆர். சம்பத்
படத்தொகுப்புஆர். தேவன்
கலையகம்கமால் பிரதர்ஸ்
விநியோகம்ஜெய் மாருதி கம்பைன்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 15, 1967 (1967-09-15)
ஓட்டம்174 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண் கண்ட தெய்வம் (Kan Kanda Deivam) 1967 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பைய்யா, பத்மினி, நாகேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர்.[1][2][3] இத்திரைப்படம் 15 செப்டம்பர் 1967 இல் வெளியிடப்பட்டு வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இப்படம் தெலுங்கில் பாந்தவியாலு (1968) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

நடிகர்கள்

தயாரிப்பு

கமல் பிரதர்ஸ் தயாரிப்பில்[4] கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.சம்பத்தும், படத்தொகுப்பாளராக ஆர்.தேவன் இருந்தனர். படத்தின் சில பாடல் காட்சிகள் விவசாயப் பின்னணியில் படமாக்கப்பட்டது. படத்தின் நீளம் 4845 மீட்டர் இருந்தது.

இசையமைப்பு

உடுமலை நாராயண கவி மற்றும் வாலியின் வரிகளுக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார்.[1]

பாடல் வரிகள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "கண்ணுக்குட்டி கண்ணுக்குட்டி"  பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன்  
2. "வாழ்க்கை என்பது ஜாலி"  ஏ. எல். ராகவன், எஸ். சி. கிருஷ்ணன், பொன்னுசாமி  
3. "தென்ன மரத்திலே"  டி. எம். சௌந்தரராஜன்  
4. "ஆண்டவனே சாமி"  டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா மற்றும் குழுவினர்  

வெளியீடும் வரவேற்பும்

கண் கண்ட தெய்வம் திரைப்படம் 1967 செப்டம்பர் 15 அன்று வெளியிடப்பட்டது. ஜெய் மாருதி கம்பைன்ஸ் மூலம் விநியோகிக்கப்பட்டது.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கண்_கண்ட_தெய்வம்&oldid=31711" இருந்து மீள்விக்கப்பட்டது