ஏமாலி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஏமாலி
இயக்கம்வி. இசட். துரை
தயாரிப்புஎம். இலதா
கதைவி. இசட். துரை
ஜெயமோகன்
இசைசாம் டி. இராஜ்
நடிப்புசமுத்திரக்கனி
சாம் ஜோன்ஸ்
அதுல்யா ரவி
ரோசிணி பிரகாஷ்
ஒளிப்பதிவுஎம். ரித்திஷ் கண்ணா
ஐ. ஜெ. பிரகாஷ்
படத்தொகுப்புஆர். சுதர்சன்
வெளியீடு2 பிப்ரவரி 2018
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஏமாலி (Yemaali) வி. இசட். துரை இயக்கத்தில், எம். இலதா தயாரிப்பில், சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், அதுல்யாரவி, ரோசிணி பிரகாஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படம் சாம் டி. இராஜ்ஜின் இசையில், எம். ரித்திஷ் கண்ணா, ஐ. ஜெ. பிரகாஷ் ஆகியோரின் ஒளிப்பதிவில், ஆர். சுதர்சன் படத்தொகுப்பில் 2017 ஏப்பிரலில் உருவாக்கப்பணிகள் தொடங்கப்பட்ட இத்திரைப்படம் 2018 பிப்ரவரியில் திரையரங்குகளில் வெளியானது.[1]

நடிப்பு

கதை

இன்றைய தலைமுறையின் வாழ்க்கையையும் அதையொட்டிய கதையையும் இத்திரைப்படத்தில் அலசிருப்பதாக இத்திரைப்படத்தின் இயக்குநர் துரை தெரிவித்துள்ளார். இத்திரைப்படத்தின் படத்துளியை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டார். ஜெயமோகன் உரையாடல் எழுதும் இந்தப்படத்தின் தலைப்பில் பிழை இருப்பதாகத் தோன்றுகிறதாகவும் அதற்கான விடை இப்படத்தில் இருக்கும் என்றும் இயக்குநர் துரை விளக்கமளித்துள்ளார்.[2]

இசை

இப்படத்தில் ஐந்து பாடல்களுக்கான இசையையும், பின்னணி இசையையும் சாம் டி. இராஜ் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் பாடல்களை மோகனராஜ், வி. இசட். துரை, அருண் பாரதி ஆகியோர் எழுதியுள்ளனர்.

திரைப்படப்பணிகள்

2017 மார்ச் மாதத்தில் இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்டது, இயக்குநர் வி. எஸ். துரை தனது அடுத்த படத்தில் முதன்மையான கதைப்பாத்திரத்தில் சமுத்திரகனி நடிப்பார் என்று உறுதிசெய்தார்.[3] சமுத்திரகனி முதன்முறையாக முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும், நான்கு மாறுபட்ட தோற்றங்களில் நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் இயக்குநர் துரை தெரிவித்தார். இப்திரைப்படத்திற்கு ஜெயமோகன் உரையாடல்களை எழுத , ஒளிப்பதிவாளர்களான ரித்தீஷ் மற்றும் பிரகாஷ் ஆகிய இருவரும், அறிமுக இசை இசையமைப்பாளர் சாம் டி ஆகியோரும் இத்திரைப்படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[4] இப்படத்திற்கு நடிகர் சாம் ஜோன்ஸ், நடிகை அத்துலியா ரவி ஆகியோர் படத்தின் இன்னபிற வேடங்களில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு இப்படத்தின் உருவாக்கம் 2017 ஏப்ரலின் தொடக்கத்தில் தொடங்கியது.[5][6] இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ரிது என்னும் அந்தக் கதைப்பாத்திரம் ஒரு நவீன, சுயாதீனமான ஒரு பெண்மணி என்று அதுல்யா குறிப்பிட்டுள்ளார். அந்த பாத்திரத்திற்காக, அவர் தன்னுடைய தலைமுடி, நிறத்தில் மாற்றம் செய்துகொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் படத்துளி 2017 நவம்பரில் வெளியிடப்பட்டது. திரைத்துளியில் இடம்பெற்ற காட்சிகளில் சிகரெட் புகைத்தல், ஆடை தொடர்பானக் காட்சிகள் வெளியிடப்பட்டது. பரபரப்பை ஏற்படுத்திய அக்காட்சிகள் குறித்து அதுல்யா தனது ரசிகர்களிடம் அத்திரைக்காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெறாது என்று கூறினார்.[7][8] இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ரிது என்னும் அந்தக் கதைப்பாத்திரம் ஒரு நவீன, சுயாதீனமான ஒரு பெண்மணி என்று அதுல்யா குறிப்பிட்டுள்ளார். அந்த பாத்திரத்திற்காக, அவர் தன்னுடைய தலைமுடி, நிறத்தில் மாற்றம் செய்துகொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.[9]

சான்றுகள்

  1. "IndiaGlitz - Mugavari Thotti jaya director VZ Dorai new film Amalee with Samuthirakani launched with a pooja - Tamil Movie News". indiaglitz.com. http://www.indiaglitz.com/mugavari-thotti-jaya-director-vz-dorai-new-film-amalee-with-samuthirakani-launched-with-a-pooja-tamil-news-183163.html. பார்த்த நாள்: 19-04-2017. 
  2. Ma.Pandiarajan (3 November 2017). "சமுத்திரக்கனி நடித்திருக்கும் ’ஏமாலி’ படத்தின் டீசர்..!". https://www.vikatan.com/news/cinema/106752-yemali-teaser-released.html. 
  3. "IndiaGlitz - Samuthirakani next new movie Yemali directed by V Z Durai Mughavaree Thotti Jaya - Tamil Movie News". indiaglitz.com. http://www.indiaglitz.com/samuthirakani-next-new-movie-yemali-directed-by-v-z-durai-mughavaree-thotti-jaya-tamil-news-181355.html. பார்த்த நாள்: 19-04-2017. 
  4. "Kani will be seen in a live-in relationship: VZ Durai". deccanchronicle.com. 17 March 2017. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/170317/kani-will-be-seen-in-a-live-in-relationship-vz-durai.html. பார்த்த நாள்: 19 April 2017. 
  5. "Athulya Ravi to act in VZ Durai - Samuthirakani's Yemaali". behindwoods.com. 5-04-2017. http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/athulya-ravi-to-act-in-vz-durai-samuthirakanis-yemaali.html. பார்த்த நாள்: 19 April 2017. 
  6. "Athulya Ravi in VZ Durai’s next". deccanchronicle.com. 7 April 2017. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/070417/athulya-ravi-in-vz-durais-next.html. பார்த்த நாள்: 19 April 2017. 
  7. "Athulya Ravi apologises to her fans". 10 November 2017. https://www.deccanchronicle.com/entertainment/kollywood/101117/athulya-ravi-apologises-to-her-fans.html. 
  8. "Athulya apologizes for her glam appearance in 'Yemali'". http://www.sify.com/movies/athulya-apologizes-for-her-glam-appearance-in-yemali-news-tamil-rliqeJehbjddi.html. 
  9. "My character is opposite to what I am in real life: Athulya - Times of India". https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/my-character-is-opposite-to-what-i-am-in-real-life-athulya/articleshow/61807046.cms. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஏமாலி&oldid=31474" இருந்து மீள்விக்கப்பட்டது